முகமாலை முன்னரங்கப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய அதியுச்ச சக்திவாய்ந்த கண்ணிவெடிகளையும், சொந்தமாக உருவாக்கியிருந்த சக்திவாய்ந்த ஆயுதங்களையும் இன்று காட்சிப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றது
.
இத்தாவில் தரையிறக்கத்தின் நினைவாக புலிகளின் கவச எதிர்ப்பு படைப் பிரிவினரால் அழிக்கப்பட்ட யுத்த தாங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இடத்திற்கு முன்னால் இராணுவத்தினர் இந்த காட்சிக் கூடத்தை அமைத்திருக்கின்றனர்.

இதில் புலிகளின் சிக்கலான சில கண்ணிவெடி அமைப்பு முறைகள், கண்ணிவெடிகள், மற்றும் அபாயகரமான ஷெல்கள், மற்றும் புலிகள் சொந்தமாக தயாரித்து இராணுவத்தினருக்கு பீதியை ஏற்படுத்தியிருந்த ஷெல்கள் போன்றவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இவற்றை தினசரி பெருமளவான தென்னிலங்கை சுற்றுலாப் பிரயாணிகள் வந்து பார்வையிட்டுச் செல்வதுடன், இவற்றை இராணுவமே பயன்படுத்தியதாக கூறிக்கொண்டு இராணுவம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக