//]]>3

வியாழன், 19 ஏப்ரல், 2012

ஓய்வு பெற்றது டிஸ்கவரிக்கு இன்று என்ன நிலை



அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த 1984ம் ஆண்டில் “டிஸ்கவரி” விண்கலத்தை உருவாக்கியது.
கடந்த 1984ம் ஆண்டு ஓகஸ்ட் 30ம் திகதி தனது முதல் பயணத்தைத் தொடங்கிய டிஸ்கவரி, கடந்த 27 ஆண்டுகளில் 39 தடவை விண்ணில் வெற்றிகரமாக பறந்து பணியாற்றியுள்ளது.
இந்நிலையில் தனது கடைசிப் பயணத்தை கடந்த ஆண்டு மார்ச் 9ம் திகதி நிறைவு செய்தது.
மொத்தத்தில் 365 நாட்கள் அதாவது ஓராண்டு விண்ணில் இருந்து சாதனை படைத்திருக்கிறது டிஸ்கவரி.
இதையடுத்து டிஸ்கவரி பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
சில திகதிகளுக்கு முன்பு தலைநகர் வாஷிங்டன் பகுதியில் முக்கால் மணி நேரம் வட்டமடித்த டிஸ்கவரிக்கு மக்கள் பிரியாவிடை கொடுத்தனர்.
நேற்று வர்ஜீனியா மாநிலம் சான்டிலி நகரில் உள்ள தேசிய விண்வெளி அருங்காட்சியகத்துக்கு ‘நாசா 747’ விண்கலம் தாங்கி விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக