//]]>3

வெள்ளி, 22 ஜூன், 2012

சீமெந்து மொத்த களஞ்சியசாலைகள் அனைத்தும் சோதனை


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சீமெந்து மொத்த களஞ்சியசாலைகளையும் இன்று சோதனைக்குட்படுத்தவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது
.

தரமான சீமெந்து சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராயும் வகையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அண்மையில் பொரலஸ்கமுவ மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் கலவை மேற்கொள்ளப்பட்ட சீமெந்து கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக