//]]>3

ஞாயிறு, 27 மே, 2012

றிசாட்டுக்கு எதிராக மன்னாரில்ஆர்ப்பாட்டம்



மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு எதிராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கண்டித்து மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது இடம்பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாடாளமன்ற உறுப்பினர்கள் மக்கள்உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்துகொண்டு தங்கள்உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் றிசாட்டின் கருத்திற்கு எதிரான பதாதைகளையும் கோசங்களையும் தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டுள்ளார்கள்,
சர்வமத ஒற்றுமையினை சாகடிக்கநினைக்காதே,றிசாட்டே பேசகற்றுக்கொள், றிசாட்டே உனது அரசியல்அராயகம் ஒழிக்க எம்நிலங்களை அபகரிக்காதே,போன்ற பதாதைகள தாங்கியவாறு மக்கள் றிசாட்பதியூதீனிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் அருண்பாண்டியன்


தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,
தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை.
ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத சுற்றுலா விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி.
யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.
இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.

திருநங்கை மிஸ் கனடா ஆகும் வாய்ப்பை இழந்தார்



மிஸ் கனடா அழகிப் போட்டியில் திருநாங்கையான Jenna Talackova பங்கேற்று சர்ச்சைக்கு உள்ளானார்.
திரு நங்கை என்ற காரணத்தால் குறித்த அழகிப்போட்டியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட Jenna Talackova , பின்னர் மீண்டும் போட்டிக்குள் உள்வாங்கப்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், Jenna Talackova ஆல் பிரகாசிக்க முடியாமல் போன நிலையில், மிஸ் கனடா அழகி விருதை 26 வயதாகும் Biniaz தட்டி சென்றார்.
Biniaz, தனது வாழ்த்து செய்தியில், Jenna Talackova க்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.

வெள்ளைக்காரனை அசர வைத்த இந்திய நாற்று



விஞ்ஞானி ஐசக் நியூட்டனால் போடப்பட்டு கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு வெள்ளைக்காரர்களை வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய நாற்று.
கடந்த 350 ஆண்டுகளாக டைனமிக்ஸ் தியரியில் உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.
ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இது குறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினார்கள்.
ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.
இது இந்தியர்களை தலை நிமிர்த்தும் செய்தியாகும்

சிங்கம் 2 இல் கலக்க வருகிறார் ஆச்சி மனோரமா



இயக்குனர் ஹரி இயக்கும் ”சிங்கம் 2” இல் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஆச்சி மனோரமா.
கோயில் வழிபாட்டுக்கு சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதால் இதுவரை அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் ஆச்சி.
தற்போது காயம் குணமடைந்து வழமைக்கு திரும்பியுள்ளார் மனோரமா. அவரை அணுகி ஹரி படத்தில் நடிப்பதற்கு சம்மதம் கேட்டவுடனேயே சம்மதித்துவிட்டாராம் மனோரமா.
மனோரமா இது வரை 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ்ஸில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னி பூக்களுடன்



யாழ் இந்துக்கல்லூரி மாணவன் உமாகரனின் கண்ணீர்ப்பூக்கள், கன்னி எனும் இரண்டு கவிதை நூல் வெளியீட்டு விழா இந்துக்கல்லூரி குமாரசாமி மண்ணடபததில் (23.05.2012) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெற்றது

மங்கள விழக்கேற்றலை தொடர்ந்து யாழ் இந்துக்கல்லூரி அதிபர் வீ.கணேசராசா தனது தலைமையுரையில் 3ன்று வயதில் திருஞான சம்மந்தர் தேவாரம் பாடினார் உமாகரன் தமிழ்த்தினப் போட்டியில் 1லாம் இடத்தினை பெற்ரதுடன் 15 தங்கப்பதக்கம்களும் 3முறை முறை தேசிய ரீதியில் 1லாம் இடம் பெற்றதுடன் மொத்தமாக 25 ந்து 1லாம் இடங்களையும் யாழ் இந்துக்கல்லூரி விவாத தேசியமட்த்தில் 1லாம் இடத்தில் தற்போது காணப்படுவதற்கு உமாகரனின் அயராத உளைப்பும் விவாத திறமையுமே காரணம் என தெரிவித்தார்

சோமாலியர்களின் வாழ்க்கையை சித்தரிக்கின்ற கண்ணீர்ப்பூக்கள், தனது எண்ணங்களை பிரதி பலிக்கின்ற கன்னி ஆகிய இரண்டு கவிதை நூல்களையும் AAA மூவிஸ் மற்றும் ur friend foundation தலைவரும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் செவ்வேள் வெளியிட்டு வைக்க உமாகரனின் பெற்றோர் பெற்றுக் பொற்றுக் கொண்டனர்

இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக உதவிவிரிவுரையாழர் செல்வ மனேகரன் ஸகந்தவராய கல்லூரி ஆசிரியர் மகாலிங்கம் இராமகாதன் கல்லூரியின் ஒய்வு பெற்ற ஆசிரியர் கலாபூசனம் திருமதி .வை.கணேசப்பிள்ளை யாழ் பல்கலைக்கழக வணிகபீட முகாமைத்துவ பேராசிரியர் தேவராஜா இந்துக்கல்லூரி ஆசிரியர்ள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்

வெற்றிவிழாவில் மக்களை கொண்றவர்களுக்கு உயர் விருதுகள்



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலிமுகத்திடலில் கடந்த 19ஆம் திகதி மாபெரும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 15 படையினருக்கு இலங்கையில் படையினருக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான “பரம வீர விபூஷண“ என்ற விருது வழங்கப்பட்டது.
போர்க்களத்தில் தமது உயிரை மதிக்காமல் தீரத்துடன் செயற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற 15 பேரில் ஒருவர் கூட உயிருடன் இல்லை.
1981ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எட்டே எட்டுப் படையினருக்கே இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் சுமார் 24 ஆயிரம் படையினரை இழந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
அவர்களில் 8 பேருக்கு மட்டும் தான் இந்த விருது கடந்த 19ஆம் திகதிக்கு முன்னர் வரை கிடைத்திருந்தது.
கடந்த 19ஆம் திகதி விருது பெற்றவர்களில் இருவர் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியில் இடம்பெற்று மரணத்தைத் தழுவியவர்களாவர்.
ஏனைய பெரும்பாலானோர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் ஆற்றிய பணிக்காக இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
இந்த விருது வழங்கலின் போது, அரசாங்கம் ஆழ ஊடுருவும் அணி குறித்து வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினால் உருவாக்கப்பட்ட ஆழ ஊடுருவும் அணிகள் மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்திலும், நான்காவது கட்ட ஈழப் போரை வெற்றி கொள்வதிலும் முக்கியமான பங்கு வகித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
2002ல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னதாக, 2001 செப்டம்பர் 26ம் திகதி புதுக்குடியிருப்புக்கு அருகே ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் உயிரிழந்தார்.
விடுதலைப் புலிகளின் கடல், வான், தரைப் படைப்பிரிவுகளின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் இவர் மிக முக்கிய பங்கு வகித்தவர்.
இவர் மீதான கிளைமோர் தாக்குதல் ஒட்டுசுட்டானில் இடம்பெற்றதாகவே புலிகளால் தகவல் வெளியிடப்பட்டது.
ஆனால் உண்மையில் அந்த தாக்குதல் நடந்த இடம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில், புதுக்குடியிருப்பு நகருக்கு மிகவும் அருகில் தான்.
அப்போது விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கியது புதுக்குடியிருப்பு.
அதற்கருகே வரை ஆழ ஊடுருவும் அணிகள் நுழைந்தன என்றால், அது புலிகளின் பலவீனத்தை வெளிப்படுத்தி விடும் என்பதால் தான் ஒட்டுசுட்டான் என்று அவர்கள் அறிவித்தனர்.
இந்தத் தாக்குதலின் பின்னரே புதுக்குடியிருப்பை உயர்பாதுகாப்பு வலயமாகப் புலிகள் உருவாக்கினர்.
அதைவிட, மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதியில் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நெடுங்கேணியிலும், இன்னொரு மூத்த தளபதி கேணல் ஜெயம் மன்னாரிலும் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தனர்.
மூன்றாவது கட்ட ஈழப்போரின் இறுதியில் புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கிய ஆழ ஊடுருவும் அணி, நான்காவது கட்ட ஈழப்போரின் அச்சாணியாகவே மாறியது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் அகன்ற போர் அரங்கைத் திறந்து வைத்த இராணுவத் தரப்பை ஊடறுக்க விடாமல் புலிகள் முன்னரங்கை அமைத்துச் சண்டையிட்டனர்.
அப்போது புலிகளின் பின்கள விநியோகத்தையும், முக்கிய தளபதிகளையும் இலக்கு வைத்து ஆழ ஊடுருவும் அணிகள் கிளைமோர் தாக்குதல்களை நடத்தியதுடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக பெரும் நெருக்கடி கொடுத்தது.
இத்தகைய தாக்குதல்கள் நடந்த பின்னர், அந்த இடத்தைச் சுற்றிலும் காடுகளில் தேடுவதற்கும் புலிகள் தமது ஆளணி வளத்தைச் செலவிட வேண்டியிருந்தது.
இது முன்னரங்கில் இருந்த புலிகளின் கவனத்தை, அவ்வப்போது பின்களப் பகுதி நோக்கித் திரும்ப வைத்தது.
முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வரும் வரையில், இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் செயற்பட்டன.
போரின் இறுதிக்கட்டத்தில் இந்த அணியினர் மக்களோடு மக்களாக கலந்து விட்டிருந்ததாகவும் கூடத் தகவல்கள் வெளியாகின.
புலிகளால் எதுவும் செய்ய முடியாத கட்டம் ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்ற கருத்து வலுவாக உள்ளது.
புலிகளின் மரபுவழிப் போர்ப் பலத்தை ஒன்று குவிய விடாமல் திசை திருப்பி, காடுகளில் அவர்களை அலைய விட்டு, போராற்றலை பலவீனப்படுத்த ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் இராணுவத்துக்குக் கைகொடுத்தன.
புலிகளின் பல தளபதிகள் இந்த அணியினரின் கிளைமோர் தாக்குதல்களுக்கு இலக்காகி மரணமாகினர்.
வடபோர்முனைத் தளபதிகளில் ஒருவராக இருந்த லெப்.கேணல் மகேந்தி, இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் போன்றவர்கள் இவர்களில் முக்கியமானவர்கள்.
ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் ஒரு கட்டத்தில் புலிகளின் தளபதிகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி முடக்கி வைக்கின்ற அளவுக்கு நெருக்கடியினைக் கொடுத்தது.
போர்நிறுத்த காலத்திலும் கூட இந்த அணியின் செயற்பாடுகள் வன்னிப் பகுதிக்குள் குறையவில்லை.
அப்போதும் சரி, போர் நடந்து கொண்டிருந்த போதும் சரி, இத்தகையதொரு அணி தம்மிடம் இல்லை என்றும் புலிகளின் பிரதேசத்துக்குள் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் படைத்தரப்பு கூறிவந்தது.
போர் வெற்றி விழாவில் அதிஉயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மேஜர் லலித் ஜெயசிங்கவும் ஒருவர்.
2008ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று அப்போது புலிகள் வசம் இருந்த ஒட்டுசுட்டான் பகுதியில் நடந்த மோதலில், 3வது சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த இவர் கொல்லப்பட்டார்.
ஆழ ஊடுருவும் அணிகளுக்குப் பொறுப்பாக இருந்த இவர், மாவீரர் நாளன்று புலிகளின் முக்கிய தளபதிகளை குறிவைத்து தாக்குவதற்காக ஒரு வாரம் முன்னதாகவே வன்னிக்குள் ஊடுருவியவர்.
முன்னரங்கில் இருந்து 40 கி.மீ உள்ளே ஊடுருவிய இவரது அணி, தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் தேடுதல் நடத்திய புலிகளின் சுற்றிவளைப்பில் சிக்கியது.
இந்த மோதலின் போது லெப்.கேணல் லலித் ஜெயசிங்க மரணமானார்.
இவர் மரணமானபோது அவர் பற்றிய விரிவான தகவல்களை இராணுவத் தலைமையகம், இணையத்தளத்தில் வெளியிட்ட மறுநாளே அதை நீக்கியது.
ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாடுகளை மறைப்பதற்கே அந்த விபரங்கள் நீக்கப்பட்டன.
விருதுபெற்ற இன்னொருவர் 3வது சிறப்புப் படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் சந்தன.
இவர் மாங்குளம் கிளிநொச்சி வீதியில் கிளைமோர் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் செல்லும் போது, மாங்குளம் துணுக்காய் வீதியைக் கடக்க முயன்றபோது புலிகளிடம் மாட்டிக் கொண்டவர். அந்த மோதலில் அவர் மரணமானார்.
நான்காவது கட்ட ஈழப்போர் காலத்திலும், போர் நிறுத்த காலத்திலும் வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்கள் தனியே விடுதலைப் புலிகளுக்கு மட்டும் இழப்புகளை ஏற்படுத்தவில்லை.
மாங்குளம் அருகே நடந்த ஒரு கிளைமோர் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்லப்பட்டார்.
இன்னொரு தாக்குதலில் கிளி பாதர் என்று அழைக்கப்படும், வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளரான கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டிருந்தார்.
அதேபோல பொதுமக்கள் பயணம் செய்த வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.
இதற்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளே பொறுப்பு என்று விடுதலைப் புலிகள் கூறினர். அரசாங்கமோ அதை மறுத்தது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னரணில் இருந்து 30, 40 கி.மீ தொலைவுக்குப் படையினர் எவ்வாறு செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியது.
விடுதலைப் புலிகளுக்குள் நிலவும் உள்முரண்பாடுகள்தான் அங்கு நடக்கும் கிளைமோர் தாக்குதல்களுக்குக் காரணம் என்றும் படைத்தரப்பு கூறியது.
இதனால் தான் மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்ட போது அவர் பற்றிய தகவல் குறிப்புகள் இராணுவ இணையத்தளத்தில் இருந்து அவசரமாக நீக்கப்பட்டன.
இப்போது போர் முடிந்து விட்டது. ஆழ ஊடுருவும் அணிகள் மறைந்து ஒளிந்து ஊடுருவ வேண்டிய அவசியம் இல்லை.
அவர்களின் முகத்தை மறைக்க வேண்டிய தேவையும் இல்லை.
அதேவேளை, வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களில் புலிகள் அல்லாதவர்களும் பாதிக்கப்பட்டனர்.
அவ்வாறான சம்பவங்களுக்கு ஆழ ஊடுருவும் அணி பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
இப்போதைய சூழலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்ட விவகாரம் போர்க்குற்றமாகவே பார்க்கப்பட்டு விடும்.
ஆனாலும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படும் நிலையில், ஆழ ஊடுருவும் அணியை அரசாங்கம் பகிரங்கப்படுத்தியது துணிச்சலான விடயம்தான்.

தமிழரசுக்கட்சி வருங்காலத்தில் மாகாத்மா காந்தியாம்


இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளை மறுதலிக்குமாக இருந்தால், இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் ஆரம்பித்து, அவற்றை அடையும் வரை போராடுவோம் என தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாவினால் தீர்மானம் வெளியிடப்பட்டது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியம்:
1. அர்த்தமுள்ள அதிகூடிய அதிகாரப் பகிர்வு ஊடாக வடகிழக்கு பிராந்தியத்தில் எமது மக்கள் தமது அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சியதிகாரங்கள் அவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்.
இப்படியானதொரு அரசியல் தீர்வு தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்டும் கூட அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமையினால் இலங்கையின் தேசியப் இனப் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
மேலும் காலத்தை வீணடிக்காமல் இந்த அடிப்படையிலும் முஸ்லிம் மக்களது அபிலாஷைகளை அங்கீகரிக்கும் வகையிலும் அரசியல் தீர்வொன்றுக்கு அரசாங்கம் இணங்க வேண்டுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு:
2. வடகிழக்கு பிராந்தியத்தில் போர்ச்சு10ழலினால் இடம் பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் உடனடியாக மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் வீட்டு வசதிகளுடன் மீள்குடியேற்றப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
போரினால் நிர்க்கதியாக்கப்பட்ட வாழ்விழந்த பெண்கள் (தலைமை தாங்கும் பெண்கள்), பெற்றோரை இழந்த பிள்ளைகள், மாற்றுத்திறனாளர்கள் ஆகியோருக்கு புனர்வாழ்வும் மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும்.
இந்தக் கடமைகளின் மேற்கொள்வதற்கு மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும். இனமத அரசியல் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பகிர்ந்தழிக்கப்பட வேண்டும்.
இராணுவ ஆக்கிரமிப்பு நிலை விலக்கல்:
3. வடகிழக்குப் பிராந்தியம் இராணுவ மயமாக்கப்பட்ட நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்களின் நில உரிமைஇ வாழ்வாதார உரிமை என்பன சுதந்திரமாக செயற்படுத்தும் நிலமை உருவாக வேண்டும்.
மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறாக நிற்கும் இராணுவத் தலையீடு முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். இதே போன்று குடியியல் நிர்வாகத்தில் உள்ள இராணுவத் தலையீடு முற்றாக அகற்றப்பட வேண்டும்.
வடகிழக்கு பிராந்தியத்தில் தலைவிரித்தாடும் மக்களுக்கெதிராக மனித உரிமை மீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வடகிழக்கில் தமிழ் மொழி தெரியாத சிங்கள இராணுவ ஆளுனர்கள், தமிழ் மொழி தெரியாத சிங்கள அரச அதிபர்கள், சிங்கள அதிகாரிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும்.
காணாமல் போனோர், கைதிகள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு:
4. காணாமல் போயுள்ளவர்கள், சரணடைந்த பின் காணாமல் போனவர்கள் சம்மந்தமாக விசாரணைகள் நடாத்தப்பட்டு இவற்றுக்கு பொறுப்பாக உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மரண சான்றிதல் மற்றும் பொருத்தமான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் அல்லல் உறும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் 1970ஆம், 1980ஆம் ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முன்மாதிரிகளைப் பின்பற்றி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். வாழ்க்கை செலவு சுமையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பு வாழ்வை ஏற்படுத்துதல்.
5. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் முழு நாடும் அல்லல்படும் சூழ்நிலையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வருமானம் வாழ்வாதாரங்களை இழந்த வடகிழக்கு பிராந்திய மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். வேலையற்றவர்களுக்கும், விசேஷமாக வடகிழக்கு பிராந்தியத்தில் வாழும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
பொதுச் சேவையில் 5 வீதத்திற்க்கு குறைந்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையின் காரணமாக தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள். அதனால் பொதுச் சேவையில் அவர்களுடைய விகிதாசாரம் தேசிய விகிதாசார அடிப்படையில் தாமதமின்றி உயர்த்தப்பட வேண்டும்.
புலம் பெயர்ந்த உறவுகளுக்கு:
6. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், தாயகத்திலுள்ள தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை உணர்ந்து தமிழ் மக்களுடைய நம்பிக்கையுள்ள பிரதிநிதிகள் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு அவற்றை அடைவதற்கு ஆதரவாக செயற்படுமாறு புலம் பெயர்ந்த உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
அத்தோடு மீள்குடியேற்ற விடயங்களில் எமது மக்களுக்கு வேண்டிய பொருள் உதவி, நிபுணத்துவ உதவி போன்றவற்றை ஒரு குறித்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வழங்க முன்வர வேண்டுமென்றும் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
சர்வதேச சமூகத்திற்கு:
7. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மனித உரிமை பாதுகாப்பு சம்மந்தமாக சர்வதேச சமூகம் இதுவரை ஆற்றியிருக்கும் பங்களிப்புக்காக அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், தொடர்ந்து தமிழ் மக்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும் தமிழ் மக்களின் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் தேவையான உதவிகளையாற்றி அதன் மூலமாக நாட்டில் நீதி, நேர்மை, கௌரவம், சமத்துவம் என்ற அடிப்படையில் விசுவாசமான புரிந்துணர்வும் சமத்துவமும் நல்லுணர்வும் ஏற்படுத்த வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
தாயக மக்களுக்கு:
8. எம்மால் நியாயமான முறையின் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எமது மக்கள் பரிபூரணமான ஆதரவை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் இவற்றை அடைவதற்கு இந் நாட்டின் சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் ஏனைய முற்போக்கு சக்திகளும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டுமென வினயமாக வேண்டுகிறோம். 
சர்வதேச விசாரணை

9. இலங்கையில் 2009 மேயில் முடிவடைந்த போரின்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், உரிமைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா.செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்வின் சிபாரிசுகளின் படி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு, சர்தேவ விசாரணை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல் இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவால் செய்யப்பட்ட பொறுப்புக்கூறும் கடப்பாடு தவிர்ந்த ஏனைய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 2012ஆம் ஆண்டு மார்ச் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால் நாட்டில் விசுவாசம், புரிந்துணர்வு ஏற்பட்டு கௌரவமான சமாதானம் ஏற்படும்.
சாத்வீகப் போராட்டத்துக்கு அறிவித்தல்:
இந்த மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திடம் மிகவும் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். இவற்றை அரசாங்கம் மறுதலிக்குமாக இருந்தால் இந்த நியாயமான இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் உரிய முறையில் ஆரம்பித்து அவற்றை அடையும் வரை போராடுவோம் என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு உறுதியுடன் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

8 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு


சாவகச்சேரி - நாவற்குழி வடக்கு பகுதியில் நேற்றிரவு 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

ராசதுறை சாந்தன் என்ற 19 வயது இளைஞன் குறித்த தம்பிராசா சபித்தா என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 

சந்தேகநபர் நாவட்குழி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பாடசாலை ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது. 

யாழில் சினீமாப்பாணியில் இளம்பெண் கடத்தல்



யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பால்ப்பண்ணை வீதியில் பிளசர் ரக மோட்டார் சைக்கிளொன்றில் தந்தையுடன் பயணித்த யுவதி ஒருவர், ஹயஸ் வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா அர்ச்சனா அம்பிகா என்ற 23 வயதான குடும்ப பெண் ஒருவரே மேற்படி சம்பவத்தில் இன்று காலை கடத்தப்பட்டவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…
இன்று காலை குறித்த யுவதியும், தந்தையும் பால்ப்பண்ணை வீதியால் பயணித்துக் கொண்டு இருக்கையில், ஆலடி சுடலை பகுதியில், மறைவில் இருந்து புறப்பட்ட ஹயஸ் வான் மோட்டார் வண்டியின் குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வானில் இருந்து குதித்தவர்கள், தந்தையை தள்ளி தெருவோரத்தில் விழுத்திவிட்டு குறித்த யுவதியை கடத்தி சென்றுள்ளனர்.
கடத்திய வானின் வாகன இலக்கம் யுவதியின் தந்தையால் கோப்பாய் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.