நாட்டில் ஏனைய மாகாணங்களின் சனத்தொகையில் கணிசமான வளர்ச்சி காணப்பட்ட போதிலும் வடமாகாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 1981ஆம் ஆணடு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 7இலட்சத்து 38ஆயிரத்து 788பேர் வாழ்வதாக கணிப்பிடப்பட்டிருந்தது. ஏனைய மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட சனத்தொகை வளர்ச்சியோடு ஒப்பிட்டால் யாழ் மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 12இலட்சம் பேர் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 6இலட்சத்து 17ஆயிரம் பேரே வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சரியாக 50வீதத்தால் சனத்தொகை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தமை, போரில் கொல்லப்பட்டமை, கொழும்பு நீர்கொழும்பு போன்ற தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்தமை, போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போன்ற காரணிகளால் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் பெண்களே அதிகம் பேர் வாழ்கின்றனர். 6இலட்சத்து 17ஆயிரம் பேரில் 3இலட்சத்து 25பேர் பெண்களாவர். 2இலட்சத்து 92ஆயிரம் பேர் மட்டுமே ஆண்களாவர். இலங்கையில் தேசிய ரீதியான சனத்தொகையிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன வீட்டு வசதிகள் மதிப்பீட்டின் பிரகாரம் ஒருகோடியே மூன்று இலட்சத்து 57 ஆயிரம் ஆண்களும் (10357000) ஒரு கோடியே ஐந்து இலட்சத்து 12 ஆயிரம் பெண்களுமாக (10512000) மொத்தம் இரண்டு கோடியே எட்டு இலட்சத்து 69 ஆயிரம் பேர் (20,869000) நாட்டில் வசிப்பதாகத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதென நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கணக்கீட்டின்படி ஆண்களை விட ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பெண்கள் அதிகமாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டிருப்பதாக அமைச்சு சமர்ப்பித்துள்ள புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். இதுவே தேசிய மட்ட புள்ளிவிபரத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது.
நாட்டின் சனத் தொகை மாவட்ட மட்டத்தில் நோக்குகையில்,
மாவட்டம் | ஆண்கள் - | பெண்கள் - | மொத்தம் |
கொழும்பு | 1321000 | 1263000 | 2584000 |
கம்பஹா | 1070000 | 1121000 | 2191000 |
களுத்துறை | 566000 | 578000 | 1144000 |
கண்டி | 706000 | 741000 | 1447000 |
மாத்தளை | 251000 | 253000 | 504000 |
நுவரெலியா | 382000 | 386000 | 768000 |
காலி | 533000 | 563000 | 1096000 |
மாத்தறை | 411000 | 436000 | 847000 |
அம்பாந்தோட்டை | 288000 | 288000 | 576000 |
யாழ்ப்பாணம் | 292000 | 325000 | 617000 |
கிளிநொச்சி | 81000 | 79000 | 160000 |
மன்னார் | 55000 | 50000 | 105000 |
வவுனியா | 86000 | 91000 | 177000 |
முல்லைத்தீவு | 70000 | 74000 | 140000 |
மட்டக்களப்பு | 265000 | 285000 | 550000 |
அம்பாறை | 321000 | 333000 | 654000 |
திருகோணமலை | 189000 | 191000 | 380000 |
குருணாகல் | 781000 | 796000 | 1577000 |
புத்தளம் | 392000 | 397000 | 789000 |
அனுராதபுரம் | 429000 | 411000 | 840000 |
பொலன்னறுவை | 217000 | 198000 | 415000 |
பதுளை | 446000 | 451000 | 897000 |
மொனராகலை | 227000 | 218000 | 445000 |
இரத்தினபுரி | 575000 | 564000 | 1139000 |
கேகாலை | 403000 | 420000 | 823000 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக