வியாழன், 12 ஜூலை, 2012
இலங்கையில் மின்சார ரயில் சேவை விரைவில்
இலங்கையில் முதலாவது மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ளும் திட்டம் இறுதிவடிவத்திற்கு வந்துள்ளதாக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக வியாங்கொடையிலிருந்து களுத்துறை வரைக்கும் மின்சார ரயில் சேவையினை ஆரம்பித்து இயக்கவுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்கள திட்டப் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தள்ளார். இதற்காக இரண்டு மின்சார உப நிலையங்களை றாகம மற்றும் பாணந்துறையில் நிர்மாணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையுடன் சொகுசு மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக வியாங்கொடையிலிருந்து களுத்துறை வரைக்கும் மின்சார ரயில் சேவையினை ஆரம்பித்து இயக்கவுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்கள திட்டப் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தள்ளார். இதற்காக இரண்டு மின்சார உப நிலையங்களை றாகம மற்றும் பாணந்துறையில் நிர்மாணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையுடன் சொகுசு மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புனரமைக்கப்பட்ட அஞ்சுதன் குளம் பாலம்
யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் அயராத முயற்சி காரணமாக நெல்சிப் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட அஞ்சுதன் குளம் பாலம் கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நேற்றையதினம் (11) நடைபெற்ற சிறிய வைபவமொன்றில் நீண்ட காலமாக அப்பகுதி மக்களின் பாவனைக்கு உதவாதிருந்த அஞ்சுதன் குளப் பாலம் முதல்வரின் முயற்சியால் திறந்து வைக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
நேற்றையதினம் (11) நடைபெற்ற சிறிய வைபவமொன்றில் நீண்ட காலமாக அப்பகுதி மக்களின் பாவனைக்கு உதவாதிருந்த அஞ்சுதன் குளப் பாலம் முதல்வரின் முயற்சியால் திறந்து வைக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
யாழ்.மாநகர சபையின் 2012 ஆம் ஆண்டுக்கான 6ஆவது நிதிக்குழுக் கூட்டம்
யாழ்.மாநகர சபையின் 2012 ஆம் ஆண்டுக்கான 6ஆவது நிதிக்குழுக் கூட்டம் யாழ்.மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (11) இடம்பெற்ற இக்கூட்டத்தில் நிதிக்குழு உறுப்பினர்களும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (11) இடம்பெற்ற இக்கூட்டத்தில் நிதிக்குழு உறுப்பினர்களும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
யாழ். ஆரியகுளம் சந்தியில் வீதியால் சென்ற பெண் மீது சேஷ்டை! இளைஞன் மீது தாக்குதல்
யாழ். ஆரியகுளம் பகுதியில்
தனியார் கல்லூரி மாணவி ஒருவரின் கையைப் பிடித்து இழுத்த இளைஞன் ஒருவரை யாழ்.பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவி கையைப் பிடித்து இழுத்ததை வீதிப் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவதானித்துள்ளனர்.
கிழக்கு தேர்தல் கூட்டமைப்பு தனித்து போட்டி
இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்தார்.அந்த மாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணந்து போட்டியிடும் நோக்கில் கூட்டமைப்பு அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் கிடைக்காத காரணத்தால், இன்றுவரை தனித்து போட்டியிடுவது என்கிற முடிவையே தாங்கள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது: சீனா
சிறிலங்காவின் உள்வி உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியான்கோ தெரிவித்துள்ளார்.நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையை பாதுகாக்கும் முனைப்புக்களுக்கு சீனா தன்னாலான உதவிகளை சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
வேறு பெயரில் திருமணம் செய்துகொண்ட தேரர் சிக்கினார்
வேறு பெயரில் திருமணம் செய்துகொண்டமை, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டமை, போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வெல்லவ ஹிரிபிட்டியே தர்மசந்திர பிரிவெனாவிலுள்ள தேரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருமணத்துக்கு மறுத்த காதலனை போராடி மணந்த கல்லூரி மாணவி
குமரி மாவட்டம் மேல் புறத்தைச் சேர்ந்தவர் அனிதா (வயது 21). கல்லூரி மாணவி. இவரும், அருமனை அருகே உள்ள முக்கூட்டுக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான சாஜனும் (25) காதலித்தனர். திருமண ஆசை காட்டி அனிதாவுடன் ஜாலியாக இருந்த சாஜன் அவரை திருமணம் செய்ய மறுத்தார். இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வலியுறுத்தி சாஜன் வீட்டு முன்பு அனிதா கடந்த 7-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
காந்தி கடிதங்கள் சர்ச்சையில்!
இந்தியாவின் தேசப்பிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது, அவருக்கும் ஜெர்மன் யூதரான, ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிடக்கலைஞருக்கும் இடையே இருந்த நட்பில், பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக , அமெரிக்க எழுத்தாளர், ஜோசப் லெலிவெல்ட் , கடந்த ஆண்டு எழுதிய, “ Great Soul- Mahatma Gandhi and His Struggle with India” என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
செல்போன் பேசினேனா? நானா? அண்ணா பாலத்தில் பஸ் கவிழ்த்த ட்ரைவர்
சில வாரங்களுக்கு முன்னதாக பிராட்வேயில் இருந்து வடபழனி சென்ற 17எம் மாநகர பஸ் அண்ணா மேம்பாலத்தில் போய்க் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
டிரைவர் செல்போனில் பேசியபடி பஸ்சை ஓட்டிச் சென்றதுதான் விபத்து ஏற்பட காரணம் என்பது பயணிகளில் சிலர் குற்றம் சாட்டினர். குறுகிய வளைவில் வேகமாக ஓட்டிச் சென்றதுதான் காரணம் என்று வேறு சிலர் குறை கூறினர்.
மாணவனுக்கு பிரம்படி
சேலத்தில் ஹோலி கிராஸ் என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 2-வரையிலான பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பள்ளிக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஒளவையாரின் ஆன்மீக சிந்தனை
ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது. ஒளவையார் கூறிய ஆன்மீக சிந்தனைகள் வருமாறு…
ஞாயிறு, 8 ஜூலை, 2012
மன்னாரிலும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம்
எங்கள் இனத்தை அடிமை இனமாக அரசு பார்ப்பதால் தான், காணி அபகரிப்பு, மீனவர் மீதான பாஸ் கெடுபிடி, தமிழ் அரசியல் கைதிகள் மீதான கொலைக் கொடூரம் என்பவற்றைத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்தும் எங்கள் இனத்தை அடக்கி ஆள ஒரு போதும் இடமளியோம். எங்களது இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் இன்றுடன் முடிவடையப் போவதில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் எங்கள் இனத்தை மீட்டெடுப்போம் என மன்னாரில் நேற்று இடம்பெற்ற சத்தியாக்கிரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
திங்கள், 2 ஜூலை, 2012
சனி, 30 ஜூன், 2012
சுன்னக் செய்ய ஜெர்மனி நீதிமன்றம் தடை! முஸ்லிம், யூதர்கள் எதிர்ப்பு
சுன்னத்து எனப்படும் சிறுவர்களின் ஆணுறுப்பின் நுணித்தோலை அகற்றுவதற்கு ஜெர்மனி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. "தமது உடலை உருக்குலைக்காமல் வைத்திருக்கும் உரிமை குழந்தைகளுக்கு இருப்பதோடு அதனை பெற்றோர்கள் குறைத்துமதிப்பிடுகின்றனர்" என்று மேற்கு ஜெர்மனியின் கொலக்னெ நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
புதன், 27 ஜூன், 2012
அவனுடைய காலை இழுத்து ஜீப்பில் ஏற்றவும் – பொலிஸ் அடாவடி
நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நுகேகொட வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க, கடந்த 21 ஆம் திகதி தலவத்துகொட – கோகந்தர வீதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸிக்கு சொந்தமான 29 ஏக்கர் காணியில் புகுந்து அதில் இருந்த கட்டடத்தை இடித்து அகற்றியுள்ளனர்.குறித்த கட்டடம் சட்டவிரோதமானதென தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொலிஸாரை அனுப்பி நகர அபிவிருத்தி அதிகார சபை இந்த அடாவடியை மேற்கொண்டுள்ளது.பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமன் எதிரிசிங்க கட்டடத்தை இடிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது தவறு தேசிய பிக்குகள் முன்னணி
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










.jpg)
.jpg)




.jpg)







































