//]]>3

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு பாராளுமன்றக்குளு மூலமே



இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு பாராளுமன்றக்குளு மூலமே பேசித்தீர்க்க வேண்டும் எனவும் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள நம்பிக்கையுடன் எமது பிரச்சினையைத்தீர்க்க நாம்தான் முயற்சிக்க வேண்டும் எனவும்  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் டக்கிழஸ் தேவானந்தா  தெரிவித்தார் 

தமிழ் தேசியக்கூட்டமைப்புபோ அரசு தங்களுடன் பேசவரவில்லை என்கிறது ஆனால் அரசு பேச அழைததால் அரசின்மேல் நம்பிக்கை இல்லை என்தெரிவிதிது விலகிச்செல்வார்கள் எனவும் குறிப்பிட்டார் 

பாராளுமன்ற தெரிவுக்குளு என்பது ஜெனீவாமானாட்டுக்கு 5 மாதத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு தற்போது 6 மாதங்கள் முடிந்துள்ளதாகவும் இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்திருந்தால் சிறப்பாக செயற்பாடுகள் அமைந்திருக்கும் என்றார் 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குளுவின் பரிந்துரையை மறுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போது அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர் உண்மையில் ஈ.பி.டி.பி ஆகிய நாம் எதனை நீண்டகாலமாக நடைமுறைப்படுத்த கூறிவருகிறோமோ அதனையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குளுவின் அற்க்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குளுவின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அதேவேளை ஈ.பி.டி.பி பற்றி தவறான குற்றச்சாட்டினையும் நாம்முற்றாக நிராகரிப்பதபகவும் அது தொடர்பில் தாம் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டார்

தமிழ்ச் சிறுமியான சுட்ட மூவருக்கும் ஆயுள்தண்டனை



பிரிட்டன், லண்டனில் தமிழ்ச் சிறுமி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் நேற்று ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொள்ளையடிப்பதற்காக புகுந்த மூவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துசா கமலேஸ்வரன் என்ற சிறுமி நெஞ்சில் படுகாயமடைந்தார்.
இதனால் அவர் உடல் செயலிழந்த நிலையில் தற்போது சக்கர நாற்காலியில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுமி சுடப்பட்ட காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராவில் பதிவானது.
இதையடுத்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்த பிரித்தானியக் காவல்துறையினர், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.
குற்றவாளிகளில் ஒருவர் குறைந்தது 17 ஆண்டுகளும், ஏனைய இருவர் குறைந்தது 14 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதனை சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள மூவரும் 19, 20, 21 வயதுகளையுடைய கறுப்பினத்தவர்களாவர்.
இந்தச் சம்பவத்தின் போது வர்த்தக நிலைய உரிமையாளரான றொசான் செல்வக்குமாரின் தலையிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
அவரது தலையில் இருந்து அந்தக் குண்டு இன்னமும் அகற்ற முடியாதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்புக் குறித்து சிறுமி துசாவின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையில் பிரிவினை



ஈழத்தமிழருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையில் பிரிவினையை தூண்டிவிட அரசாங்கத்தினால் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முதற்கட்ட நடவடிக்கையினை இன்று யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்புடன் ஆரம்பித்துள்ளார்.

ஸ்ரீதர் தியேட்டரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் மேற்குறித்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்திய அரசாங்கத்திற்குப் பல தடவைகள் மீனவர் பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் யாழ்.வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடமும், மகஜர் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் அவற்றுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்திய அரசாங்கத்திற்கு தந்தியொன்று நான் அனுப்பவுள்ளேன். அதனையும் அரசாங்கம் நிராகரித்தால் இராமேஸ்வரத்தை நோக்கி படையெடுப்பேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சகோதரப் படுகொலைகளை நிறுத்துமாறு தான் பிரபாகரனிடம் கேட்டதாகவும் ஆனால் அவர் தன்னை துரோகிகள் பட்டியலில் முதல்வரிசையில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்ததுடன், நான் உயிருடன் இருக்கையில் தான் இறப்பேன் என பிரபாகரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். எனவும் தெரிவித்தார்.

இதற்கு புலிகளின் முன்னாள் ஊடக பிரிவு பொறுப்பாளர் தயா மாஸ்டர் புன்னகைத்தபடி ஆமாம் என தலையசைத்தார். தொடர்ந்து புலிகள் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்கவில்லை என டக்ளஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம்



யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் ஒரு குற்றத்திற்காக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வருபவர்கள் சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை வைத்து தப்பித்து அல்லது பிணையில் வெளியில் வருபவர்கள் ஏனைய இடங்களுக்கு செல்வதாகவும் அவ்வாறு செய்பவர்களாலேயே அதிகம்மாக குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இன்று (20.04.2012)  ஈ.பி.டீ.பி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தெரிவித்தார் 

மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் நடைபெறும் குற்றச்செயல்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் குறைவாகவே நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட அவர் இங்கு பொலிஸ் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் கொழும்பைப்போண்று அரசியல்தலையீடுகள் இங்கு இல்லை என்றும் இதனால் தங்களினால் இயல்பாக செயல்ப்படக்கூடயதாக உள்ளது என்றார்

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கத் தயார்- Eut தளபாட நிலைய தொழிலதிபர்



போரினால் பாதிக்கப்பட்டவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு கல்வித் தகைமையை அடிப்படையில் தொழில்வாய்ப்புகள் மற்றும் தொழில் பயிற்சிகளைக் வழங்கத்; தயாராக உள்ளதாக Eut தளபாட உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய தொழிலதிபர் வே.ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் அனைத்து பிரதேச நுகர்வோரையும் இணைக்கக்கூடிய மத்திய பகுதியான சுன்னாகத்தில் இந்த தளபாட உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தில,ஆண்கள் பெண்கள் என இருவரையும் இணைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டு ,பயிற்சிக் காலங்களில் 5000ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது. பின்னர் அவர்களின் வேலைகளுக்கு ஏற்றவாறு 10,000 தொடக்கம் 25 000ரூபா வரை சம்பளம் வழங்கப்படுவதுடன், ஓய்வுதியத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் எவரும் நிலைத்து வேலை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை, படித்தவர்கள் அனைவரும் அரசாங்க வேலையை விரும்புகின்றனரே தவிர இப்படியான வேலைகளைச் செய்ய முன்வருபவர்கள் குறைவாகவே உள்ளனர்..

ஆரம்பத்தில் இங்கு மரத்திலாலான மூலப் பொருட்களை மட்டுமே கொண்டு உற்பத்திசெய்யப்பட்ட தளபாடங்கள், தற்போது மலோசியாவிலிருந்து பல வகையான பிளாஸ்ரிக், இரும்பு, அலுமினியம், போன்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தளபாடங்களை உற்பத்தி செய்யப்படுவதாகவும், 15 வருடங்களை கடந்து 20ற்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட நிரந்தர ஊழியர்களுடன் சிறப்பாக செயற்படும் இந்த Eut (ஐக்கிய நம்பிக்கை உபகரணம்) நிறுனத்தின் வளர்ச்சிக்கு தான் வடிவமைப்பு மீது கொண்ட ஆர்வமே காரணம் எனவும் நிறுவனத்தின் தொழிலதிபர் வே.ஸ்ரீஸ்கந்தராஜா குறிப்பிட்டார்.

இங்கு உற்பத்திசெய்யப்படும் தளபாடங்கள் தற்போது வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Eut  தளபாடங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுவதால் அவர்களின் தேவையை புர்த்தி செய்வதே எமது கடமையாக உள்ளபோதும், மூலதனப்பற்றாக்குறை, இடவசதியின்மை, ஊழியர் பற்றாக்குறை என்பன எமக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. அத்துடன், வங்கியினால் வழங்கப்படும் கடன்கள் வியாபாரத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சிகளைக் கொடுப்பதற்குத் தயாராக உள்ளபோதும் எவரும் வேலைசெய்ய முன்வருகிறார்கள் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1000 படகுகளில் இந்தியா செல்ல அமைச்சர் டக்ளஸ் தீர்மானம்




வடமராட்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கடற்பகுதிகளிலிருந்து  1,000 படகுகளில் 5,000 மீனவர்களுடன் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 


இன்று (20.04.2012) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஈ.பி.டி.பி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இளுவைப்படகு மூலம் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கை ஈடுபடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக   படகு மூலம் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக 

இந்திய மீனவர்கள் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதும் அவர்கள் இங்கு உள்ள கடல்வளங்களை அழிப்பதாகவும் வடமாகாண மீனவர்கள் தனக்கு எப்பொழுதும் முறைப்பாடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய மீனவர்கள் பல தடவைகள்  வடமாகாண கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் கடற்பரப்பில்  மோதலில் ஈடுபட்டதாகவும் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இது தொடர்பாக முதலில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு தந்தி அனுப்புவதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னரே இராமேஸ்வரத்திற்கு படகுகளில் செல்லஉள்ளதாகவும் குறிப்பிட்டார்