//]]>3

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நூலகத்தின் எல்லாப் பகுதிகளும் முக்கியத்துவமானவை



நூலகத்தின் எல்லாப் பகுதிகளும் முக்கியத்துவமானவை என்பதைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு பகுதிகள் பாதிக்கப்படாத வகையில் இங்கே நடைபெறுகின்ற கருத்தரங்குகள் கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொளில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்த அவர்கள் தெரிவித்தார்  

யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (17.04.2012) மாலை 3.30 மணிக்கு  நூலக உத்தியோகத்தர்களுடன்  நடைபெற்ற நூலக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நூலகத்தின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்காக வடமாகாண ஆளுநர் 10 மில்லியன் ரூபாவை செலவு செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அந்நிதியைக் கொண்டு  எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்று கவனம் செலுத்தப்பட வேண்டும். என்றார் 

என்பதுடன் நூலகத்தின் நலனிற்கும் அதன் வளர்ச்சிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை கூட்டும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார் 

நூலகத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறப் பகுதிகளுக்கு வர்ணம் பூசப்படும் போதும் யாழ்ப்பாணத்தின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமையப் பெறுதல் முக்கியமானது. 

அத்துடன் நூலகத்தின் சகல பகுதிகளின் செயற்பாடுகளும் கணனி மயப்படுத்தப்படுவதுடன் நவீனமயப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் பகுதியின் பயன்பாடுகளை மென்மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டார் 

மேலும் கூறிப்பிட்ட அவர் குடிபோதையிலும் உல்லாசப் பயணமாகவும் நூலகத்திற்கு அநாகரீகம் அற்ற முறையில் வருவோரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் எனவும் அதற்கு பொறுப்புடைய உத்திபேயாகத்தர்களுக்கு அறிவுரை வழங்கினார் 

நிகழ்வு முடிவடைந்ததும் நூலகத்தின்மொட்டை மாடிப் பகுதியை பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் அதனையும் நூலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சீரமைப்பு செய்வது குறித்தும் கலந்தாலோசித்தார் 

இந்த கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநகர ஆணையாளர் சரவணபவ மதத்தலைவர். கல்லூரி அதிபர்கள் பத்திரிகை யாழர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்  

சிட்னியில் இலங்கைத் தமிழ் காதல் பாடல்



முதன் முறையாக ஆஸ்திரேலியா, சிட்னியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியில் உருவான ஓரு இனிமையான “கவிதையேநீ எங்கே”என்ற காதல் பாடல்

தான் உயிராகநேசிக்கும் காதலியை விட்டு பிரிந்து வேறொரு நாட்டில் இருக்கும் காதலனின் தவிப்பைதொனிப்பொருளாக கொண்டமைந்த இந்தப் பாடலின் வரிகளை வினோத் ரெங்கசாமி என்பவர் எழுத, தனக்கென ஒரு தனியிடம்;படைத்து சிட்னியில் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராக தன்னை நிலைநாட்டி திகலும் மயூகணேசன் என்பவர் அருமையாக இசையமைத்திருக்கிறார். 

இந்தப் பாடலை வினோத்ரெங்கசாமி மற்றும் கிருஷா ரெங்கா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கார்த்தி மனோகரன் அவர்கள்பாடலின் காதலி வடிவமேற்று சிறப்பாக தனது பங்கை செய்திருக்கிறார்கள். 

இப் பாடலுக்கு ஒளிவடிவம் விழி பட இயக்குனரும், மண் பட இணை இயக்குனருமான செல்வன் ராஜா என்பவரால் தரபட்டுள்ளது.

அவருக்கு இணையாக சயன் மற்றும் மோகன பிரகாஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

இப்பாடல் புலம் பெயர்தமிழர்களின் மனதை தொட்ட பாடலாக இருக்கும் என்பதில் ஜயம் இல்லை. 

ஆஸ்திரேலியாஇசிட்னியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களின் இக் கண்ணி முயற்ச்சிக்கு எமது பாராட்டுக்கள்.


மிக அசிங்கமான பறவை



பிறந்த உடனே இறக்கைகள் ஏதும் இல்லாமல் வினோதமாக தோற்றமளித்ததால் நெல்சன் என்ற இந்த பறவை தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டது.

ஜேர்மனியில் உள்ள Bergzooவில் நெல்சன் கடந்த மாதம் பிறந்தது. 
பிறந்த உடனேயே இதன் பெற்றோரால் நிராகரிக்கப்பட்டதால் நான்கு வாரங்கள் Incubator-ல் வைத்து பராமரிக்கப்பட்டது.
இருப்பினும் தனக்கு என்றாவது ஒருநாள் இறக்கை முளைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பறவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இசைக்குயில் 2012


இதில் பலபாடசாலைகளில் இருந்து பல ஆசிரியர்களால் பயிற்ருவிக்கப்பட்ட 500 க்கும் அதிகமான மாணவர்கள் பலபிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள்.


வாய்பாட்டில் 4 ம்தரத்தை பூர்திசெய்த தரமான மாணவர்களுக்கு இடையி நடைபெற்ற இசைக்குயில் 2012 என்கின்ற பட்டத்துக்கான போட்டியில் இந்தவருடம் சங்கீதலயம் ஆசிரியர் திரு செகசோதி ஆறுமுகம் ஆசிரியரின் மாணவி செல்வி தகானா செல்வறாஐh சிறப்பாக பாடி பட்டத்தை தனதாக்கி கொண்டார் ..

ஆறு கால்களுடன் பிறந்த குழந்தை



மனிதர்களுக்கு இரண்டு கால்கள் என்பதே வழமை எனினும் சில சந்தர்ப்பங்களில் வேறுபட்ட எண்ணிக்கையான கால்களைக் கொண்ட குழந்தைகள் பிறந்த ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுண்டு.

இவ்வாறு அண்டையில் ஆறு கால்களுடன் குழந்தை ஒன்று பிறந்து உலகத்தையே அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் காராச்சி நகரிலேயே இம்ரான் ஷேய்க் என்ற இக்குழந்தை பிறந்துள்ளது. எனினும் குழந்தை எவ்விதாமன பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக உளள்ளது.

சூரியனின் அபூர்வம் (வீடியோ)


சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த ஒளிக்கற்றைகள் பார்ப்பதற்கு அழகாகவும், ஆச்சரியமூட்டும் வகையிலும் அமைந்துள்ளது.

இதுகுறித்து பெர்னார்டு என்பவர் கூறுகையில், விண்வெளியில் கதிர்வீச்சு என்பது மக்களுக்கும், நுண்ணிய மின்னணு அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

இவ்வாறான பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எங்களது ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.




வினோதமான அரசமரம்


பொதுவாக ஒவ்வொரு தாவரங்களின் விதைகளிலிருந்து அதே தாவரங்களே உற்பத்தியாகும் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே. ஆனால் இங்கு சற்று வினோதமாக தேங்காயில் இருந்து தென்னை முளைப்பதற்கு பதிலாக அரசமரம் முளைத்திருக்கின்றது.


அவ்வாறு அரசமரத்திற்கு தன்னை விட்டுக்கொடுத்த தேங்காவையும், அதில் முளைத்திருக்கும் அரசமரத்தினையும் படத்தில் காணலாம்.

செல்வாக்கு உள்ளவர்களின் டாப்-50 பட்டியலில் ரஜினிகாந்த்



ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் செல்வாக்கும் உயர்மதிப்பும் கொண்ட மிக முக்கியமான மனிதர்களை பட்டியலிடுவது இந்தியா டுடே பத்திரிகையின் வழக்கம்.
 
இந்த ஆண்டும் அப்படியொரு பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார்.





இத்தனைக்கும் கடந்த இரு ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் ஏதும் வெளிவரவில்லை. உடல்நலக் குறைவு, 'ராணா' தள்ளிப்போனது என பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு, ரசிகர்களின் அபிமானம், வரவிருக்கும் 'கோச்சடையான்' மீதான எதிர்ப்பார்ப்பு போன்றவற்றால், அவரே செய்திகளின் நாயகனாகத் திகழ்கிறார்.





இந்தியா டுடே கடந்த வாரம் வெளியிட்டுள்ள அந்த டாப்- 50 பட்டியலில், அன்னா ஹசாரே, ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், யுவ்நாடார், சச்சின் டெண்டுல்கர், அஜீம் பிரேம்ஜி என பல பிரபலங்கள் இடம் பிடித்திருகிறார்கள்.





'தென்னாட்டு சுல்தான்' என்ற தலைப்பில், ரஜினியின் செல்வாக்கு நிலைக்கான எட்டு காரணங்களை இந்தியா டுடே பட்டியல் இட்டு இருக்கிறது. அந்த காரணங்கள் இவைதான்...





61 வயது கொண்ட ரஜினிகாந்த் ஒரு தென்னாட்டு சுல்தான்!


1. சல்மான்கான் போன்ற சூப்பர் ஸ்டாருக்கு பாலிவுட் பட்டம் சூட்ட எண்ணியபோது, அவர்கள் தந்த பெயர் 'ரஜினிகாந்த்'


2. நோயுற்று மே 2011-ம் திகதி சிங்கப்பூர் மருத்துவமனையில் அவர் இருந்தபோது, தமிழகத்தின் இதயத் துடிப்பு நின்றுபோனது போலிருந்தது.


3. 'கோச்சடையான்' எனும் இந்தியாவின் முதலாவது தொழில்நுட்ப மோசன் கேப்சரிங் சினிமாவில் நடிக்கிறார்.


4. இவரது வயது ஏறிக்கொண்டிருக்க, இவரது கதாநாயகிகளின் வயது குறைந்துகொண்டே பேகிறது. கோச்சடையானில் இவரது கதாநாயகி தீபிகா படுகோனின் வயது இருபத்து ஆறுதான்.


5. எந்திரனின் வெற்றி, சூப்பர் ஸ்டாரைப் பற்றிய புதிய ஐபாட் மென்பொருளை அறிமுகப்படுத்த ஆப்பிளுக்கு உணர்த்தியது.


6. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து கோச்சடையானுக்காகப் பாடினார்.


7. ரஜினியின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு அவரது 62-வது பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப்படும்.


8. கோச்சடையானின் தெலுங்கி தியேட்டர் உரிமை ரூ 30 கோடிக்கு விற்பனையானது.


இத்தனை அம்சங்களையும் கொண்ட ஒரு மனிதன் தமிழ்நாட்டில் இருக்கின்றான் என்றால் அது நிச்சயம் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்க முடியும்.


மாரடைப்பிற்கு முதலுதவி கண்டுபிடிப்பு



மாரடைப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, திடீரென்று தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் கஷ்டம் தான்.
அந்நேரத்தில் நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள், திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது, நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமும் போதும், அதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக் கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக் கொண்டே இருக்க உதவும்.
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும், பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

RAZR Maxx புதிய கைப்பேசிகள்



ஏனைய கைபேசி நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறி வரும் கைபேசி நிறுவனமான மோட்ரோலாவானது தனது RAZR Maxx எனும் புதிய கைபேசிகளை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.
எதிர்வரும் மே மாதமளவில் லண்டனில் முதன் முறையாக அறிமுகமாகின்ற இந்த கைபேசிகள் 1.2GHz வேகத்தில் இயங்கும் டுவல்கோர் புரோசசர்களை கொண்டிருக்கின்றன.
மேலும் 1GB RAM, 9 மெகாபிக்சல் கமெரா போன்ற சிறப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. இக்கைபேசியின் தொடுதிரையானது 4.3 அங்குலமாகக் காணப்படுவதுடன் சிறந்த தரமுடையதாகவும் 540 x 960 pixels அளவுடையதாகவும் காணப்படுகின்றன.
இதன் பற்றரியானது தொடர்ச்சியாக 17.6 மணித்தியாலங்கள் அழைப்பை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த முடியும். இதன் பெறுமதி அனைத்து வரிகள் அடங்கலாக 430.80 யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதய நோய்களை தடுக்க புதிய வழி



அடுக்குமாடி குடியிருப்புகளிலோ, பணிபுரியும் அலுவலகங்களிலோ இப்பொழுதெல்லாம் யாருமே மாடிப்படியை உபயோகிப்பதில்லை.
இதற்கு காரணம் அனைத்து இடங்களிலும் லிப்ட் வசதி உள்ளதால் ஒரு மாடி ஏறவே சோம்பேறித்தனப் பட்டுக்கொண்டு லிப்ட் உபயோகிக்கின்றனர் பலரும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
மாடி ஏற படிகளை உபயோகித்தால் உடல்பருமன், இதயநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
ஜிம்மிற்கு சென்று பணம் செலவழித்து உடற்பயிற்சி செய்வதைக்காட்டிலும் மாடிப்படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். மாடிப்படி ஏறும்போது உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றன. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து காணாமல் போகின்றன.
கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் எக்ஸலேட்டர், லிப்ட் போன்றவைகளை உபயோகப்படுத்துவதை விட மாடிப்படிகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
மாடிப்படி ஏறுவதனால் இதயநோய்கள் ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். இதய தசைகள் பலமடைகின்றன. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
வாரத்திற்கு மூன்று முறை அதாவது 30 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்கினாலே போதும். இதயநோய்கள் எதுவும் ஏற்படவாய்ப்பில்லை. உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.
மாடிப்படி ஏறி இறங்கினால் எக்கச்சக்க கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உடல் பருமன் ஏற்படுவதில்லை. மாறாக குண்டு உடல்காரர்கள் மாடிப்படி ஏறி, இறங்கினால் உடல் சிக் என்று ஆகிவிடும்.
வேலைப்பளுவினால் ஜிம், உடற்பயிற்சி என தனியாக நேரத்தை செலவழிக்க இயலாதவர்கள் மாடிப்படி ஏறி இறங்குவதன் மூலம் சிறந்த உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உடல் பிட்டாவதோடு, கான்சன்ட்ரேசன் பவர் அதிகரிக்கிறது. இது பிற உடற்பயிற்சிகளை விட ஆபத்தில்லாத உடற்பயிற்சியாகவும் செயல்படுகிறது.
அதேசமயம் மூட்டுவலி உடையவர்கள், பின்னங்கழுத்து வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சட் செய்யும்போ​து படங்களை போடுவதற்கு



மக்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கும் சமூக வலைத்தளமானது மேலும் பல பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியாக வெவ்வேறு புதிய அம்சங்களை பேஸ்புக்கில் உள்ளடக்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் சட் செய்யும்போது சுவாரஸ்யமான படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக பின்வரும் குறியீடுகளை பயன்படுத்தமுடியும்.
Heart [[379320338758329]] [[379320355424994]] [[379320348758328]] [[379320352091661]] [[379320345424995]] [[379320455424984]]
[[379320448758318]] [[379320452091651]] [[379320445424985]] [[379320442091652]] [[379320525424977]] [[379320518758311]]
[[379320512091645]] [[379320522091644]] [[379320515424978]] [[379320602091636]] [[379320612091635]] [[379320605424969]]
[[379320598758303]] [[379320608758302]] [[379320702091626]] [[379320705424959]] [[379320692091627]] [[379320695424960]]
[[379320698758293]] [[379320778758285]] [[379320775424952]] [[379320788758284]] [[379320785424951]] [[379320782091618]]
[[379320872091609]] [[379320875424942]] [[379320865424943]] [[379320862091610]] [[379320868758276]]
Mr. Bean [[255016264574238]] [[255016271240904]] [[255016277907570]]
[[255016267907571]] [[255016274574237]] [[255016384574226]]
[[255016387907559]] [[255016394574225]] [[255016401240891]]
[[255016391240892]] [[255016464574218]] [[255016454574219]]
[[255016457907552]] [[255016461240885]] [[255016451240886]]
[[255016537907544]] [[255016531240878]] [[255016534574211]]
[[255016541240877]] [[255016527907545]] [[255016634574201]]
Jack Sparrow [[298356520217565]] [[298356516884232]] [[298356506884233]] [[298356510217566]]
[[298356513550899]] [[298356620217555]] [[298356606884223]] [[298356616884222]]
[[298356610217556]] [[298356613550889]] [[298356673550883]] [[298356676884216]]
[[298356666884217]] [[298356680217549]] [[298356670217550]] [[298356740217543]]
[[298356733550877]] [[298356743550876]] [[298356730217544]] [[298356736884210]]
[[298356823550868]] [[298356810217536]] [[298356820217535]] [[298356826884201]]
[[298356813550869]] [[298356906884193]] [[298356896884194]] [[298356900217527]]
[[298356903550860]] [[298356893550861]] [[298356950217522]] [[298356946884189]]
Superman [[299528860107644]] [[299528863440977]] [[299528866774310]] [[299528856774311]]
[[299528870107643]] [[299528950107635]] [[299528943440969]] [[299528946774302]]
[[299528953440968]] [[299528956774301]] [[299529013440962]] [[299529016774295]]
[[299529010107629]] [[299529003440963]] [[299529006774296]] [[299529060107624]]
[[299529063440957]] [[299529066774290]] [[299529070107623]] [[299529073440956]]
[[299529173440946]] [[299529183440945]] [[299529180107612]] [[299529176774279]]
[[299529186774278]] [[299529243440939]] [[299529236774273]] [[299529240107606]]
Emlo [[302117289844540]] [[302117283177874]] [[302117276511208]] [[302117279844541]] [[302117286511207]] [[302117366511199]]
[[302117369844532]] [[302117373177865]] [[302117383177864]] [[302117379844531]] [[302117426511193]] [[302117436511192]]
[[302117429844526]] [[302117423177860]] [[302117433177859]] [[302117523177850]] [[302117529844516]] [[302117526511183]]
[[302117536511182]] [[302117533177849]] [[302117606511175]] [[302117596511176]] [[302117599844509]] [[302117593177843]]
[[302117603177842]] [[302117646511171]] [[302117649844504]] [[302117659844503]] [[302117656511170]] [[302117653177837]]
[[302117706511165]] [[302117703177832]] [[302117699844499]] [[302117709844498]] [[302117696511166]] [[302117749844494]]
Troll Face [[242538225822042]] [[242538222488709]] [[242538232488708]] [[242538219155376]] [[242538229155375]] [[242538339155364]]
[[242538335822031]] [[242538342488697]] [[242538345822030]] [[242538349155363]] [[242538392488692]] [[242538395822025]]
[[242538399155358]] [[242538402488691]] [[242538405822024]] [[242538475822017]] [[242538472488684]] [[242538489155349]]
[[242538492488682]] [[242538485822016]] [[242538562488675]] [[242538565822008]] [[242538569155341]] [[242538575822007]]
[[242538572488674]] [[242538612488670]] [[242538625822002]] [[242538619155336]] [[242538622488669]] [[242538615822003]]
[[242538675821997]] [[242538682488663]] [[242538672488664]] [[242538679155330]] [[242538685821996]] [[242538742488657]]
Mask [[255006724575192]] [[255006727908525]] [[255006737908524]] [[255006734575191]] [[255006731241858]]
[[255006827908515]] [[255006831241848]] [[255006824575182]] [[255006817908516]] [[255006821241849]]
[[255006874575177]] [[255006871241844]] [[255006884575176]] [[255006877908510]] [[255006881241843]]
[[255006934575171]] [[255006931241838]] [[255006941241837]] [[255006944575170]] [[255006937908504]]
[[255007004575164]] [[255007001241831]] [[255006994575165]] [[255006997908498]] [[255006991241832]]
[[255007084575156]] [[255007101241821]] [[255007077908490]] [[255007091241822]] [[255007081241823]]

மிஸ் அழகிப் போட்டி ரத்து



சுவிட்சர்லாந்தில் 2012ம் ஆண்டில் நடைபெறுவதற்காக திட்டமிடப்பட்டிருந்த மிஸ் சுவிட்சர்லாந்து பட்டத்திற்கான அழகிப் போட்டி நிதிப் பற்றாக்குறை காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியின் இயக்குநரான கிறிஸ்டோபர் லோச்செர், ஞாயிறன்று நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வேறு வழி இல்லாததால் நாங்கள் இந்த முடிவெடுத்தோம் என்றார்.
எதிர்வரும் 2013ம் ஆண்டில் இந்த நிதிப் பிரச்னை தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் இந்தப் போட்டியை நடத்தலாம் என்றார்.
கடந்த செப்டம்பரில், இந்தப் போட்டியை நடத்தத் திட்டமிட்டபோது தொலைகாட்சி நேயர்கள் ஆர்வமின்மையால் பொதுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நிலையத்தார் முன்வரவில்லை. பின்பு தனியார் தொலைக்காட்சியான 3+ புதிய வர்த்தகப் பங்குதாரராக இணைந்தது.
இவ்வாறு 2012 அழகிப்போட்டி ரத்து செய்யப்பட்டதால் கடந்த 2011ம் ஆண்டின் அழகியான 20 வயது அலினா புக்ஸ்காச்செர் இன்னும் ஒரு வருடத்திற்கு அழகிக்கான கிரீடத்தை வைத்திருப்பார்.
ஆணழகன் போட்டியும் கடந்த 2011ம் ஆண்டில் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்து பிறகு நடத்த முடியாமல் போய்விட்டது. இதற்கும் அரசு தொலைக்காட்சியின் ஆதரவு கிடைக்கவில்லை.
தற்போது 3+ என்ற தனியார் தொலைகாட்சியுடன் மூன்றாண்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இனி அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் அழகன், அழகி போட்டிகள் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை வீரர் மேத்தியூசிற்கு எச்சரிக்கை



இலங்கை அணியின் பன்முக ஆட்டக்காரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மும்பை அணியில் பந்து வீச வேண்டாம் என்று இலங்கை அணியின் பிரதம தெரிவாளர் அசந்த டி.மெல் எச்சரித்துள்ளார்.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக உடற்தகுதிப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் மேத்யூஸ், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிகளில் பங்கேற்க வில்லை. அதன் பின்னர் நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
இங்கிலாந்து அணி இலங்கைக்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வந்திருந்த போது முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்ற முடியாத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனியே துடுப்பாட்ட வீரராகப் பங்குபற்றியிருந்தார்.
ஆனால் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை அணியில் துடுப்பெடுத்தாடுவதுடன், பந்துவீச்சையும் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக இலங்கை அணியின் பிரதம தெரிவாளர் அசந்த டி. மெல் கூறுகையில், எங்களுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் உரிமை கிடையாது எனவும், வீரர்களைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
மேத்யூஸ் காயமடைந்ததால் தொடர்ந்து பந்து வீசினால் பிரச்சினை ஏற்படும் என தெரிவித்து விட்டோம், ஆனால் அவர் தொடர்ந்து செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்.
கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு எது முக்கியமானது என்பதை அவர்களே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், ஐ.பி.எல். போட்டிகளா அல்லது நாட்டுக்காக விளையாடுவதா என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

தனி ஈழம் அமைப்பது என்ற யோசனைக்கு கருணாநிதி வரவேற்பு



தனி ஈழம் கிடைக்க இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில், 

´தனி ஈழம்´ வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது. 

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என தெரிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் ´தனி ஈழம்´ கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என தன் கேள்வி பதில் அறிக்கையில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்காவில் செயல்படும் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ஒன்று, தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

´தமிழ்ஸ் பார் ஒபாமா´ என்ற அந்த அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க அமைச்சக துணை செயலாளர் ராபர்ட் ஓ பிளாக்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளன

இளம்பெண் வவுனியாவில் சடலமாக மீட்பு



வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள கிணறொன்றில் இருந்து 25 வயதுடைய இளம்பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக  வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தனது உக்கிளாங்குளத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்த மரியா கெனட் பவுசியா என்ற பெண் நேற்று மாலையிலிருந்து காணாமல்போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதி யுத்ததின் போது, இறந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.