//]]>3

திங்கள், 9 ஏப்ரல், 2012


தெலுங்கு பட உலகில் நாயகி நயன்தாரா, சீதையாக நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்ற திரைப்படம் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.

வருகிற ஏப்ரல் 13ம் திகதியில், தமிழ் புத்தாண்டில் ஸ்ரீ ராமராஜ்ஜியம் படம் திரைக்கு வரும் என தெரிவித்திருந்தனர்.

ஆனால் பெப்சி தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இப்படத்தின் டப்பிங் வேலைகள் பாதிக்கப்பட்டன.

இதனால் தமிழ் புத்தாண்டு அன்று இப்படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும் தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழுவினர் மாற்றி அமைத்துள்ளார்கள்.

இதையடுத்து ஏப்ரல் 20ம் திகதியில் ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தை திரையிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான வேலைகளில் இப்படத்தின் தயாரிப்பாளர் கிரண் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இப்படத்தில் ராமராக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.

குடியிருபபை முட்டி மோதிய ஜெட் விமானம்


அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் தென்பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடற்படையைச் சார்ந்த ஜெட் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
தலைநகர் வாஷிங்டன் தென்பகுதியில் வெர்ஜினியா மாகாணத்தில் கடற்படை பயிற்சி நிலையம் ஒன்று உள்ளது.
அங்கு விமான பயிற்சிபெறக்கூடிய விமானி ஒருவர் தவறுதலாக விமானத்தை இயக்கியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் விபத்தை உணர்ந்த இரு விமானிகளும் பாராசூட் உதவியுடன் தப்பித்து விட்டனர்.

சிகரெட் விளம்பரப்படுத்த தடை



இங்கிலாந்தில் உள்ள கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் பாக்கெட்டுகளை அதிகளவு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், வரிசையாக அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு விளம்பரப்படுத்துவதன் மூலம் அவை இளைஞர்களை சுண்டி இழுத்து புகைக்கும் ஆவலை தூண்டுகிறது.



எனவே இளைஞர்கள் அவற்றை வாங்கி புகைப்பதால், புற்றுநோய், காசநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றனர்.
இதை தடுக்க கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை அடுக்கி வைத்து விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று முதல் அமுலுக்கு வந்தது.
அரசின் இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றுள்ள போதிலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூழ்காது என்றது எப்படி மூழு்கியது


விமானப் பயணங்கள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருந் தொகை பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பிரபலமாக இருந்தன. ஜக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் அந்தக் காலத்தில் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் அதியுயர் மேம்பாடு அடைந்திருந்தன.
வைற் ஸ்ரார் லைன் (White Star Line) என்ற ஜக்கிய இராச்சியத்தின் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் கப்பல் நிறுவனம் டைட்டானிக் கப்பலுக்கு உரிமையாளராக இருந்தது. எதுவிதத்திலும் மூழ்காது என்ற உத்தரவாதத்துடன் இந்தக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்குத் தொடங்கியது. 

நான்கு புகை போக்கிகளைக் கொண்ட இந்தக் பிரமாண்டமான கப்பலில், கப்பல் விபத்திற்கு உட்பட்டால் “ உயிர்காக்கும் படகுகள்” (Lifeboats) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு செல்லப்பட்டன. 

இதற்கு மேற்கூறிய உத்தரவாதமும் அதிக எண்ணிக்கையில் இந்தப் படகுகளை ஏற்றிச் சென்றால் பயணிகளின் நம்பிக்கை கெட்டு விடும் அத்தோடு கப்பலின் அழகும் பாதிக்கப்பட்டு விடும் என்று காரணம் சொல்லப்படுகிறது. 

கப்பல் நிறவனத்தின் உத்தரவாதத்தை மீறிய டைட்டானிக் (Titanic) என்ற பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தில் அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப் பாறையுடன் (Iceberg) மோதி 1912 ஏப்ரல் 14ம் நாள் இரு பாகங்களாக உடைந்து மூழ்கியது. 

இந்த விபத்தில் 1,517 பேர் உயிரிழந்தனர். உயிர் காக்கும் படகுகள் கூடிய எண்ணிக்கையில் இருந்திருந்தால் இதில் 1,500 உயிர்களாவது காப்பாற்றப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கப்பலில் அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் தொடக்கம் ஜரோப்பாவின் புதிய வாழ்க்கையைத் தேடும் கிராமப் புற மக்களும் பயணித்தனர். 

மேல் தட்டு முதலாம் வகுப்பில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டு வங்கிகளின் சொந்தக்காரர்கள், பரம்பரைச் செல்வந்தர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர். 

மலிவுப் பயணம் செய்தோர் வசதிகள் குறைந்த கப்பலின் அடிப்பாகத்தில் பயணித்தனர். ஜரோப்பிய மதக் கலவரங்கள், வேலை நிறுத்தம் செய்ததற்காகத் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள், நிலங்களை இழந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்குச் சென்றனர். 

லெபனோன், சீரியா (Lebanon, Syria) போன்ற மத்திய கிழக்கு நாட்டவர்களும் குடும்பங்களோடு இடம்பெயர்ந்து சென்றனர். பெல்ஜியம், பின்லாந்து, சுவீடன், டென்மார்க், குரோசியா, ஜேர்மனி போன்ற நாட்டவர்களும் புதிய வாழ்வைத் தேடிச் சென்றனர். 

பெருமளவு உயிரிழப்பிற்கு உயிர் காக்கும் படகுகளின் தட்டுபாடு மாத்திரமல்ல டைட்டானிக் கப்பலின் வானொலி இயங்காமல் இருந்ததும் காரணமாக இருக்கிறது. வானொலி நல்ல நிலையில் இருந்திருப்பின் பிற கப்பல்களை உதவிக்கு அழைத்திருக்க முடியும். 

அந்த இரவில் மிதக்கும் பனிப் பாறைகள் பற்றிய எச்சரிக்கையை அத்திலாந்திக் கடலில் சென்ற பிற கப்பல்கள் டைட்டானிக் கப்பல்களுக்கு அனுப்பின ஆனால் வானொலி முடங்கிக் கிடந்ததால் எச்சரிக்கைகள் வீணாகின. 

பிரமாண்டமான டைட்டானிக் கப்பலில் இன்னொரு தொழில் நுட்பக் கோளாறு இருந்தது. கப்பலைத் திசை திருப்ப உதவும் சுக்கானுக்கும் (Rudder) சுக்கானைத் திருப்பும் பிடிக்கும் (Tiller) இடையிலான தொடர்பில் 37 நொடி (37 Seconds) நேர வித்தியாசம் இருந்தது. 

இதனால் இறுதி நேரத்தில் பனிப் பாறையுடன் மோதுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. டைட்டானிக் விபத்திலிருந்து படிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் இருக்கின்றன நவீன தொழில் நுட்பத்தால் இயற்கையை மோதி வெல்ல முடியாது. எங்கோ ஒரு இடத்தில் மனிதத் தவறு வீழ்ச்சியை ஏற்படுத்தும். 

இரு துண்டுகளாக உடைந்த கப்பல் இரண்டு மணிக்கும் சற்றுக் கூடிய நேரத்தில் அத்திலாந்திக் கடலின் 12,600 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. இன்றும் அது அங்கேயே கிடக்கிறது. இந்த விபத்து பற்றி ஆய்வு நூல்கள், மேடை நாடகங்கள், திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. 

கப்பல் மூழ்கிய 29 நாட்களில் ஒரு பத்து நிமிடப் படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் பிரதம பாகத்தில் நடித்தவர் 22 வயது நடிகை டொறித்தி கிப்சன் ( Dorothy Gibson) இவர் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து காப்பாற்றப்பட்டவர். 

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது “முதலாவதாகப் பெண்களும் சிறுவர்களும்” (Women and Children) என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. உயிர் காக்கும் படகுகளில் இவர்கள் தான் முதலில் ஏற்றப்பட்டனர். ஆனால் மலிவுப் பயணம் செய்த பல பெண்களும் சிறுவர்களும் காப்பாற்றப் படவில்லை. 

சில ஆண்கள் பெண்களையும் சிறுவர்களையும் முந்திக் கொண்டு படகுகளில் ஏறித் தப்பிச் சென்றனர். சில உயர் குடிப் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களைப் பிரிய மறுத்து அவர்களோடு கடலில் மூழ்கினர். பலவிதமான மனித இயல்புகள் அந்த நள்ளிரவில் வெளிப்பட்டன. 

டைட்டானிக் மூழ்கிச் சரியாக ஒரு நூற்றாண்டாகிறது. அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப்பாறை ஆபத்தைப் போக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. அவை ஒரே இடத்தில் நிற்காமல் மிதக்கின்றன அவற்றின் பெரும் பகுதி நீர் மட்டத்திற்குக் கீழே இருக்கின்றன. 

பனிப்பறைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு வர்ணம் பூசப்படுகின்றன. அவற்றின் மீது குண்டு வீசித் தகர்க்கப் பட்டுள்ளன. றாடர் திரை மூலமாகவும் செய்மதி மூலமாகவும் பனிப் பாறைகள் அவதானிக்கப் படுகின்றன. 

ஆனால் வருடமொன்றுக்குச் சராசரி இரண்டு மோதல்கள் நடக்கின்றன. பெப்ரவரி – யூலை மாதங்களில் ஆபத்துக்கள் கூடுதலாக இருக்கின்றன. ஜனவரி 1959ல் 95 பயணிகளோடு ஒரு கப்பல் மூழ்கியது. ஆனால் அந்தப் பக்கத்தில் சென்ற இன்னொரு கப்பல் அவர்களைக் காப்பாற்றியது. 

மூழ்கடிக்க முடியாத கப்பல் இன்னும் கட்டப்படவில்லை. வீழ்ந்து நொருங்காத விமானம் இன்னும் உருவாக்கப் படவில்லை. வெடித்துச் சிதறாத அணு உலை இன்னும் நிறுவப்படவில்லை. பனிப் பாறை ஆபத்தும் இன்னும் நீங்கவில்லை



ஆண் பெண்ணாகி உலக அழகிப்போட்டிக்கு தகுதி


அமெரிக்காவில் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் டொனால்டு டிரம்ப்ஸ் என்ற அமைப்பின் சார்பில் உலக அழகிப் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன.



பல்வேறு நாடுகளில் அழகிப்பட்டம் வென்றவர்கள், இந்த போட்டியில் பங்கேற்பார்கள். அதன்படி, கனடா நாட்டின் அழகி போட்டியில் ஜென்னா தலக்கோவா என்ற 23 வயது மாடல் அழகி பங்கேற்றார்.
இறுதி சுற்று வரை தகுதி பெற்ற அவருக்கு போட்டியில் தொடர்ந்து நீடிக்கத்தடை விதிக்கப்பட்டது. காரணம், ஜென்னா ஆணாக இருந்து பெண்ணாக மாறிவர் என்பதுதான்.
உலக அழகி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒருவர் இயற்கையிலேயே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது ஜென்னா உண்மையிலேயே ஒரு பெண்தான் என்றாலும் விதியின்படி அவரை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த முடிவை எதிர்த்து மாடல் அழகி ஜென்னா போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து கனடா அழகி போட்டியில் பங்கேற்க ஜென்னாவுக்கு போட்டியை நடத்தும் அமைப்பு அனுமதி வழங்கி இருக்கிறது.
ஜென்னாவுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டபோது பேட்டி அளித்த கனடா அழகி போட்டி அமைப்பாளரான டெனிஸ் தவிலா, ஜென்னா உண்மையான பெண்ணைப்போல் இருக்கிறார்.

அவர், உண்மையான பெண்தான். ஆனால், விதிகளின்படி (பிறக்கும்போதே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும்) அவரை அனுமதிக்க முடியாது என்று கூறி இருந்தார்.
அதற்கு விளக்கம் அளித்த ஜென்னா, 4 வயது வரை பெண்ணாகவே இருந்ததாகவும், அதன் பின்பு ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தினால் ஆணாக மாறி, பின்பு 19-வது வயதில் அறுவை சிகிச்சை மூலம் முழுமையான பெண்ணாக மாறிவிட்டதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


மந்திரத் தண்ணீர் (வீடியோ)

புவியீர்ப்பு விசை காரணமாக எப்பொழுதும் பொருட்கள் கீழ்நோக்கியே விழும். அவ்வாறில்லாமல் அந்தரத்தில் இருக்கவேண்டுமாயின் புவியீர்ப்பு விசைக்கு சமானன விசை எதிர்த்திசையில் வழங்கப்படவேண்டும்.
இவை விஞ்ஞானத்தின் மூலம் சாத்தியப்படக்கூடியவையாகும். அதே போல இங்கும் போத்தலினுள் உள்ள நீரை கீழே சிந்தாதவாறு தமது விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி நிறுத்துகின்றார்கள். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்துங்கள்.


HTC One Vஐ புதிய கைப்பேசி (வீடீயோ)

ய உற்பத்தியில் புதிதாக தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் HTC கைப்பேசி உற்பத்தி நிறுவனமானது தனது புதிய கைப்பேசியான HTC குடும்பத்தைச் சேர்ந்த One Vஐ அறிமுகப்படுத்தியுள்ளது.


அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படவல்ல இந்த கைப்பேசிகள் 3.7 அங்குல அளவுடைய WVGA தொடுதிரை வசதிகொண்டவை. மேலும் இத்தொடுதிரையானது 480 x 800 pixels அளவில் உருவங்களை தெளிவாக காட்சிப்படுத்தக்கூடியன.
இதன் புரோசசர் ஆனது 1GHz வேகத்தைக் கொண்ட தனியான புரோசசர் ஆகும். தவிர 5 மெகா பிக்சல் கமெரா உடன் கூடியதும் 720 பிக்சல்கள் அளவில் வீடியோப்பதிவு செய்யக்கூடியதுமான வசதி காணப்படுகின்றன. இதன் நினைவகமானது 4GB ஆக காணப்படுகின்ற போதிலும் 32GB வரை அதிகரிக்க முடியும்


விஞ்ஞானி 600 குழந்தைகள்

இன்றைய காலகட்டத்தில் உயிரணு தானம் மூலம் பெண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். கடந்த 1940ம் ஆண்டில் இருந்தே இந்த முறை வழக்கத்தில் இருந்துள்ளது.


இவ்வாறு குழந்தை பெறுபவர்கள் மற்றும் உயிரணு தானம் வழங்கியவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஞ்ஞானி ஒருவருக்கு உயிரணு தானம் மூலம் 600 குழந்தைகள் பிறந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவரது பெயர் பெர்டோல்டு வியஸ்னர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் லண்டனில் சொந்தமாக கருத்தரித்தல் மைய மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். இந்த மையத்தில் உயிரணு தானம் வழங்கியதன் மூலம் 1500 குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றுள் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விஞ்ஞானி வியஸ்னர் உயிரணுவின் மூலம் பிறந்தவை என தெரியவந்துள்ளது.
இவர்களில் இரட்டையர்களும் அடங்குவர். கனடாவை சேர்ந்த டாக்குமெண்டரி சினிமா தயாரிப்பாளர் பார்ரி ஸ்டீவன், லண்டன் வக்கீல் டேவிட் கோலன்ஸ் இது குறித்து ஆய்வு நடத்தி இந்த ரகசியத்தை கண்டுபிடித்தனர்.
விஞ்ஞானி வியஸ்னர் ஆண்டுக்கு 20 முறை உயிரணு தானம் செய்துள்ளார். கடந்த 1940ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு வரை அதாவது 20 ஆண்டுகள் தானம் செய்து இருக்கிறார். இவர் தற்போது உயிருடன் இல்லை, கடந்த 1972-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவரின் உயிரணு தானம் மூலம் 150 குழந்தைகள் பிறந்துள்ளன. அதுவே உலக அளவில் அதிக அளவாக கருதப்பட்டது. அந்த சாதனையை விஞ்ஞானி வியஸ்னர் முறியடித்துள்ளார்.
மேலும் இதே கருத்தரித்தல் மையத்தில் இவருக்கு அடுத்த படியாக மற்றொருவர் அதிகம் பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

மனிதன் கங்காருவாக மாறினால்



அவுஸ்திரேலியாவில் வாழக்கூடியதான கங்காருக்கள் இனப்பெருக்கத்தில் ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபட்டது என்பது யாவரும் அறிந்ததே.
இவை பார்ப்பதற்கு வினோதமாக காணப்படுவதுடன் ஒரே பாய்ச்சலில் அதிகளவு தூரத்தை கடக்கவல்லன.
இவ்வாறு மனிதனும் கடந்தால் எப்படி இருக்கும்? அந்த கற்பனையை நனவாக்கும் முகமாக காலில் அணியக்கூடிய உபகரணம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 166 யூரோ கொடுத்து அந்த உபகரணத்தை வாங்கினால் நீங்களும் பாயலாம் காங்காருவைப்போல்.

3 மோட்டார் சைக்கிள் விபத்து



மருதனார்மடத்தில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மானிப்பாய் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மாருதனாமடத்தில் இருந்து வாழைக்குலை கட்டிவந்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டதனாலேயே இச் சம்பவம் நடைபெற்றது

குணரத்ணம் இலங்கையில்




கடத்திச் செல்லப்பட்டுள்ள முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் வேறு பெயரில் இலங்கைக்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய தூதரகம் இலங்கைக்கு அறிவித்துள்ளது. 


நொவேல் முதலிகே என்ற பெயரில் செய்யப்பட்டிருந்த கடவூச்சீட்டில் அவர் இலங்கை சென்றிருந்ததாக அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. 



இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. 



அத்துடன் குணரட்னம் சம்பா சோமரத்ன என்ற தனது மனைவியை வேறு பெயரிலேயே மணமுடித்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது. 

யாழில் 7 மாணவர்கள் பாடசாலையால் இடை நிறுத்தம்



யாழில் ஆசிரியை ஒருவரின் நடவடிக்கைகள் தொடர்பாக அவதூறு பரப்பும் செயற்பாட்டை முன்னெடுத்த குற்றச்சாட்டில் யாழ். கொக்குவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

குறித்த பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக மாணவர்கள் அதிபரினால் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
கொக்குவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை தனது கற்றல் செயற்பாட்டைக் கடந்து மனம் புண்படும் வகையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவர்களை இழிவுபடுத்துவதாகவும் அவரை உடனடியாக வெளியேற்றுமாறும் அதிபரிடம் மாணவர்கள் கோரியிருந்தனர். 

ஆனால் மாணவர்களின் கோரிக்கையை அதிபர் நிராகரித்துள்ளார். இதனிடையே, குறித்த ஆசிரியைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை அவரின் வீடு உட்பட ஏனைய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. 

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவரின் தூண்டுதலின் பேரில், குறிப்பிட்ட மாணவர்களே இந்தத் துண்டுப் பிரசுரங்களை ஒட்டியதாகக் கூறி கடிதம் தரும்படி கேட்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கையில் பலத்த காயத்திற்கு உள்ளான நிலையில் ஒரு மாணவன் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். 

இந்நிலையில் தற்போது அதிபர் மற்றும் கல்லூரியின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினர்கள் 14 பேரும் கையொப்பமிட்டு குறித்த ஏழு மாணவர்களின் பெற்றோர்களுக்கு கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பறந்த மிகின் லங்கா நிறுத்தம்



மலேசியா நோக்கிப் பயணித்த மிகின்லங்கா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தடையிறக்கப்பட்டடுள்ளது.
குறித்த விமானத்தின் பொருட்கள் எடுத்துச் செல்லும் பதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகவே விமானம் தடையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.