//]]>3

வியாழன், 19 ஏப்ரல், 2012

அட்டூழியங்களைக் கபட்டும் ஆவணங்கள்



பிரித்தானியா அரசின் இறுதி ஆண்டுகளில் நடந்த சித்ரவதைகளும், கொலைகளும் குறித்த அரசாங்க ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் சுதந்திரமடைந்த போது, இது குறித்த கோப்புகள் ரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கென்யாவின் மவு மவு கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் 1950ஆம் ஆண்டில் மலாயாவின் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ஆகியோருக்கு எதிரான பிரிட்டனின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இதில் அடங்குகின்றன.
டியோகோ கார்சியாவில் அமெரிக்க தளத்தை நிறுவ, வழி செய்வதற்காக சாகோஸ் தீவுகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த குடும்பங்களை வெளியேற்றியமை குறித்து ஐ.நா.வுக்கு பிரிட்டன் அதிகாரிகள் தவறான தகவல்களைக் கொடுத்து அதனை தவறாக வழி நடத்தியதாக இந்த ஆவணங்கள் கூறுகின்றன.
இவற்றைப் போன்ற மேலும் பல ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக