//]]>3

சனி, 28 ஏப்ரல், 2012

வடமாகாண நிகழ்ச்சித் திட்டத்தின் ஆய்வு



வடமாகாண அமுலாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தில் 2011ம் ஆண்டுக்கான அடைவுகளும், 2012ம் ஆண்டுக்கான திட்டங்களும் தொடர்பான ஆராய்வுக் கூட்டம் இன்றைய தினம் (28) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. 







கிளிநொச்சி பலநோக்குக் கூட்டுறவுச்சபை மண்டபத்தில் மாகாண இணைத் தலைவர்களான பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றன.



(28.0ந,இஅஙஜஙங
இதன்போது வடமாகாண அமைச்சின் கீழ் செயற்படும் பல்வேறு திணைக்களங்களும் 2011ம் ஆண்டினது அடைவுகள் தொடர்பாகவும் 2012ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக எடுத்து விளக்கினர்.



இதில் மாகாணத்தின் விவசாய அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களினது செயற்திட்டங்கள் தொடர்பிலும் கல்வியமைச்சினது செயற்திட்டங்கள் தொடர்பிலும் தத்தமது கருத்துக்களை மக்கள் தரப்பு பிரதிநிதிகள் பிரஸ்தாபித்தனர்.


இதில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) பாராளுமன்ற உறுப்பினர் உனேஷ் பாரூக் மாவட்டங்களின் அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

நியாய அடிப்படையில் தீர்வுகள் காணப்பட வேண்டும்! அமைச்சர்



மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் இனம் காண்பது மட்டுமன்றி அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதிலும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். 






கிளிநொச்சியில் மாவட்டக் கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற வடமாகாண சபையினது 2011ம் ஆண்டுக்கான அடைவுகள் மற்றும் நடப்பாண்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதுமான செயற்றிட்டங்கள் தொடர்பான அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 





வடமாகாணத்தில் 2011ம் ஆண்டில் நிரல்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் நிறைவு செய்யப்பட்ட மற்றும் அமுல்படுத்தப்பட்டுவரும், அமுல்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலாகக் இக்கூட்டம் அமையப்பெறவுள்ளது. 







இன் பிரகாரம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக அவர்களால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்ககைகளை இனங்காண்பது மட்டுமன்றி அவற்றில் முன்னுரிமை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதற்கும் அரச அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனவும் கடந்த காலங்களில் அபிவிருத்தி திட்டங்களில் தவறுகள் இருந்திருக்குமானால் எதிர்காலங்களில் இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கே உரியது என்றும் இதன்போது சுட்டிக் காட்டினார். 







நிகழ்வில் கைத்தெழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உரையாற்றும் போது வடமாகாணத்தின் அபிவிருத்தி செயற்றிட்டங்களில் பெரும்பாலானவை அந்தந்தப் பகுதிகளுக்கான அமைச்சர்களுக்கோ ஆளும் அரச சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ தெரியாமலே திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படுகின்றன. எதிர்காலங்களில் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டதான அபிவிருத்தி திட்டங்களில் மக்களது கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு அதனை நிறைவேற்றுவதிலேயே அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் மக்களுக்கான பணி தொடர்பில அரச திணைக்களங்களைச் சார்ந்தோர் கவனமாகவும் மகிந்த சிந்தனைக்கமைவாகவும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். 



(epdp news whape )

இதனிடையே இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களைக் குழப்புவதற்கும் ஒரு கூட்டம் இருக்குமாக இருந்தால் அவ்விடத்திலும் அரச அதிபர்கள் ஒருபோதும் பங்காளிகளாக இருக்கக் கூடாது என்றும் யுத்தத்தால் அதிக பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

48 இலட்சம் ரூபா செலவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு புதுப்பிப்பு


நேற்று (27) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலை கட்டிட புனரமைப்புக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் என்ரிப் திட்டத்தின் கீழ் 48 இலட்சம் ரூபாவினை ஓதுக்கீடு செய்து அதனை புனரமைத்து திறந்து வைக்கும் நிகழ்வில்

இந்திய மாநிலங்களவையில் சச்சின்:பலருக்கு அதிர்ச்சியாம்



இந்திய மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் பதவியை சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக் கொண்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என முன்னாள் கிரிக்கட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
சச்சினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, சச்சினுக்கு பதவி கொடுக்கப்படுவதை வரவேற்கிறேன்.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென சச்சினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதற்கு சச்சின் ஒப்புதல் தெரிவித்திருப்பது அதைவிட அதிர்ச்சியாக உள்ளது.
ஓய்வுக்குப் பிறகு அவர் பயிற்சியாளராகவோ, தொழிலதிபராகவோ, சமூக சேவைகளிலோ ஈடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.

மந்திரவாதி என கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய பேய் ஓட்டுபவர்



பேய் ஓட்டுவதாக கூறி மனநலம் பாதித்த பெண்ணை தொடர்ச்சியாக பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ரெயின்வால் கிராமத்தை சேர்ந்தவர் ரிஷா (20). இவருக்கு திடீரென மனநலம் பாதித்தது. அவருக்கு பேய் பிடித்திருப்பதாக பெற்றோர் கருதினர். மகேஷ் ஜோஷி என்ற மந்திரவாதி பற்றி சிலர் கூற, ரிஷாவை அவரிடம் அழைத்து சென்றனர். தானே வீட்டுக்கு வந்து பேய் ஓட்டுவதாக மகேஷ் கூறியுள்ளார்.
இதையடுத்து, அடிக்கடி ரிஷாவின் வீட்டுக்குசென்றர் மகேஷ். ரிஷாவை வைத்து தனியாக பூஜை நடத்த வேண்டும் என்று கூறி பெற்றோரை வெளியே அனுப்பி விட்டு அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதுபோல் பலமுறை ரிஷாவை அவர் சீரழித்துள்ளார்.
மாதக்கணக்கில் ஆகியும் ரிஷாவுக்கு உடல்நிலை குணமாகாததால் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிஷா திடீரென மயங்கி விழுந்தார்.
மருத்துவமனையில் பரிசோதித்தில் ரிஷா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மகேஷ் மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில், மயக்க மருந்து கொடுத்து ரிஷாவை மகேஷ் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

உலகின் அழகான முதல் பத்து பெண்கள்



சர்வதேச மக்கள் சஞ்சிகையின் வாக்கெடுப்பின் அடிப்படையில், உலகின் முதல் பத்து அழகான பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசையில் முதலாவது இடத்தை 16 தடவை தேசிய விருது வென்ற நடிகை ஃபியோன்ஸ் நோலெஸ் தட்டிச்சென்றார்.
இதில் பிருத்தானிய இளவரசி கேட் மில்ட்டொன் 10 வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருந்து வந்த 16 நிமிடத்தில் கொள்ளையடித்த அசகாய சூரன்!



சிறைச்சாலை கைதிகளை நல்வழிப்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று.
Marcus Hunt என்ற 22 வயது இளைஞன், களவெடுத்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறைக்காலம் முடிவடைந்த வெளியே வந்து 16 நிமிடங்களில் இன்னுமோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெருவில் சென்றுகொண்டிருந்த சைக்கிளோட்டியிடம் இருந்து 190 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சைக்கிளை கொள்ளையடிக்க முயன்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இவர், விசாரணைகளின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

செக்கட்ரிக்கு முத்தமிட்ட பாடசாலை அதிபர்!



பாடசாலை அதிபர் ஒருவர், தனது செயளாளருக்கு முத்தமிட்ட காட்சி இணையத்தில் பரவி அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா பிராந்தியத்தில், குவார்ட்ஷய்ட் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் அதிபராக பணியாற்றிவரும், திருமணமான நபர், கல்லூரியில் அவருக்கு செயளாலராக பணியாற்றிவரும் பெண் ஒருவருடன் முத்தத்தை பரிமாறிக்கொண்ட காட்சி, அப் பாடசாலை மாணவர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு யூரியூபில் பதிவேற்றப்பட்டது.
இவ் வீடியோ அக் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மைரன்டா என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வடபகுதியில் 704 மில்லியன் ரூபா செலவில் 682 பாடசாலைக் கட்டடங்கள் புனரமைப்பு!



வட மாகாணத்தில் 682 பாடசாலைக் கட்டடங்கள் 704 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் 158 மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. 2010 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 752 பாடசாலைகள் இயங்கு நிலையில் காணப்பட்டன. 259 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. 

தற்போது 937 பாடசாலைகள் இயங்குவதுடன் 101 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரத்து 800 சைக்கிள்கள் மற்றும் 18 மோட்டார் சைக்கிள்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன. 

இது மாத்திரமின்றி 86 ஆயிரத்து 202 பாடசாலை மாணவர்களுக்குரிய தளபாடங்களும், 2 ஆயிரத்து 200 ஆசிரியர்களுக்குரிய தளபாடங்களும் 12 ஆய்வு கூடங்களுக்கான உபகரணங்களும் 362 கணணிகளும் வழங்கப்பட்டுள்ளாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது 

மூன்று அழகிகள் சிதறி ஓடுகிறார்கள்… ஏன்?

ஷாப்பிங் முடித்து வீடு திரும்பும் மூன்று அழகிகள், அதிர்ச்சியடைந்து சிதறி ஓடுகிறார்கள்… ஏன்?
வீடியோவில் நீங்களே பாருங்க…!


யாழில் இளம்பெண்ணை அச்சுறுத்திய நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை



யாழ்ப்பாண வீதியில் சென்ற இளம்பெண்ணை அச்சுறுத்தி அவரின் கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலியை அபகரித்த குற்றத்திற்காக “கச்சான் ரவி” என்பவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச விதித்து தீர்பளித்துள்ளார்
கடந்த 2009.11.14 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் வைத்து வீதியில் சென்ற இளம் பெண் ஒருவரை அச்சுறுத்தி அவரிடமிருந்த 55,000 ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துள்ளார்
இவர் பல குற்றச் செயல்கள் தொடர்பாக யாழ்.சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் சிறையிலிருந்து விடுதலையான கையோடு பெண்ணை அச்சுறுத்தி தங்கச் தங்கிலியை அபகரித்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
யாழ்.பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார்.
பின்னதாக இவர் குற்றவாளி என இனம் காணப்பட்டதை இடுத்து இவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கித் தீர்பளித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கும் விடுமுறை


வெசாக் தினத்தை முன்னிட்டு மே மாதம் 7ஆம் திகதி அரசினால் வழங்கப்பட்டிருக்கும் விடுமுறையை ஆசிரியர்களுக்கும் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசினால் அறிவிக்கப்பட்ட விசேட விடுமுறை தினம் ஆசிரியர்களுக்கும் உரியதாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.