வெள்ளி, 22 ஜூன், 2012
நிலப்பறிப்புக்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு த.தே.மக்கள் முன்னணி அழைப்பு
நிலப்பறிப்பிற்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவுதெரிவித்துள்ளது.தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், படை மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கூகுல்… ஃபேஸ்புக்… இதயெல்லாம் விட இணையத்தில்பெரியவர் யார் தெரியுமா
இணையத்தில் கூகுல், ஃபேஸ்புக், விக்கிபீடியா என்பன முடிசூடா மன்னர்களாக கலக்குகின்றன. ஆனால் இவற்றை விட எல்லாம் பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா…?
அறிமுக நிகழ்ச்சியிலேயே ஸ்ரக் ஆன மைக்றோசொப்ட் டேப்லட்
மைக்ரோசொப்ட் புதிதாக Surface Tablet என்ற பெயரில் டேப்லெட் ஐ அறிமுகப்படுத்தியது. அப்பிளின் ஐ பேட் இக்கு போட்டியாக இருக்கும் என பேசப்பட்டுவந்த நிலையில், அறிமுக நிகழ்விலேவே இவ் டேப்லெட் ஸ்ரக் ஆகியது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏதோ சமாளித்தபடி சரிசெய்ய பார்த்தும் அது சரிவரவில்லை. இறுதியில் வேறு ஒரு Surface Tablet ஐ எடுத்து நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
இந் நிகழ்வு Surface Tablet இன் விற்பனையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசப்படுகிறது.
சீமெந்து மொத்த களஞ்சியசாலைகள் அனைத்தும் சோதனை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சீமெந்து மொத்த களஞ்சியசாலைகளையும் இன்று சோதனைக்குட்படுத்தவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது
14 மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை பரீட்சை
தெரிவு செய்யப்பட்ட 14 மாவட்டங்களில் இன்று பிற்பகல் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
தங்கக்கார் (video)
லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகின் பெறுமதி வாய்ந்த கார் வகைகளில் ஒன்று.
அதன் பெறுமதியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் தங்கத்தால் லம்போர்கினி உருவாக்கப்பட்டுள்ளது.
இக் கார் மியாமியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)