சனி, 21 ஏப்ரல், 2012
இலகுவான வீடியோ ஓடியோ கன்வெர்ட்
நாம் பொதுவாக ஓடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வதற்கு சில மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவோம்.
ஆனால் இதனை VLC Media Player லிலேயே மேற்கொள்ளலாம்.
VLC Media Player-யை ஓபன் செய்து கொண்டு அதில் Mediaவில் Convert->Save என்பதை கிளிக் செய்யவும். அதில் File என்ற டேப்பில் உங்கள் Audio/Video File ஐ open செய்து Audio/Video வை தெரிவு செய்து Convert/Save என்பதனை Click செய்யுங்கள்.
அதன் பின் Stream output என்ற விண்டோ ஓபனாகும், அதில் Encapsulation டேப்ஐ Click செய்து உங்களுக்கு தேவையான போர்மட்டை தெரிவு செய்து Save என்பதை Click செய்யுங்கள்.
அவ்வளவு தான் உங்களது ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகள் நீங்கள் தெரிவு செய்த போர்மட்டுக்கு மாறிவிடும்.
ஐ.நா தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம்
நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார்.
நயன்தாரா - ஜெயம் ரவி இணையும் பூலோகம்
பேராண்மை பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படம் பூலோகம் இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தை ஓஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தின் திரைக்கதையை நயன்தாராவிடம் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் கூறியுள்ளார்.
படத்தின் கதையும் நாயகி கதாப்பாத்திரமும் பிடித்ததால் நாயகன் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெற்றி
ஏசியன் 5 நேஷன்ஸ் முதலாம்தர றக்பி தொடரில் சிங்கப்பூருக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.
பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 35க்கு 10 எனும் புள்ளிகள் கணக்கில் இலங்கை வெற்றிபெற்றுள்ளது.
தொடரில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை தனது முதல் போட்டியில் சீன தாய்பேயை வெற்றிகொண்டது.
இலங்கை எதிர்வரும் சனிக்கிழமை பிலிப்பைன்ஸை எதிர்த்தாடவுள்ளது.
வாகன விபத்தில் 43 பேர் பலி
மெக்சிக்கோவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரக்குகளை ஏற்றிய ட்ரக் வாகனமொன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய பஸ் ஒன்றுடன் மோதியதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிக்கோ ஜனாதிபதி தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் நால்வரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுவதுடன், காயமடைந்தவர்களின் விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை
இஸ்லாமாபாத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
127 பேரின் உயிர்களை காவு கொண்ட விபத்தினை அடுத்து, குறித்த ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாரிய விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு எதிராக இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்விவகார அமைச்சர் ரஹ்மான் மாலிக்
பட்டதாரி ஆசிரியர் நியமனம்
மேல் மாகாண பாடசாலைகளுக்கு, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தகவலை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகள் தமக்கான நியமனக் கடிதத்தை பெறுவதற்கு முன்னர் ஒருவார காலத்திற்கு தொண்டர் ஆசியர்களாக கடமையாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சை மற்றும் எழுத்துப் பரீட்சை ஆகிய இரு பரீட்சைகளுக்கும் முகங் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கே நியமனம் வடங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியக்குளுவின் இலங்கை விஜயம் குறித்து...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் தமது விஜயத்தின் இறுதிநாளான இன்று காலை கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். இத்தூதுக்குழுவில் இடம்பெற்ற 12 இந்திய எம்.பிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் இதில் பங்குபற்றினர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)