//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

முன்னாள் போராளிகளின் அடையாள அட்டைகளை பறித்து செல்லும் படையினர்


விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பன்னாட்டு தொண்டுநிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை சிறீலங்காப்படையினர் பறித்து செல்வதாக போராளிகளின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு ஐ.ஓ.எம். சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி பறித்துச் செல்வதாக முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
படையினரின் இந்தச் செயற்பாட்டினால் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது
பெற்றோர் அச்சமடைந்துள்ளர்.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தகாலத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் போராளிகள்புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டு பின்னர் சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.இந்நிலையில் முன்னாள் போராளிகளான இவர்கள் புனர்வாழ்வின் பின்னரே விடுவிக் கப்பட்டனர் என்பதைஉறுதிப்படுத்தும் வகையில், ஜ.ஓ.எம் (இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு) அடையாள அட்டைகளை
வழங்கியிருந்தது.
இந்த அடையாள அட்டைகள் முன்னாள் போராளிகளுக்கான பாதுகாப்பை வழங்குவதுடன் சமூகத்துடன் இணைவதை இலகுபடுத்தவும்,உதவும் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.இந்த அடையாள அட்டைகளையே இராணுவத்தினர் பறித்தெடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வடமராட்சியின் பல்வேறு இடங்களில் முன்னாள் போராளிகளின் அடையாள அட்டையினை கிராமசேவகர் ஊடாக வழங்குமாறு படையினனர் அறிவுறுத்தியிருந்தார்கள்.
சில இடங்களில் இராணுவத்தினரே நேரடியாகச் சென்று அடையாள அட்டைகளை பறித்துச் சென்றுள்ளனர்.இந்த அடையாள அட்டைகள் எதற்காக பறிக்கப்படுகின்றன. இதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு எவ்வாறான பாதிப்புஏற்படப்போகின்றது என்பது குறித்து பெற்றோர் உறவினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.இந்த விடயத்தில் பொறுப்புவாய்ந்தவர்கள் தலையிட்டு இது இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் எனவும் முன்னாள்போராளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக