//]]>3

சனி, 28 ஏப்ரல், 2012

நியாய அடிப்படையில் தீர்வுகள் காணப்பட வேண்டும்! அமைச்சர்



மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் இனம் காண்பது மட்டுமன்றி அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதிலும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். 






கிளிநொச்சியில் மாவட்டக் கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற வடமாகாண சபையினது 2011ம் ஆண்டுக்கான அடைவுகள் மற்றும் நடப்பாண்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதுமான செயற்றிட்டங்கள் தொடர்பான அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 





வடமாகாணத்தில் 2011ம் ஆண்டில் நிரல்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் நிறைவு செய்யப்பட்ட மற்றும் அமுல்படுத்தப்பட்டுவரும், அமுல்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலாகக் இக்கூட்டம் அமையப்பெறவுள்ளது. 







இன் பிரகாரம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக அவர்களால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்ககைகளை இனங்காண்பது மட்டுமன்றி அவற்றில் முன்னுரிமை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதற்கும் அரச அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனவும் கடந்த காலங்களில் அபிவிருத்தி திட்டங்களில் தவறுகள் இருந்திருக்குமானால் எதிர்காலங்களில் இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கே உரியது என்றும் இதன்போது சுட்டிக் காட்டினார். 







நிகழ்வில் கைத்தெழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உரையாற்றும் போது வடமாகாணத்தின் அபிவிருத்தி செயற்றிட்டங்களில் பெரும்பாலானவை அந்தந்தப் பகுதிகளுக்கான அமைச்சர்களுக்கோ ஆளும் அரச சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ தெரியாமலே திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படுகின்றன. எதிர்காலங்களில் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டதான அபிவிருத்தி திட்டங்களில் மக்களது கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு அதனை நிறைவேற்றுவதிலேயே அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் மக்களுக்கான பணி தொடர்பில அரச திணைக்களங்களைச் சார்ந்தோர் கவனமாகவும் மகிந்த சிந்தனைக்கமைவாகவும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். 



(epdp news whape )

இதனிடையே இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களைக் குழப்புவதற்கும் ஒரு கூட்டம் இருக்குமாக இருந்தால் அவ்விடத்திலும் அரச அதிபர்கள் ஒருபோதும் பங்காளிகளாக இருக்கக் கூடாது என்றும் யுத்தத்தால் அதிக பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக