ரோபோ தொழில் நுட்பத்தில் உயிர்காக்கும் படகு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எமிலி என பெயரிடப்பட்டுள்ள இவ் ரோபோ படகு தானியக்க முறையில், கடலில் உயிருக்கு போராடுபவரின் அருகில் சென்று அவர்களை மீட்கக்கூடியது.
சிறிய அளவிலான இப் படகை உலங்கு வானூர்திகளில் இருந்தும் கடலினுள் போட்டு, தத்தளிப்பவர்களை மீட்க முடியும்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உயிர் காப்பு பிரிவில் எமிலி பயன்படுத்தப்பட உள்ளது. இப் பிரிவில் கடமையாற்றும் Remy T. Smith என்ற உயர் அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
தற்போது கோடைகாலம் என்பதால் கடற்கரைகளில் சனக்கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும். இதனால் இப் படகின் தேவை வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக