//]]>3

திங்கள், 4 ஜூன், 2012

105 ஆண்டுகளுக்கு பின் வானில் நாளை அற்புதம்!



சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நாளை (6) வெள்ளிக்கிரகம் நகருகிறது.
இதனால் சூரியனின் மேல் வெள்ளிக்கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்வது தெரியும்.
105 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த காட்சியை சூரிய உதயம் முதல் காலை 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும். பார்த்தாலும் தெரியாது.
சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச் சுவரில் பிடித்தால், சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் வெள்ளி நகருவது தெரியும். இம்முறையின்படி பார்க்கலாம்.
இந்நிகழ்வினால் பூமியில் பாதிப்பு ஏற்படாது. உரியினங்களுக்கும் பாதிப்பில்லை என பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சொந்தச்செலவில் குடிநீர்



தேமுதிக சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் என். ஜாகீர் உசேனை ஆதரித்து திருவப்பூர் பகுதியில் பிரசாரம் செய்தார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.
மக்கள் விரும்பியதால்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், அது தவறு என்பதை இந்த ஓராண்டு கால ஆட்சியில் அதிமுக நிரூபித்துவிட்டது.
புதுக்கோட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது, 5 நாள் 10 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கும் அவலம் நீடிக்கிறது.
தேதிமுக ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைத்து, தண்ணீர் பிரச்னையை அடியோடு தீர்க்கும். சொந்த செலவில் தினமும் லாரிகள் மூலம் குடிநீர் இலவசமாக அளிக்கப்படும்.என்றார் பிரேமலதா.

சினீமா நகைகளுக்கு போட்டியாக ரீவி.தொகுப்பாளிகள்



தற்போது சினிமா நடிகைகளுக்கு நிகராக கவர்ச்சி ஆடைகளில் கலக்க தொடங்கியிருக்கிறார்கள் தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள்.
பொதுவாக நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தேர்வு செய்யும் போது அழகான தோற்றம், உச்சரிப்பு, உடை அலங்காரம் இதை எல்லாம் பார்த்துதான் தேர்வு செய்கின்றனர்.
ஆனால் தற்போது தொழில் போட்டி காரணமாக கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க முனைகிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.
சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் உடைகளை பார்க்கும் போது, சிறுவர்களுடன் இருந்து குறித்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சங்கடப்படும் அளவுக்கு கவர்ச்சி காணப்படுகிறது.
குறிப்பாக பாடல்களை மட்டுமே ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளை எடுத்துக்கொண்டால் டைட் டி சேர்ட், டைட் லெக்கின்ஸ் இதுதான் உடை என்றாகிவிட்டது.
அதை விட கொடுமை, சிறுவர்களுக்கான தொலைக்காட்சியில் தொகுப்பாளினிகளாக வரும் சிறுமிகளுக்கு கூட நாகரீகமற்ற ஆடைகளை அணிவித்து விடுகிறார்கள்.
இப்பொழுது ஷீ தமிழின் சொல்வதெல்லாம் உண்மை, மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், ஜெயா டிவியில் தேன் கிண்ணம் மற்றும் ஒரு சில சமையல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள், போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே புடவை கட்டிக்கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பணிபுரிவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் ஆண் தொகுப்பாளர்கள் ரொம்போ ஸ்மார்ட். நீயா நானா, நடந்தது என்ன? நடத்தும் கோபிநாத், சன் டிவியில் டாப் 10 கூறும் விஜயகுமார், பெரும்பாலான செய்தி வாசிப்பாளர்களும் பங்குனி வெயில் பல்லிளித்தாலும் கோட் போட்டுதான் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

எந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும்


ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடிப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக்காரர்கள் எப்போதுமே காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.
காதலிப்பார்கள், காதலில் ஈடுபாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களையும் குறிப்பிடலாம். ஆனால் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவரை கைபிடிப்பார்களா? என்பதை அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே கணிக்க முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அந்த ஜாதகர், தான் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி, திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போன்ற சம்பவங்கள் ஏற்படும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத் தொடர்ந்து இமையம் போகிறார் அயித்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், அடிக்கடி இமயமலை சென்றுவிடுவார். மனதை அமைதிப்படுத்த ஆன்மீகவே சரியான பாதை என உணர்ந்தவர் ரஜினி.
தற்போது அஜித் உம் ஆன்மீகத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். தற்கால நடிகர்கள் ஓய்வு காலங்களில் பார்ட்டி, சுற்றுலா என கழிக்கும் இந் நேரத்தில் அஜித் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வருகிறார்.
சென்னையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
எனினும் ஆன்மீகத்துக்கு தனது குடும்பத்தினரை வற்புறுத்துவதில்லையாம் தல.
இனி சிம்புவின் ஓய்வு நேர செயற்பாடுகளிலும் மாற்றத்தை காணாக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

குஷ்புவுக்கும் பச்சைகுத்தப்பட்டது


திரை நட்சத்திரங்கள் தற்போது அதிக அளவில் பச்சை குத்தி வருகிறார்கள்.
சினிமாவில் சான்ஸ் கிடைப்பதற்காக ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி நமீதா தனது முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சைக்குத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து குஷ்புவும் பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
தனது நாட்டுப்பற்றை காட்ட நம் தேசிய பறவையான மயிலை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளார். மேலும் அவர் தனது மணிக்கட்டில் தனது மகள்கள் அவந்திகா, அனந்திதா ஆகியோரின் பெயர்களை பச்சைக்குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அர்ஜூன் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த தனது கையில் தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்



யாழ். குடாநாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் பிடிவிறாந்து பிடிக்கபட்ட 34 பேரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களை கடந்த வாரத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளை உள்ளிட்ட பல்வேறுபட்ட 14 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக இன்று (04) யாழ். பொலிஸ் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் அவர்களிடம் இருந்து மீட்க்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
நாவற்குழியில் அண்மையில் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர் என சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் வைத்திய அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
அச்சுவேலியில் அண்மையில் கொலை செய்யப்பட்ட 81 வயது மூதாட்டியின் வீட்டில் கொள்ளைகள் எதுவும் இடம்பெறவில்லையென தெரிவித்த யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாம்பு என்றால் யார் நடுங்குவது


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். இங்கு இவ் இளைஞனின் துணிவை பாருங்கள்

ராணி எலிசபெத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் (video)

 
பிரிட்டிஷ் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் பொருட்டு வைர விழா கொண்டாட்டங்கள் பிரிட்டனில் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. பிரிட்டிஷ் மன்னரான ஆறாம் ஜார்ஜ்ஜுக்கும் அவர் துணைவியார் எலிசபெத்துக்கும் மூத்த பிள்ளையாக… 
1926ஆம் ஆண்டு பிறந்தவர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி. 1952ஆம் ஆண்டு தனது தந்தை காலமான நிலையில் 26 வயதிலேயே நாட்டின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் முடிசூடினார். பிரிட்டனில் பிரதமர் தான் அரசாங்கத்தின் தலைவர் என்றாலும் நாட்டின் தலைவராகவும் தேசத்தின் தலைவராகவும் விளங்க வேண்டிய கடமைகள் அரியணை ஏறுபவருக்கு உண்டு.
பிரிட்டனில் நூற்றாண்டுகள் காலம் பரிணாம வளர்ச்சிக் கண்டுள்ள அரசியல் சாசன கடமைகளையும் பிரதிநிதித்துவப் பொறுப்புகளையும் மகாராணி இரண்டாம் எலிசபெத் நிறைவேற்றிவருகிறார். வைர விழா கொண்டாட்டங்கள் ஜூன் 2ஆம் திகதி தொடங்கி 5ஆம் திகதி வரையில் பிரிட்டனில் பல இடங்களில் கொண்டாடப்படுகின்றன.
கொண்டாட்டங்களின் துவக்கத்தை அறிவிப்பதற்காக இன்று லண்டன் எடின்பரோ கார்டிஃப் பெல்ஃபாஸ்ட் ஆகிய ராஜ்ஜியத் தலைநகரங்களில் 41 தடவை பீரங்கி வேட்டு தீர்க்கும் இராணுவச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது. சனிக்கிழமை லண்டன் அருகேயுள்ள டார்பியில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் மகாராணி குடும்பத்தாரோடு கலந்துகொண்டுள்ளார்.
மகாராணி முன்னிலையில் பிரிட்டனின் முன்னணி ஓபரா இசைப் பாடகி கேதரின் ஜென்கின்ஸ் எ டே ஐவில் நெவர் ஃபர்கெட் என்ற பிரிட்டனின் தேசிய கீதத்தைப் பாடினார். ஞாயிறன்று லண்டனில் ஓடும் தேம்ஸ் நதியில் கடந்த முந்நூற்று ஐம்பது ஆண்டுகளில் இல்லாத ஒரு மாபெரும் படகு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் படகுகள் அணிவகுக்கவுள்ள இந்த ஊர்வலத்தில் மஹாராணியும் ஒரு படகில் பயணிக்கவுள்ளார்.
திங்களன்று முன்னணி இசைக்கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கச்சேரி ஒன்று பங்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இராணுவ அணிவகுப்புடன்கூடிய ஊர்வலத்தில் ராணி பங்கேற்கிறார். வைர விழாக் கொண்டாட்டங்களின் அங்கமாக ஐக்கிய ராஜ்ஜியத்திலும் உலகின் வேறு பல இடங்களிலுமாக 4000 ஜோதிகள் ஏற்றப்படவிருக்கின்றன.
கொண்டாட்டங்களின் நிறைவாக பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. இந்த கொண்டாட்ட காலம் முழுக்கவும் பிரிட்டனில் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்கூடங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. ஏராளமான வீதி விருந்துகளும் பொது நிகழ்ச்சிகளுமாக பிரிட்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.