//]]>3

வெள்ளி, 11 மே, 2012

பாகற்காய் பகோடா



சக்கரை நோயளிகளுக்கு பாகற்காய் ரொம்போ நல்லது… ஆனா அதன் கசப்பு சுவை பிடிக்கலையா…?
கீழுள்ளவாறு பகோடா ஆக்கிப் பாருங்க, சின்னவங்க கூட ரொம்போ விரும்புவாங்க..!
இதனுடைய செய்முறை மிகவும் எளிது…
தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 1/4 கிலோ
பூண்டு – 2 பல்
இஞ்சி – சிறிய துண்டு
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
உப்பு – 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
பட்டர் – 1 தே.கரண்டி(விரும்பினால்)
எண்ணெய் – பொரிப்பதற்கு
* பாகற்காயினை சிறிய சிறிய வட்ட வடிவமாக வெட்டி கொண்டு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து தனியாக வைக்கவும்.
* இஞ்சி, பூண்டுனை தோல் உரித்து கராட் துறுவியினால் துறுவி பாகற்காயுடன் சேர்க்கவும்.
* பாகற்காயுடன் (எண்ணெய் தவிர) கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* எண்ணெயினை காயவைத்து பாகற்காயினை போட்டு பொன்நிறமாக பொரித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான பாகற்காய் பகோடா ரெடி.

நெத்திலி கருவாடு வறுவல்



தேவையான பொருட்கள் :
· நெத்திலி கருவாடு – 1/4 கிலோ
· மிளகாய்தூள் – 1 மேஜைகரண்டி
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
· எண்ணெய் – சிறிதளவு
செய்முறை :
கருவாடினை சுடுதண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் ஊறவிட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
கருவாடுடன் மிளகாய்தூள் + மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கருவாடினை போட்டு வறுக்கவும். சுவையான நெத்திலி கருவாடு ரெடி…
கவனிக்க :
இந்த வறுவல் செய்ய நிறைய எண்ணெய் தேவையில்லை.
அதே போல சமைக்கும் பொழுது தட்டு போட்டு முடி வேண்டாம்.
கருவாடில் ஏற்கனவே உப்பு சேர்த்து இருப்பாங்க என்பதால் உப்பு சேர்க்க வேண்டாம்.

தோலை மினுமினுப்பு ஆக்கும் ஆரஞ்சுபழத் தோல் பொடி



உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு பழச் சுளைகளை தின்றுவிட்டு அதன் தோலை நாம் குப்பையில் எறிந்து விடுவோம். இனிமேல் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அதன் தோலை உடனே எறியாமல் வெயிலில் உலர வைக்கவும்.
நன்றாக காய்ந்த தோலை அரைத்து பொடியாக்கி, அதனுடன் பசும்பாலை கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு அப்ளை செய்ய வேண்டும்.
சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான முகம் கழுவ தோல் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு மாதத்திற்கு காலை நேரத்தில் இதனை தொடர்ந்து பூசி வரவேண்டும்.
அப்புறம் பாருங்கள் உங்களின் முகத்தை கண்ணாடியில் பார்த்து நீங்களே வியக்கும் அளவுக்கு முகம் பளிச்சென்று ஆகும்.

கொள்ளையடிக்கும் நாயும் பூனையும்

கடைக்கு சென்ற பூனையும் நாயும், குழு முயற்சியில் எவ்வாறு களவெடுத்து உண்கிறார்கள் பாருங்கள்…!

கார்ப்பெட் வீதியில் பறந்த ஓட்டுனர் வைத்திய சாலையில்



சுன்னாகம் பகுதியில் வேகமாகச் சென்ற வாகனம் பாதையை விட்டு விலகி அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதுண்டதில் தடம்புரண்டடு விபத்துக்குள்ளாகியது.
சுன்னாகம் பிரதேச செயலக ஒழுங்கைக்கு அருகாமையில் நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் வாகனச் சாரதிய படுகாயமுற்ற நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அன்மையில் காப்பெற் வீதி அமைக்கப்பட்ட நிலையில் இந்த பகுதியில் அன்மைக்காலமாக வாகனங்கள் மிகவும் வேகமாக செல்வது வழமையாகும்.
அந்த வகையில் வேகமாக வந்த வாகனமே வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. மின்கம்பம் மீது மோதியதால் அந்தப் பகுதயில் சிறிது நேரம் மின்சாரம் பாதிக்கப்பட்டது.
குறிப்பிட்ட வாகனத்தை செலுத்தி வந்த சாரதி ஏற்கனவே காவற்துறையினர் மறித்தும் நிற்காது தொடர்ந்து வாகனத்தை செலுத்தி பொது மக்கள் இராணுவம் எனப் பலரையும் காயப்படுத்திய குற்றத்திற்க்காக கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படவர் எனக் கூறப்படுகிறது.

பஸ் வண்டி பாதையை விட்டு விலகி பனை மரத்துடன் மோதியது



நீர்கொழும்பு, குருநாகல் பிரதான வீதியில் கொக்கவில பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பத்துப் பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியே இன்று காலை 6.30 மணியளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
பஸ் வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பஸ் பாதையை விட்டு விலகி பனை மரத்துடன் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட சிவன்கோவில் சிவலிங்கம் சாவகச்சேரியில் மீட்பு!



சாவகச்சேரி நீதிமன்ற கட்டிடம் இருந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.ஒல்லாந்தர் பிரித்தானியர் காலத்தில் இப்பகுதியில் இருந்த சிவன் ஆலயம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர் காலம் தொட்டு சாவகச்சேரியில் இயங்கி வந்த உயர்நீதிமன்றக் கட்டிடங்கள் தற்போது அங்கிருந்து முற்றாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் மீண்டும் புதிய நீதிமன்றம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதற்கான அத்திவாரம் வெட்டும் பணி நடந்துவரும் இடங்களில் வரலாற்றுப் பெறுமதி மிக்க தொல்பொருட் சின்னங்கள் காணப்படுவதாக சோலையம்மன் கோவில் பிரதமகுரு வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பேராசிரியர் புஷ்பரட்ணம், தொல்லியற்துறை ஆய்வு உத்தியோகத்தர் மதியழகன் ஆகியோர் நீதிமன்றக் கட்டிடங்கள் இருந்த இடத்தில் மிகப்பழைய ஆலயம் ஒன்று இருந்து அழிந்ததற்கான சான்றுகளை அடையாளப்படுத்தி உள்ளனர்.

தற்போதைய நீதிமன்ற வளவில் இருந்த பிற்காலக் கட்டிடங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டிருந்தும் அந்த பிரதேசம் மட்டுமே சற்று மேடாகக் காணப்படுகிறது. இதற்கு போத்துக்கேயர் அல்லது ஒல்லாந்தர் ஆட்சியில் அழிக்கப்பட்ட அல்லது அழிவடைந்து போன ஆலயத்தின் அழிபாடுகள் அவ்விடத்தில் புதையுண்டிருப்பதே காரணமாக இருக்கவேண்டும் என பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார். தற்போது இவ்விடத்தில் சதுர வடிவில் வெட்டப்பட்டுவரும் ஒவ்வொரு ஆழமான குழிக்குள்ளும் செறிந்த அளவில் செங்கட்டிகளும், பொழிந்த முருகக்கற்களும் வெளி வந்துள்ளதைக் காணமுடிகிறது.

அவை ஆலயம் ஒன்றின் கட்டிடப் பாகங்கள் என்பதை அவற்றின் வடிவமைப்புக்கள் எமக்கு தெளிவாக உணர்த்துகின்றன என அவர் தெரிவித்தார்.1990க்கு முன்னர் பொதுமக்களால் இந் நீதிமன்ற வளவிலும், அருகில் உள்ள பேருந்து தரிப்பு நிலைப்பகுதியிலும் கிணறு மற்றும் மலசலகூடம் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்ட போது அம்மன், மனோன்மணி அம்மன், ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், சூரியன் முதலான கருங்கற் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் மிகுந்த கலை வேலைப்பாடும், அழகும் பொருந்திய அம்மன் விக்கிரகம் ஐந்தரை அடி உயரம் கொண்டது.

இதுவே இலங்கையில் உள்ள மிக உயர்ந்த அம்மன் விக்கிரகம் என மக்கள் நம்புகின்றனர். இச் சிலைகளைக் குழியில் இருந்து வெளியே எடுத்த போது அவை சில பாதிப்புகளுக்கு உள்ளானாலும் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்த பொதுமக்கள் அச்சிலைகளை பழைய வாரிவனேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றமை இங்கு குறிப் பிடத்தக்கது.

இவ்விக்கிரகங்களை பொதுமக்கள் கண்டெடுத்தபோது இவ்விடத்தில் சிவன் ஆலயம் ஒன்று இருந்திருக்கலாம் என நம்பினர். அது முற்றிலும் உண்மை என்பதே தற்போது நீதிமன்ற வளவில் கிடைத்துவரும் ஆலய அழிபாடுகள் உறுதிசெய்கின்றன. எதிர்காலத்தில் இங்கு கிடைக்கவுள்ள சான்றுகள் மேலும் பல உண்மைகளை வெளிக்கொணர உதவலாம் என பலர் தெரிவித்துள்ளார்.

அம்மன் ஆலயத்தில் பாம்பு பொந்துக்குள் சிவலிங்கம்!



அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரையடுத்துள்ள மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில் புராதன பாம்புப் பொந்துக்குள் திடீரென சிவலிங்கம் ஒன்று தோன்றியது.

அம்மன் ஆலய பாம்பு பொந்துக்குள் சிவலிங்கம் இருப்பதாக தான் கனவு கண்டதாக அக்கரைப்பற்றிலுள்ள கா.மல்லிகா என்ற பெண் கூறியதை ஆலய நிருவாகத்தினர் அதனை பார்வையிட்டனர்

.

பின்னர் கல்லாற்றைச் சேர்ந்த குடைச்சாமி சித்தரின் உதவியுடன் புற்றினுள் இருந்த சிவலிங்கத்தை எடுத்து ஆலயத்தினுள் பிரதிஸ்டை செய்தனர். பெருந்தொகையான மக்கள் இதனை வழிபாட்டு வருகின்றனர் என காரைதீவில் உள்ள செய்தியாளர் சகாதேவராசா அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் ஜோதி ஜோதி



இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதி வியாழக்கிழமை(10.5.12) கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்டுள்ளது
அங்குள்ள ஒலிம்பியா மலைப்பகுதியில், பண்டைகாலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடத்துக்கு அருகே ஹீரா எனும் தெய்வத்தின் சிதிலமடைந்த கோவிலுக்கு முன்னர் உள்ள ஒரு பீடத்தில் வைத்து இந்த ஜோதி ஏற்றப்பட்டது.
பழங்காலத்தில் பெண் பூசாரிகளால் எப்படி சூரிய ஒளியைக் கொண்டு இந்த ஜோதி ஏற்றப்பட்டதோ அதே போன்று, இனோ மெனெகாகி எனும் கிரேக்க நடிகை, பெண் பூசாரி வேடமணிந்து, அதிகாலை சூரிய ஒளியை கொண்டு இந்த ஜோதியை ஏற்றினார்.
பெரிய அளவிலான ஒரு கண்ணாடியில் சூரிய ஒளியை குவியச் செய்து அதன் மூலம் உண்டாகும் வெப்பத்தை வைத்தே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது.

புனிதத்தன்மை

சூரிய ஒளியைக் கொண்டு ஏற்றப்பட்ட ஜோதி வேறு ஒரு குடுவைக்கு மாற்றப்படுகிறது
ஒலிம்பிக் ஜோதியின் புனிதத் தன்மையை உறுதிப்படுத்தவே, இது சூரியக் கதிர்களைக் கொண்டே ஏற்றப்படுகிறது.
பண்டைய கிரேக்கர்கள் தீயை தெய்வத்தன்மை வாய்ந்த ஒன்றாகக் கருதி, அதை தமது முக்கிய ஆலயங்களின் முன்னர் தொடர்ந்து எரியும் வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
மனிதனுக்கும் நெருப்பினால் ஏற்படக்கூடிய சாதகமான விஷயங்களுக்கும் இருக்கும் தொடர்பையே ஒலிம்பிக் ஜோதி தற்காலத்தில் நடைபெறும் விளையாட்டுகளில் எடுத்துக்காட்டுகிறது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் கூறுகிறது.
மேலும் ஒலிம்பிக் ஜோதியின் பயணம், ஒலிம்பியாவிலிருந்து தொடங்குவது என்பது பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கும், தற்கால போட்டிகளுக்கும் இடையேயான ஆழ்ந்த தொடர்பை வெளிக்காட்டுகிறது எனவும் அந்த சம்மேளனம் தெரிவிக்கிறது


சமாதானச் செய்தி


ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வருபவர்கள் அதன் பயணம் முழுவதிலும் சமானத்துக்கான செய்தியை சுமந்து செல்கிறார்கள்.
ஒலிம்பியாவில் ஜோதியை ஏற்றும் பணியை கிரேக்க நாட்டின் ஹெலினிக் ஒலிம்பிக் சங்கமே கையாள்கிறது.அந்தக் குழுவே தொடர் ஒட்டத்தின் மூலம் ஏதன்ஸ் நகருக்கு கொண்டுவரும் நடவடிக்கையை ஏற்பாடு செய்கிறது.
அதன் பிறகு அந்த ஜோதியை ஒலிம்பியாவிலிருந்து போட்டிகள் நடைபெறும் நாட்டிலுள்ள முக்கிய விளையாட்டு அரங்கத்தில் ஏற்றி வைக்க எடுத்து செல்லும் பொறுப்பு, போட்டிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.
கிரேக்கத்தில் இந்த ஜோதி தொடரோட்டமாக சுமார் 2,900 கிலோமீட்டர்கள் பயணம் செய்கிறது, 500 பேர் ஜோதியை ஏந்திச் செல்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடி

மேலும் கிரேக்கம் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்பில் சிக்கியுள்ள தருணத்தில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாக கிரேக்கத்தில் பெரிய அளவிலான சமூக அமைதிக்குலைவும் போராட்டாங்களும் இடம்பெற்றன.
ஏழு நாட்கள் கிரேக்கத்தில் பயணிக்கும் ஒலிம்பிக் ஜோதி, இம்மாதம் 17 ஆம் தேதி லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் அமைப்பிடம் கையளிக்கப்படும்.
கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட ஜோதி 18 ஆம் தேதி மாலை உள்ளுர் நேரம் 7 மணிக்கு பிரிட்டனின் தென் மேற்கு கரையோரம் உள்ள லாண்ட்ஸ் எண்ட் எனும் இடத்தை அடைந்து மறுநாள் முதல் நாடெங்கும் கொண்டு செல்லப்படும் நடவடிக்கை தொடங்குகிறது.

மலேரியா அற்ற இலங்கை உருவாக்குவோம்


யாழ் பிராந்திய சுகாதார திணைக்களம், மலேரியா தடை இயக்கம், சர்வோதயம், சேவாலங்கா போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து மலேரியா அற்ற இலங்கை உருவாக்கும் நோக்குடன் பேரணி ஒன்ற நடத்தப்பட்டுள்ளதுடன், கண்காட்சியும்

இலகு ஆங்கில மொழிப் பயிற்சி



ஊடகவியலில், சீராக நிலைத்த தன்மை, தரம் மற்றும் துல்லியத்தன்மை ஆகியவைகளை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், அதில் மொழி ஒரு மையமான பங்காற்றுகிறது. 

இந்தப் புதிய அத்தியாயங்கள் உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் , அவர்களது பணியின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஆங்கில மொழித் திறனை வளர்த்தெடுக்க உதவும். 

பிபிசியில் தரப்படும் ஆங்கில மொழிப் பயிற்சி, ஊடகவியல் , தயாரிப்பு , தொழிலுக்கான ஆதரவு சேவை ஆகியவற்றின் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பரந்துபட்ட வகையான ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. 

தேசிய மற்றும் சர்வதேச அளவிலும், பல்வகையான ஊடகத் தளங்களிலும் அவர்களது மொழி மேம்பாட்டுக்கான ஆதரவை இந்த பயிற்சி வழங்குகிறது. 

பிபிசி ஊடகவியல் கல்லூரியின் சர்வதேச மையத்தைச் சேர்ந்த மார்க் ஷியாவால் வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய அத்தியாயங்கள் பிபிசி ஊடகவியல் கல்லூரியின் மொழிப்பிரிவு இணையதளப் பக்கங்களில் அறிமுகப்படுத்தப்படும் இவ்வகையிலான முதல் முயற்சியாகும். 

உலகெங்கிலும் உள்ள பிபிசி ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி தந்த எமது ஆங்கில மொழி வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழு தங்களது அனுபவங்களை , உலகெங்கிலும் உள்ள ஆங்கிலம் பயில்வோருடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு தரும் இந்த வாய்ப்பு சிறப்பானதொன்று. 

எங்களுடன் பயில்வது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறோம்! 

24h newstv யாழ் கல்வியல் கல்லூரி ஆசிரியர் (video)

கழிவுப் பொருள்களைப் பயன்படுத்தி தனது கைவண்ணத்தினால் பல்வேறு அலங்காரப் பொருட்களைத் தயாரித்து வருகிறார் யாழ். தேசிய கல்வியற் கல்லூரியின் விசேட கல்வி விரிவுரையாளரான தம்பிராசா சிவகுமார்.