//]]>3

திங்கள், 21 மே, 2012

பேஸ் புக் ஸ்தாபகருக்கு திடீரென திருமண


பேஸ் புக் சமூக வலைத் தளத்தின் ஸ்தாபகர் Mark Zuckerberg திடீரென திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். தனது நீண்ட நாள் காதலியான 27 வயது Priscilla Chan என்ற பெண்ணை Mark Zuckerberg கரம் பிடித்துள்ளார்.கலிபோர்னியாவின் பாலோ அல்டோவில் அமைந்துள்ள வீட்டில் இந்த திருமண வைபவம் நடைபெற்றுள்ளது.
மிகவும் எளிமையான ரூபி மோதிரம் ஒன்றையே Mark Zuckerberg தனது மனைவிக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒன்பது ஆண்டுகளாக இருவருக்கும் இடையில் காதல் நீடித்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
Priscilla Chan கலிபோர்னியா மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்து கொண்டுள்ளார்,

17 வயது தமிழ் சிறுமி மீது பாலியல் வல்லுறவு


காலி – ஹக்கடுவை பகுதி ஹோட்டல் ஒன்றில் 17 வயது தமிழ் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இரு சவுதிஅரேபிய பிரஜைகளும் பெண்களை பணத்திற்கு விற்ற குற்றத்தில் இலங்கைப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை பொலிஸாரால் இவர்கள் நேற்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண் மருதனை பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மட்டக்களப்பு – ஒந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேகநபர்கள் இன்று (21) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்


யாழ். வடமராட்சியின் கெருடாவில் பகுதியில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் கெருடாவில் தெற்கைச் சேர்ந்த கோணேஸ்வர குருக்கள் செந்தூரன் வயது 15 என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளர்.
தனியார் கல்வி நிலையத்திற்கு கடந்த (18) சனிக்கிழமை காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்ட இவர் பின்னர் வீடு திரும்பவில்லையென்பதோடு கல்வி நிலையத்திற்கும் செல்லவில்லையெனத் தெரியவருகின்றது.
இது தொடர்பில் இவரது பெற்றோரால் வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரோபோ தொழில் நுட்பத்தில் உயிர்காக்கும் படகு



ரோபோ தொழில் நுட்பத்தில் உயிர்காக்கும் படகு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எமிலி என பெயரிடப்பட்டுள்ள இவ் ரோபோ படகு தானியக்க முறையில், கடலில் உயிருக்கு போராடுபவரின் அருகில் சென்று அவர்களை மீட்கக்கூடியது.
சிறிய அளவிலான இப் படகை உலங்கு வானூர்திகளில் இருந்தும் கடலினுள் போட்டு, தத்தளிப்பவர்களை மீட்க முடியும்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உயிர் காப்பு பிரிவில் எமிலி பயன்படுத்தப்பட உள்ளது. இப் பிரிவில் கடமையாற்றும் Remy T. Smith என்ற உயர் அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
தற்போது கோடைகாலம் என்பதால் கடற்கரைகளில் சனக்கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும். இதனால் இப் படகின் தேவை வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 1000 மெற்பட்ட பிணங்கள் மீட்பு



டெல்லியில் இந்த ஆண்டு 1000க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெற்கு டெல்லியில் ராணுவ காலனி அருகே நேற்றுமுன்தினம் கிடந்த பையில் துண்டு துண்டாக வெட்டிய நிலையில் ஆண் உடல் இருந்தது. இதுபோல மத்திய டெல்லியில் பிரசாத் நகரில் கிடந்த பையில் முற்றிலும் அழுகிப் போன நிலையில் வாலிபர் உடல் இருந்தது.
இவற்றோடு சேர்த்து இந்தாண்டு மட்டும் 1,012 அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 3,337 அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது.

வடக்கு டெல்லியில் தான் அதிக சடலங்கள் கிடந்துள்ளன. அங்கு 245 பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய டெல்லியில் 116, வடகிழக்கு டெல்லியில் 68, கிழக்கு 60, மேற்கு 56, வடமேற்கு 55, தெற்கு 48, புதுடெல்லியில் 31, தென்மேற்கு 28 என்ற எண்ணிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அருகே உள்ள மாநிலங்களில் கொலை செய்யப்படும் நபர்களின் உடல்களை டெல்லியில் வந்து போட்டுவிடுவதாக போலீசார் கூறுகின்றனர். இது குறித்து கவலை தெரிவித்துள்ள முதல்வர் ஷீலா தீட்சித், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சீன் காட்டப் போய் கவுண்டடித்த கவர்ச்சி பெண் (video)

காரில் ஏறுவதற்கு பிலிம் காட்டிய கவர்ச்சி பெண்ணின் நிலைமையை பாருங்கள்…!




பிடல் காஸ்ட்ரோ வரலாற்றுச்சுருக்கம்



பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) கியூபாவின் குடியரசுத் தலைவர் ஆவார். 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் ஜனாதிபதியாக பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார்.
இச் சாதனை தலைவரின் வரலாற்றில் நினைவு கூறத்தக்க பதிவுகள் இங்கு பதிக்கப்படுகின்றன…!
1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு
1945-50 – அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.
1952 – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.
1953 – சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.
1955 – சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.
1956 திசம்பர் 2 – கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.
1959 – காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.
1960 – குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.
1061 – அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.
1962 – கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.
1976 – கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.
1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.
1980 – அகதி நெருக்கடி – சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.
1991 – சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை.
1993 – கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.
1996 – கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.
2000 – ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி!
2002 – ‘தீய நாடுகளின்’ அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.
2006 – சூலை – அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.
2008 – பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்.

வித்யாபாலன் வேடத்தில் அனுஷ்கா



இந்தி நடிகை வித்யாபாலன் மற்ற கதாநாயகிகள் நடிக்க தயங்கும் வேடங்களில் துணிச்சலாக நடித்து புகழ் சம்பாதிக்கிறார். ‘ தி டர்டி பிக்சர்’ படத்தில் ஆபாச கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கினர். ஆனால் வித்யாபாலன் அந்த கேரக்டரில் நடித்து தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார்.
அதன் பிறகுதான் மற்ற நடிகைகள் அந்த கேரக்டரில் நடிக்காமல் விட்டதற்காக மனம் வெதும்பினர். அதன்பிறகு ‘கஹானி’ என்னும் இந்தி படத்தில் கர்ப்பிணி வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். படம் முழுக்க வயிறை தள்ளிக் கொண்டு கர்ப்பிணிபோல் நடந்து சிரமப்பட்டு நடித்திருந்தார்.
வித்யாபாலன் நடித்த கஹானி படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்தால் வித்யாபாலனின் கர்ப்பிணி வேடத்தில் தான் நடிக்க தயாராக இருப்பதாக  அனுஷ்கா கூறியிருந்தார்.
இந்நிலையில் தெலுங்கில் ரீமேக் ஆகும் இப்படத்தில் நடிக்க அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வானம் படத்தில் அனுஷ்கா விலை மாது கேரக்டரில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. ஆகையால் இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்கும் அவர் பொருத்தமாக இருப்பார் என தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா பற்றிய ஆய்வுக்கட்டுரை


சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சற்று முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சற்று முன்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியில் அழைத்து வரப்பட்டு விடப்பட்டுள்ளார்
ஜெனரல் சரத் பொன்சேகா 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தவர்.
இவர் இலங்கை போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி இலங்கைக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்திருந்தார்.
நவம்பர் 16,2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ்விற்கு கடும் சவாலாக போட்டியிட்டிருந்தார்.
எனினும் சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி இரவு, கொழும்பில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இராணுவ தளபாட கொள்முதலில் முறைகேடு செய்ததாக சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் படி பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த சிறைத் தண்டனை கடந்த மாதம் 26ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் அவருக்கு பிணை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 26ஆம் திகதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் இந்த வழக்கின் இடையில் வௌ்ளைக்கொடி விவகாரம் பிறிதொரு வழக்காக பொன்சேகாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்தது.
அதில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சிறைத்தண்டனை தொடர்பாக பொன்சேகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து ஒரு நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் பொன்சேகாவை விடுவித்து அவரை நிரபராதி என தீரப்பளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஏனைய இரண்டு நீதிபதிகளும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொன்சேகாவை குற்றவாளியென தீர்ப்பளித்து மூன்று வருட சிறைத்தண்டனை விதித்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி தமது பிணை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சிறைத் தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மேற்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பின்னர், ஹைகோப் நிதி மோசடி வழக்கில் இருந்து சரத் பொன்சேகாவை முற்றாக விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் மார்ச் 15ஆம் திகதி தீர்ப்பளித்துள்ளது.
கைக்கோட் வழக்கில் மேல் நீதிமன்றில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இராணுவ நீதிமன்ற குற்றச்சாட்டுக்களோடு ஒத்துப்போவதாக தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ் தீர்ப்பினை வழங்கினார்.
இராணுவ நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் கைக்கோட் வழக்கு தேவையற்றது என சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனால் ஒரே குற்றத்திற்கு இரு நீதிமன்றில் தீர்ப்பு வழங்க முடியாது என சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இக்கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி சுனில் ராஜபக்ஷ், ஹைகோப் வழக்கில் இருந்து சரத் பொன்சேகாவை விடுவித்து தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி பொன்சேகாவை நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்வதாக உறுதி வழங்கினார் என அனோமா பொன்சேகா தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியிருந்தது.
இந்நிலையில், சரத் பொன்சேகா நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜனாதிபதி தேர்தலின் போது இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற வீரர்களை தன்னுடன் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்தே அவர் விடுதலை செய்யப்ட்டார்.
இந்த நிலையில் சரத் பொன்சேகா தாக்கல் செய்த வெள்ளை கொடி வழக்கு, பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு போன்றவை தொடர்பில் மேன்முறையீடு இன்று வாபஸ் பெறப்பட்டது.
அதன் பின்னர் வெலிக்கடை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சரத் பொன்சேகா சற்று முன்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டு சாதாரண பிரஜையாக உலகின் மத்தியில் தோன்றினார்.

ரஜினி மகளை கடுப்பாக்கும் கமலஹாசன் மகள்…!



தனுஷ் – ஸ்ருதி உறவு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா கோபத்துக்கு உள்ளாகியுள்ளாராம். இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் – ஐஸ்வர்யா – ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், தனுஷ் – ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான். ஆனால் அது சாதாரணமாக கணவன் – மனைவி போட்டுக் கொள்ளும் சண்டையே. எந்த வீட்டில் தான் சண்டை இல்லாமல் இருக்கு.
தனுஷ் – ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் தனுஷ் ரொம்ப நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து மருமகள் கடும் கோபமடைந்தது உண்மை தான்.
தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ்வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா எல்லோரும் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் அன்பான குடும்பமா இருக்கோம். இதை எவனாலும் உடைக்க முடியாது என்று தெரிவித்தார்.

கிரணின் சூடான குட்டை ஆடை கவர்ச்சி புகைப்படங்கள்!

நடிகை கிரணின் சூடான புகைப்படங்கள் உங்களுக்காக…!



முட்டைக்கு அடிபடும் பாம்பு (video)


தனக்கு கிடைத்த உணவை எப்படியோ ஒரு வயிற்றுக்குள் தான் போக போகிறது என்பதை அறியாமல் தனது தலைகளுக்குள் போட்டி போடும் முட்டாள் பாம்பை பாருங்கள்…!

இலங்கை 20-20 யில் அழகிகள் விருந்து


டெல்லியில் நேற்று முன்தினம் போலீசார் அபார்ட்மென்ட் ஒன்றில் அதிரடியாக சோதனை நடத்தி சோனு, தேவேந்திரா உள்பட 4 கிரிக்கெட் சூதாட்ட தரகர்களை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக பிடிபட்ட சூதாட்ட தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த நிழல்உலக தாதா சோட்டாசகீலின் பின்னணியில் இந்த கும்பல் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட கும்பல் இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலககோப்பை 20-20 ஆட்டத்தில் தங்களது வேலையை காட்ட திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இதற்காக அழகிகளை இவர்கள் ஏற்பாடு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 8 அழகிகளுடன் இலங்கை செல்ல முயன்ற விபசார புரோக்கர் ஒருவர் போலீசில் சிக்கினார். இந்த கும்பலுக்கும், சூதாட்ட கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு அழகிகளை விருந்தாக்கி தங்கள் பக்கம் இழுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ள இந்த கும்பல் திட்டம் தீட்டி வந்துள்ளது. இதற்காக சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் சமீப காலமாக அடிக்கடி இலங்கை சென்று வந்துள்ளனர். இதனை உறுதிபடுத்தும் விதமாக போலீசார் சமீபத்தில் இலங்கை சென்று வந்த பயணிகள் பட்டியலில் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் பெயர் உள்ளதா என விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த சூதாட்ட கும்பல் சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த 20-20 தொடரிலும் கைவரிசை காட்டியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே இந்த சூதாட்ட தரகர்கள் குறித்த விவரங்களை டெல்லி போலீசார் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்களில் விபத்தில் கிராம சேவையாளர் பலி!


வடமராட்சியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிராம சேவையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமாகியுள்ளார்.
அத்தோடு படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மிகவும் மோசமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.45 மணியளவில் இச்சம்பவம் வடமராட்சி குஞ்சர் கடை சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் துன்னாலையைச் சேர்ந்த என்.சிறிக்குமார் வயது 36 என்ற நெல்லியடி கிழக்கைச் சேர்ந்த கிராம சேவையாளரே சம்பவத்தில் பலியானவராவார்.
இவர் வடமராட்சி நோக்கி வந்துகொண்டிருந்தபோதே மேற்படி சம்வம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பாஷையூர் பற்றையில் 1 நாள் சிசு மீட்பு!


யாழ். பாஷையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலையடுத்து, இச்சிசு மீட்கப்பட்டதாகவும் அக்காணியின் புற்தரையில் இச்சிசு இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இச் சிசு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சிசுவை விட்டுச் சென்ற தாய் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

வலுவிழந்த பெண், யாழ் முஸ்லீம் சமூகம் கண்டனம்


காரைநகரில் வலுவிழந்த யுவதியை முஸ்லிம்கள் இருவர், வன்புணர்வுக்கு உட்படுத்திய செயல் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய பாதகர்கள் எமது கைகளில் சிக்கியிருந்தால் இஸ்லாம் கோட்பாட்டின் படி அவர்களை அடித்தே கொன்றிருப்போம் என யாழ். நகரை அண்டிய பகுதிகளில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சமூக தீமைகளுக்கு எதிரான மக்கள் பிரகடனம்” என்ற தலைப்பில் முஸ்லிம் மக்கள் சம்மேளனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை 200 முஸ்லிம் மக்களின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இத்தகைய சம்பவங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள நல்லுறவுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இத்தகைய சம்பவங்கள் தொடராது இருக்க குற்றச்செயலில் ஈடுபட்ட இருவருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதித்துறை அதிஉச்ச தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து முஸ்லிம் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இருவரின் பாதகச் செயலால் அனைவரும் பாதிப்புறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரும்பு சேகரிப்பதை வாழ்வாதரமாகக் கொண்ட முஸ்லிம்கள் நேற்று பல இடங்களில் தமிழ் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலை தொடருமானால் அந்தக் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ள நேரிடும். இரண்டு முஸ்லிம் நபர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு முஸ்லிம் மக்கள் உதவவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.