//]]>3

வியாழன், 19 ஏப்ரல், 2012

என் விடயத்தில் ரஜினியை சம்பந்தப்படுத்தாதீர்கள்: தனுஷ்


கொலிவுட்டில் தனுஷ் நடித்த “3” திரைப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இப்படத்தை தனுசின் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இயக்கினார்.
இந்நிலையில் 3 திரைப்படம் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த நஷ்டத்தை ரஜினிகாந்த் சரிசெய்வதாக தகவல் வெளியானது.

இந்த விடயத்தை நாயகன் தனுஷ் மறுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ரஜினி மகளை திருமணம் செய்து விட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக, இட்டுக்கட்டி வரும் செய்திகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

3 படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. அப்படி நஷ்டமென்று யாரும் சொல்லிவில்லை. அப்படியே நஷ்டம் வந்தாலும் அதை ஈடு செய்யும் வலிமையை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.

என் குடும்ப பிரச்சினையை நானே பார்த்துக் கொள்வேன். ரஜினியை இந்தப் படத்தோடு ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »