//]]>3

வியாழன், 19 ஏப்ரல், 2012

அதிசக்தி வாய்ந்த அக்னி-5 ஏவுகணையை ஏவியது இந்தியா



இந்தியாவின் அதிநவீன ஏவுகணை அக்னி-5 இன்று காலை 8.05க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. 

அக்னி ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. மேலும் இது ஒரு டன் எடை கொண்ட ஆயுதங்களையும் தாங்கும் திறன் கொண்டது. ஒலியைவிட 24 மணிநேரத்தில் இலக்கைத் தாக்கும் திறனை உடையது. 

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணையை இந்தியா ஏவியதன் மூலம் அதிநவீன ஏவுகணை வைத்திருக்கும் அமெரிக்கா, ரசியா, சீனா, பிரான்ஸ் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. 


திபெத் எல்லைப் பகுதியில் சீனா ஏவுகணைகளைக் குவித்து வரும் நிலையில் இந்தியாவின் அதிநவீன அக்னி ஏவுகணை சோதனை குறிபிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது. 

Youth hacked to death in Trincomale​e தமிழ் இளைஞர் வெட்டிப் படுகொலை



The body of a young man who had been hacked to death was recovered from a home garden at Aiyanagar in Trincomalee at 10.20 pm last night.



திருகோணமலை ஐயனான்கேணி பிரதேசத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய் யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்படுகொலை சம்பவம் நேற்று இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை பொலிஸார் குறிப்பிட்டனர்.
வைரவர்கோவில் வீதி பாலயூத்து பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த திருகோணமலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

SLBC Director dies following accident in Rambewa


A Director and announcer of the Sri Lanka Broadcasting Cooperation (SLBC) Nurania Hassan was killed this morning and five others injured when the vehicle they were travelling in collided with a lorry at Rambawa,Police 

அழகான ஒரு மிருகம்




கேக் ஒன்றை வெட்டி சர்ச்சையில் மாட்டிய அமைச்சர்


சுவீடன் நாட்டில் கறுப்பர்கள் வெள்ளையர்கள் என்ற பேதம் மோசமாக காணப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் அந் நாட்டு கலாச்சார அமைச்சர் lena adelsohn liljeroth நிர்வாண பெண் வடிவிலான கேக் ஒன்றை வெட்டி சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
கறுப்பின பெண் வடிவில் அமைந்திருந்த கேக்கின் பெண் உறுப்பு பகுதியில் கத்தியால் புன்முறுவலோடு கேக்கை வெட்டியுள்ளார்.
இச் சம்பவம் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவத்தினால் அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.



High flying fashions at Boston hotel இந்தரத்தில் பறந்த வீரர்கள்



The Revere Hotel in Boston, Ma. celebrated its grand opening on April 18 with a vertical fashion show. The Boston Rock Gym provided the models who rappelled down the exterior of the 24-story hotel wearing outfits created by the students from the Massachusetts College of Arts and Design and by Ted Baker London.


லண்டனில் நிகழ்ந்த சம்பவம் 

குஞ்சை ஈன்ற கோழி



கோழியில் முட்டை போடுவது தான் வழக்கம். ஆனால், கோழியே குஞ்சு ஒன்றை ஈன்ற அதிசயம் சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது.

வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர் வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது. 

இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது. 

இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார். 

கோழியின் உடலை பரிசோதனை செய்ததாகவும், அந்தக் கோழியின் உடலுக்குள் முட்டை அடைகாக்கப்பட்டு, குஞ்சு பொரித்த நிலையில் அது வெளிவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அட்டூழியங்களைக் கபட்டும் ஆவணங்கள்



பிரித்தானியா அரசின் இறுதி ஆண்டுகளில் நடந்த சித்ரவதைகளும், கொலைகளும் குறித்த அரசாங்க ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் சுதந்திரமடைந்த போது, இது குறித்த கோப்புகள் ரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கென்யாவின் மவு மவு கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் 1950ஆம் ஆண்டில் மலாயாவின் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ஆகியோருக்கு எதிரான பிரிட்டனின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இதில் அடங்குகின்றன.
டியோகோ கார்சியாவில் அமெரிக்க தளத்தை நிறுவ, வழி செய்வதற்காக சாகோஸ் தீவுகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த குடும்பங்களை வெளியேற்றியமை குறித்து ஐ.நா.வுக்கு பிரிட்டன் அதிகாரிகள் தவறான தகவல்களைக் கொடுத்து அதனை தவறாக வழி நடத்தியதாக இந்த ஆவணங்கள் கூறுகின்றன.
இவற்றைப் போன்ற மேலும் பல ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்றது டிஸ்கவரிக்கு இன்று என்ன நிலை



அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த 1984ம் ஆண்டில் “டிஸ்கவரி” விண்கலத்தை உருவாக்கியது.
கடந்த 1984ம் ஆண்டு ஓகஸ்ட் 30ம் திகதி தனது முதல் பயணத்தைத் தொடங்கிய டிஸ்கவரி, கடந்த 27 ஆண்டுகளில் 39 தடவை விண்ணில் வெற்றிகரமாக பறந்து பணியாற்றியுள்ளது.
இந்நிலையில் தனது கடைசிப் பயணத்தை கடந்த ஆண்டு மார்ச் 9ம் திகதி நிறைவு செய்தது.
மொத்தத்தில் 365 நாட்கள் அதாவது ஓராண்டு விண்ணில் இருந்து சாதனை படைத்திருக்கிறது டிஸ்கவரி.
இதையடுத்து டிஸ்கவரி பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
சில திகதிகளுக்கு முன்பு தலைநகர் வாஷிங்டன் பகுதியில் முக்கால் மணி நேரம் வட்டமடித்த டிஸ்கவரிக்கு மக்கள் பிரியாவிடை கொடுத்தனர்.
நேற்று வர்ஜீனியா மாநிலம் சான்டிலி நகரில் உள்ள தேசிய விண்வெளி அருங்காட்சியகத்துக்கு ‘நாசா 747’ விண்கலம் தாங்கி விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

மீட்பு விமானப் படையின் புதிய சாதனை



சுவிசின் மீட்பு விமானப் படையான Rega கடந்தாண்டு அதிகளவு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளது.
இந்த படை கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் 14,240 முறை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த மீட்பு விமானப்படையின் அவசர கால ஜெட் விமானங்கள் 698 முறை அவசர காலப் பணிகளை மேற்கொண்டன. பயண விமானங்களில் மருத்துவக்குழு 147 முறை பல்வேறு இடங்களுக்கு சென்று காயம்பட்டோருக்கும் நோயுற்றோருக்கும் சிகிச்சையளித்தது.
கடந்தாண்டு TCS எனப்படும் சுவிட்சர்லாந்தின் சுற்றுலா மன்றத்தின் மூலமாக ஓர் அவசர கால விமான சேவை புதிதாகத் தொடங்கப்பட்டது. இந்த TCS ஜுரிச்சில் உள்ள அல்பைன் ஏர் ஆம்புலன்ஸ் (AAA) என்ற அவசரகால விமான சேவையுடன் இணைந்து தனது புதிய சேவையைத் தொடங்கியது.
சுவிஸ்ஸின் மீட்பு விமானப்படைக்கு 2.4 மில்லியன் புரவலர்கள் இருக்கின்றனர். இதனால் இந்த சேவை பாதிக்கப்பட்டோரிடம் சேவைக் கட்டணம் எதுவும் பெறாமல், மருத்துவக் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு மூலமாகவும் பணம் எதுவும் பெறாமல் உதவி செய்து வருகிறது.

slbc யின் சந்தைப் படுத்தல் பணிப்பாளர் வாகன விபத்தில் பலி



பிரபல ஒலிபரப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான நுரானியா ஹசன் வாகன விபத்தொன்றில் மரணமடைந்துள்ளார்.

அனுராதபுர பிரதேசத்தில் லொறி ஒன்றும் வான் ஒன்றும் மோதிக் கொண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வாகன விபத்தில் மேலும்  6 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் வாகனம், ரம்பாவ பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நுரானியா ஹசன் உயிரிழந்துள்ளார்.

நுரானியா ஹசன், வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள் பயணமாகியுள்ளனர். இவர்கள் சென்ற வாகனமே இன்று அதிகாலை 4.30 மணியளவில் ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் நூரானியா ஹசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என் விடயத்தில் ரஜினியை சம்பந்தப்படுத்தாதீர்கள்: தனுஷ்


கொலிவுட்டில் தனுஷ் நடித்த “3” திரைப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இப்படத்தை தனுசின் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இயக்கினார்.
இந்நிலையில் 3 திரைப்படம் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த நஷ்டத்தை ரஜினிகாந்த் சரிசெய்வதாக தகவல் வெளியானது.

இந்த விடயத்தை நாயகன் தனுஷ் மறுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ரஜினி மகளை திருமணம் செய்து விட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக, இட்டுக்கட்டி வரும் செய்திகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

3 படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. அப்படி நஷ்டமென்று யாரும் சொல்லிவில்லை. அப்படியே நஷ்டம் வந்தாலும் அதை ஈடு செய்யும் வலிமையை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.

என் குடும்ப பிரச்சினையை நானே பார்த்துக் கொள்வேன். ரஜினியை இந்தப் படத்தோடு ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சமரன்' படத்தின் 'சிங்கிள்' இசை



கொலிவுட்டில் நாயகன் விஷால், நாயகி த்ரிஷா இருவரும் முதன் முறையாக சமரன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் 'சிங்கிள்' இசையை மே மாதம் வெளியிட இயக்குனர் திரு முடிவு செய்துள்ளார்.
சமரன் படத்தில் காதல் ஜோடியாக விஷாலும், த்ரிஷாவும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் சக்ரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய், சுனைனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இயக்குனர் திருவின் 'சமரன்' காதல், பொழுதுபோக்கு நிறைந்த ஆக்ஸன் படம் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

மேலும் சமரன் படத்துக்கான காட்சிகளை தாய்லாந்து, மூணாறு ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளார்கள்.

எதிர் வரும் மே மாதத்தில் இப்படத்தின் 'சிங்கிள்' இசையை வெளியிட படக்குழுவினர் யோசித்துள்ளார்கள்.

காதலன் தற்கொலையை நேரடியாக பார்த்த காதலி


பிரிட்டனில் ஓக்ஸ்போர்ட் பகுதியைச் சேர்ந்த ஆட்ரியன் றோலண்ட் (வயது 53) ஆட்டோ மொபைல் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
இவரும் காதலி சூலி ஜாலின்ஸ்கியும் மார்ச் மாதம் புதுடெல்லி வந்தனர். தாஜ்மஹால் உட்பட சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்த்தனர்.


இதையடுத்து காதலி சூலி பிரிட்டனுக்கு புறப்பட, றோலண்ட் தென்டெல்லியில் கிரீன் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தினமும் இணையதளம் மூலமாக ஒருவரையொருவர் பார்க்கும் படி பேசிக்கொள்வர்.


சம்பவதன்று இருவரும் பேசுகையில் றோலண்ட் தன்னை யாரோ கொலை செய்ய வருவது போல அறையில் அங்கும் இங்கும் ஒரு மனநோயாளி போல ஓடியுள்ளார். இந்நிகழ்வை பிரிட்டனிலிருந்து காதலி சூலி பார்த்து அதிர்ச்சியுற்றார்.


மேலும் இந்நிகழ்வை தன் தோழியை அழைத்தும் பார்க்க வைத்தார். காதலன் றோலண்ட் ஓடியவாறு சமயலறையில் ஒரு போத்தலை எடுத்து அதை உடைத்து தனது கழுத்தில் குத்திக்கொண்டார்.


இதனால் மளமளவென ரத்தம் பீறிட்டு ஓடியது. உடனே சூலி பிரிட்டன் தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுக்க அவர்கள் டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு விடயத்தை தெரியப்படுத்தினர்.


பின்னர் றோலண்டை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு பொலிஸ் விரைந்தது. இருப்பினும் பொலிஸாரால் றோலண்டை காப்பற்ற முடியவில்லை.
இந்நிகழ்வை பார்த்த காதலி சூலி மயக்கமடைந்தார். றோலண்ட் உடலை காதலியுடன் ஒப்படைக்க இந்தியத் தூதகரம் முடிவெடுத்துள்ளது.

உலக கோடீஸ்வரரருக்கு புற்றுநோய் பாதிப்பு



உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள வாரன் பப்பெட்டுக்கு புற்றுநோய் பாதித்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 81 வயதான பப்பெட் தனது நிறுவன முதலீட்டாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, எனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
எனினும் இது தொடக்க நிலை என்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நவீன சிகிச்சையின் மூலம் விரைவில் குணமடைந்து விடுவேன் என்று நம்புகிறேன். இதுகுறித்து முதலீட்டாளர்கள் பயப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
பப்பெட் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் வகித்தவர் என்பது