//]]>3

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

விடுதலைப் புலிகளின் ஆயுத நூலகம் கண்டுபிடிப்பு





கிளிநொச்சியில் ஒரு தொகை யுத்த ஆயுதங்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டுபடித்துள்ளனர். 

வெடிபொருட்கள் மற்றும் பிற யுத்த ஆயுதங்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் எனவும் இவ்விடத்தை அவர்கள் யுத்த ஆயுத நூலகமாக பயன்படுத்தி இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கிளிநொச்சி இளைஞனிட் 10 பாஸ்போட்



கிளிநொச்சியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரொருவரை, பத்து கடவுச்சீட்டுக்களுடன் சிலாபம் நகரில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக் கூறி, பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டுகளும் ஜெர்மன் நாட்டிற்கான ஐந்து விமான பயணச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

துவிச்சக்கரவண்டி ஓடும் வெட்டுக்கிளி


இந்தோனேஷியாவில் Borneo-வைச் சேர்ந்த Eco என்ற புகைப்படக்காரர் தன்னுடைய புகைப்படக் கருவியினால் வித்தியாசமான வடிவில் காணப்பட்ட வெட்டுக்கிளியினை படமெடுத்துள்ளார்.


இந்த வெட்டுக்கிளியானது மாலை சூரியன் மறையும் தருணத்தில் செடியில் மேல் அமர்ந்திருந்தது, துவிச்சக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பது போல் காட்சியளிப்பதைப் படத்தில் காணலாம்.

காத்திருப்பால் வந்த வினை



ரஷ்யாவைச் சேர்ந்த மருத்துவராகிய Kustov Michael என்பவர் கார் ஷோரூமில் தான் முன் அனுமதி வாங்கியும் தன்னை 20 நிமிடம் காத்திருக்க வைத்ததால் அந்த ஷோரூமினை நாசப்படுத்தினார்.

நிப்பான் என்ற கார் நிறுவனம் இவரை காத்திருக்க வைத்தது மட்டுமின்றி மற்ற வாடிக்கையாளர்களிடம் கவனித்த அவர்கள் இவரை மட்டும் கவனிக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தன்னுடைய 4x4 Suzuki Grand Vitara என்ற காரினை வைத்து அந்த ஷோரூமின் உள்ள 3 வகை புதிய கார்களை தாக்கியது மட்மின்றி, அங்குள்ள அறைகளையும் தாக்கினார்.

இவ்வாறு தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட இவருக்கு 20,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காட்டுன் வரைந்தவர் கைது




மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவுக்கு எதிராக கார்ட்டூன் சித்திரங்கள் வரைந்து இணையதளத்தில் வெளியிட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஜாதவ்பூர் பல்கலையில், வேதியியல் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ராவை வியாழன் இரவு கார்ட்டூனை வெளியிட்டதற்காக பொலிசார் கைது செய்தனர். பேராசிரியர் மீது ஐ.பி.சி., 66வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகநாடுகளுக்கு ஆபத்து



பசிபிக் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியும், அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குவின்ஸ்லாந்து பல்கலைகழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியில் கடலில் நீர்மட்ட அளவு உயர்வது பிற இடங்களைவிட வேகமாக இருக்கிறது.
உலக அளவில் கடல் நீர்மட்டம் 1880ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 1.5 மில்லி மீட்டர் அளவு தான் உயர்ந்து இருந்தது. ஆனால் டாஸ்மேனியா நகருக்கு அருகில் நடத்திய கணக்கெடுப்போ 1900 முதல் 1950-ம் ஆண்டுக்குள் இப்பகுதியில் ஆண்டுக்கு 4.2 மில்லி மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகக் காட்டுகிறது.
டாஸ்மேனியா அருகில் கடல் நீர்மட்டம் தொடர்ந்து 6,000 ஆண்டுகளாக ஒரே அளவில் நிலையாக இருந்திருக்கிறது. ஆனால் 1880ம் ஆண்டுக்குப் பிறகுதான் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியிருக்கிறது.
புவியின் வெப்ப சராசரி உயர்ந்து பனிப் பிரதேசங்களில் பனிமலைகள் உருகத் தொடங்கியதை அடுத்து கடல் நீர்மட்டம் பசிபிக்கில் உயரத் தொடங்கியது. இதன் வேகம் அதிகமாக இருக்கிறது.
துருவப் பிரதேசங்களில் மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்து உருகத் தொடங்கியிருப்பதை நேரிலேயே பார்க்க முடிவதால் நீர்மட்டம் உயர எது காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் புவி வெப்பமடைவது இதே அளவு தொடர்ந்தால் அது பருவநிலைகளை மட்டும் அல்லாமல் கடல் நீர்மட்டங்களையும் பாதிக்கச் செய்யும் என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.
இப்போது பருவநிலைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்குக் காரணம் மனிதர்கள் தான் என்பதால் இந்த எச்சரிக்கை அரசுகளுக்கும் மக்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டும்.

வட கொரியாவின் செயற்கை கோள் வெடித்து சிதறியது


வட கொரியா நீண்ட தூரம் செல்லும் செயற்கைகோளை ஏவி சோதனை செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் செயற்கைகோள் வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது.
வடகொரியாவின் நிறுவன தலைவர் கிம் 2 சங் 100-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக விண்ணில் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை ஏவ வடகொரியா முடிவு செய்தது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இதற்கு ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை நடத்தவே இந்த ஏவுகணை ஏவப்படுவதாக குற்றம் சாட்டின. இதை வடகொரியா மறுத்தது. வானிலை ஆய்வுக்காகவே அனுப்பப்படுவதாக கூறியது.
அதே நேரத்தில் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டால் ஏவுகணை வீசி தாக்கி அழிக்கப் போவதாக ஜப்பான் மிரட்டி வந்தது. அதையும் மீறி வடகொரியா உள்நாட்டு நேற்று காலை 7.40 மணி(சர்வதேச நேரப்படி நேற்று இரவு 10.40 மணிக்கு) விண்ணில் ஏவியது.
ஆனால் வடகொரியாவின் முயற்சி தோல்வி அடைந்தது. செயற்கைகோள் ஏவப்பட்டதும் சீறிப்பாய்ந்தபடி விண்ணில் பறந்தது. அதே நேரத்தில் அடுத்த ஒரு நிமிடத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. அவற்றின் சிதறல்கள் தென்கொரியாவின் குன்சன் துறைமுகத்தில் இருந்து தென்மேற்கில் 200 கி.மீட்டர் தூரத்தில் மஞ்சள் கடலில் விழுந்தது.

விஞ்ஞானியை வென்ற நான்கு வயது சிறுமி



பிரித்தானியாவில் ஹெய்டி ஹேன்கின்ஸ் என்ற நான்கு வயது சிறுமியின் அறிவுக் குறியீடு விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுக் குறியீடை விட அதிகமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹெய்டிக்கு அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால் அவளால் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக்குரிய கணக்குகளைச் செய்வதும், புத்தகங்களை வாசிப்பதும் எளிதாயிற்று.
ஹெய்டிக்கு முந்தைய சாதனையாளரான கேரல் வோர்டர்மேனின் அறிவுக் குறியீடு 154ஆகும். ஆக்ஸ்போர்டு பதிப்புகளில் உருவான புத்தகத்தில் உள்ள மரம் பற்றிய 30 புத்தகங்களை ஒரு மணி நேரத்தில் ஹெய்டி வாசித்து விடுவாள். இச்சாதனையை இவள் தனது இரண்டு வயதிலேயே நிகழ்த்தி விட்டாள்.
பிரிட்டிஷ் மென்சாவின் தலைமை நிர்வாகியான ஜான் ஸ்டீவனேஜ் கூறுகையில், ஹெய்டியின் பெற்றோர் சரியான நேரத்தில் தங்கள் குழந்தையின் அறிவுக் கூர்மையை அறிந்து அவளை சரியான முறையில் வளர்த்து வருகின்றனர் என்றார். அவள் மென்சாவில் இணைந்து மேலும் சிறப்படையலாம் என்று வாழ்த்தினார்.
ஹெய்டியின் தாய் சோஃபி ஒரு கலைஞர், இவருக்கு ஐசக் என்ற 9 வயது மகனும் உண்டு. அவன் தேவாலயத்தின் பாடகர் குழுவில் இடம் பெற்றுள்ளான்.

யாழ்.மாதகல் பிரதேசத்தில் பாரிய கடற்படை முகாம்



யாழ்.திருவடி நிலைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பாரியளவு கடற்படை முகாமினால் எதிர்வரும் காலத்தில் அப்பகுதி சிங்கள மயப்படும் அபயமிருப்பதாகவும், எக்காலத்திலும் தமிழர்கள் அந்த பிரதேசங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
வலிகாமம் வடக்கு உட்பட யாழ்ப்பாணத்தின் பெருங்கடல் கரையோரங்கள் முழுவதும் கடந்த 21 வருடங்களுக்கு முன்னர் பிடிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது.


எனினும் அவற்றில் ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் ஏனைய பகுதிகள் இன்னமும் விடுகிக்கப்படவில்லை. இதன் ஒருபகுதியாக மாதகல் பகுதியிலுள்ள திருவடிநிலைப் பகுதியும் இருந்து வருகின்றது.

குறித்த பகுதியில் தற்போது பிரமாண்டமான அளவில் கடற்படை முகாமும், விகாரைகள், சங்கமித்தை வந்திறங்கியதற்கான கப்பல்கள், புத்தர் சிலைகள் போன்றனவும் அமைக்கப்பட்டு வருகின்றது.


இதனால் இந்தப் பகுதிக்குத் தமிழர்கள் செல்லமுடியாது என்பதுடன், விகாரைக்குச் செல்ல விரும்பினால் கூட அந்தப் பகுதிக்குள் பாதணிகளை கழற்றிவிட்டே செல்லவேண்டும் என பணித்துள்ள கடற்படையினர், அந்தப்பகுதி பௌத்த புனிதப்பிரதேசம் எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதேபோன்று பொன்னாலை கடற்படை முகாமுடன் இந்தப்பகுதியும் இணைக்கப்பட்டு புதிய கடற்படை முகாம்களும், பெருமளவு விடுதிகளும் இப்பிரதேசங்களில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை, இந்தப் பகுதியை தமக்கு உரிமையாகத் தருமாறு கடற்படையினர் தொடர்ந்தும் வற்புறுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா இலங்கைக்கு புத்தாண்டு வாழ்த்து



மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நாட்டை உருவாக்க, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில்,

உலகம் முழுவதிலும் வாழும் இலங்கையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு பண்டிகை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளது.

நாட்டில் வாழும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சுபீட்சமானதும் ஜனநாயாகமானதுமான இலங்கையை கட்டியெழுப்ப முயற்சி எடுக்க வேண்டும்.

கடந்த 150 ஆண்டுகளாக இலங்கையுடன் பேணி வந்த உறவுகளைப் போன்றே தொடர்ந்தும் சிறந்த உறவுகளைப் பேண அமெரிக்கா விரும்புகிறது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவளிக்கும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடியதுமான இலங்கையை உருவாக்க உள்நாட்டு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என ஹிலாரி கிளின்ரன் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் புதுவருட் எப்படி


கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் சிங்கள தமிழ் விசேட நந்தன புதுவருட பூஜை நிகழ்வுகள் இன்று அதிகாலை முதல் நடைபெற்றது. விசேட நவகலச அபி ஷேகமும் அலங்கார தீபாராதனைகள் வசந்த மண்டப பூஜை மற்றும் உள் வீதி வெளி வீதி உற்சவம் நடைபெற்றது.

1 நாளில் மட்டும் 28 பேர் வைத்தியசாலையில்



இன்று காலை 7 மணிவரையான 24 மணித்தியாலத்தில் 228பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவர்களில் 100 நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

60 பேர் வீதி வபத்துக்கள் காரணமாகவும், வீட்டில் இடம்பெற்ற திடீர் விபத்துக்கள் காரணமடாக 49 பேரும் காயமடைந்துள்ளனர். 

எனினும் தீ விபத்து தொடர்பில் காயமடைந்த நிலையில் எவரும் குறித்த காலப்பகுதிக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் நிர்வாகி தெரிவித்தார். 

வழமையாக பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் விபத்துக்களை விடவும் இம்முறை விபத்துக்கள் குறைந்த அளவிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

2 விபத்து 2 மரணம்



புசல்லாவ மற்றும் அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வேறுபட்ட வாகன விபத்து சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

நுவரெலியா, கம்பொலை பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் கப் வண்டி ஒன்றும் மோதுண்டதில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இச்சம்பவத்தில் காயமடைந்த 11 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

கப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாவலபிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதேவேளை கொழும்பிலிருந்து காலி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் விபத்துக்கு இலக்காகியுள்ளார். 

இச்சம்பவத்தில் 22 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

இலங்கையில் கைகுண்டுத் தாக்குதலல் 10 பேருக்கு காயம்



எம்பிலிப்பிட்டி, கல்மில்லஆர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இக் கைக்குண்டு வீச்சு சம்பவம் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது காயமடைந்த 9 பேர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

காயமடைந்தவர்களில் 8 பேர் ஆண்கள் எனவும் இருவர் பெண்கள் எனவும் அவர் தெரிவித்தார். 


இச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார். 

குட்டித் தூ​க்கம் போடும் சிங்கார நாயார்



வீடு ஒன்றில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ஒன்று பொழுதுபோக்கு எதுவுமின்றி தன்னந்தனியாக இருப்பதனால் பட்டப் பகலிலேயே தூக்கம் போடுவது பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது.

நாய்கள் பொதுவாக சுறு சுறுப்பானவையே இதன் காரமாகவே வேட்டைகளில் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேலையின்றி இருந்தால் எல்லாருக்கும் சோம்பல் வரும் என்பதை சுட்டிக்காட்டும் நாயினைக் காணொளியினைக் காணலாம்.

சிகிச்சைப் பெற்றுக் கொள்ளும் கொரில்லா



கொரில்லா ஒன்றிற்கு துப்பாக்கிச் சூடு பட்டதனால் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு வைத்தியம் அளிக்கும் போதுகூட சும்மா இருக்க மாட்டார்கள் ஆனால் இந்த குளறுபடி செய்யும் குணம் கொண்ட கொரில்லா எவ்வளவு அமைதியாக இருக்கின்றதைப் படத்தில் காணலாம்.

மனிதனின் வித்தியாசமான தோன்றல்



மதங்கள் அனைத்தும் அன்பையே முதன்மைப்படுத்தி போதிக்கின்றன. அன்பே கடவுள் என்கின்றன. ஆனால் மனிதன் நாகரிகம் வளர வளர புற உலக வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னை மறப்பதுடன், பொருளாதார போராட்டத்தின் காரணமாக மனித நேயம் இல்லாமல் காணப்படுகின்றனர்.

மனிதநேயத்தினை எடுத்துரைக்கும் விதமாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேகப் பிரன்ஸ் என்ற இளைஞன் ரோபோ வேடமிட்டு மனித நேயச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது 21 வயதான இந்த இளைஞர் சுமார் 3,000 மைல்கள் பிரயாணம் செய்துள்ளார். மேலும் இதன் போது நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் போன்றோரை சந்தித்து ஆறுதல்கள் அளித்ததோடு மகிழ்விக்கவும் செய்திருந்தார்.

கமல் கொள்கை தவறினார்




இந்திய நடிகர், நடிகைகள் பலர் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளில் விளம்பரப் படங்களில் நடித்து பெரும் வருவாயினைப் பெற்று வருகின்றனர்.
ஆனால் தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் மாத்திரம் எந்தவொரு விளம்பர படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தனர்.
தாங்கள் இத்தகைய விளம்பரங்களில் நடிப்பதால், ரசிகர்களை தவறாக திசை திருப்பவது போல் ஆகிவிடும் என்ற காரணத்தால் இத்தகைய முடிவை ஒரு கொள்கையாகவே மேற்கொண்டிருந்தனர்.
கமல் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டு விளம்பரப் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். 50 ஆண்டுகளாக கமல் சினிமாவில் இருக்கிறார். இதுவரை அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது முதல் தடவையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் எற்கனவே இந்தி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.¨

சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குவதாக கமல் தெரிவித்துள்ளார். சமூக சேவையில் அக்கறையுள்ள விளம்பர படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

மகிந்தரின் கூட்டுச்சதி


சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான புது வருட ஒன்றுகூடல் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதி மஹிந்தர ராஜபக்ஷ உட்பட பலர் கலந்துகொண்டனர்

சிங்கத்தை மேய்க்கும் சிங்கக்குட்டிகள்


விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு விஜயம் செய்த சில சிறுவர்கள் அங்குள்ள சிங்கங்களை வாலில் பிடித்து மேய்த்துள்ளனர்.



மாடு மேய்க்கவே அச்சம் கொள்ள வேண்டிய தருணத்தில் சிங்கங்களை மேய்த்து அசத்தியுள்ளனர் இந்த சிங்கக் குட்டிகள்.