//]]>3

சனி, 14 ஏப்ரல், 2012

இராணுவத்தின் கண்கட்டிவித்தை...


இராணுவத்தினர், பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், தமிழ், சிங்கள கலாசாரங்களுக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டன. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டுள்ளவர்களை படங்களில் காணலாம்

யாழில் இரு சகோதரிகள் சடலமாக மீட்பு



யாழ்ப்பாணம் பலாலி, 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 9.30 மணியளவில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாலினி (வயது 20) மற்றும் தனூஜா (வயது 22) என்ற இரு சகோதரிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தரிகளின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், அவர்கள் இருவரும் நேற்று இரவு தனிமையிலேயே வீட்டில் இருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நீதிவானின் மரண விசாரணைகளை அடுத்து, இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சகோதரிகள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது பற்றி இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பலாலி பொலிஸார் குறிப்பிட்டனர்.

பறக்கும் நாய்



நாய் ஒன்று ஒலியின் சந்தத்திற்கு ஏற்ப ஸ்கிப்பிங் செய்து அசத்துவது இணையத்தில் பிரபல்யமாகயுள்ளது.

பதினொரு வயதான இந்த நாய் ஒரே தடவையில் இரண்டு முறை ஸ்கிப்பிங் செய்வதுடன், மிகவும் உயரமாகவும் துள்ளிக்குதித்து அசத்துகின்றது. அமெரிக்காவில் வளர்ந்து வரும் குறித்த நாயின் சாகசத்தைக் காணொளியாக பதிவு செய்தவர் அதனை பறக்கும் நாய் என குறிப்பிட்டிருக்கின்றார்.

இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் எலும்புகள்


முதலாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த ஜெருசலேமில் உள்ள இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடந்த 1980ம் ஆண்டில் முதலாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்கு யூதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இதன் முடிவில் இயேசுவின் கல்லறையை தோண்டாமல் கமெராவுடன் கூடிய ரோபோவை கல்லறைக்குள் இறக்கி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி துளைகள் போடப்பட்டு அதன் வழியாக ரோபோக்கள் பூமிக்குள் இறக்கப்பட்டன. அவை புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளன. அதில் எலும்புகள், கல்வெட்டுகள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இயேசுவின் எலும்புதானா? என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.