ஏனைய கைபேசி நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறி வரும் கைபேசி நிறுவனமான மோட்ரோலாவானது தனது RAZR Maxx எனும் புதிய கைபேசிகளை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.
எதிர்வரும் மே மாதமளவில் லண்டனில் முதன் முறையாக அறிமுகமாகின்ற இந்த கைபேசிகள் 1.2GHz வேகத்தில் இயங்கும் டுவல்கோர் புரோசசர்களை கொண்டிருக்கின்றன.
மேலும் 1GB RAM, 9 மெகாபிக்சல் கமெரா போன்ற சிறப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. இக்கைபேசியின் தொடுதிரையானது 4.3 அங்குலமாகக் காணப்படுவதுடன் சிறந்த தரமுடையதாகவும் 540 x 960 pixels அளவுடையதாகவும் காணப்படுகின்றன.
இதன் பற்றரியானது தொடர்ச்சியாக 17.6 மணித்தியாலங்கள் அழைப்பை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த முடியும். இதன் பெறுமதி அனைத்து வரிகள் அடங்கலாக 430.80 யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக