வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் உள்ள 29 சிறுமிகள் நேற்று இரவு 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது இல்லத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள காவலாளியை மாற்றவேண்டும், விடுதியின் இரவு மேற்பார்வையாளரை மாற்றவேண்டும், தமக்கான உணவுகள் சிறந்த வகையில் வழங்கப்படுவதில்லை, தமக்கு விளையாடுவதற்கு அனுமதிக்கப்படவதில்லை என தெரிவித்து அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். |
வெள்ளி, 13 ஜூலை, 2012
சிறுவர் இல்லத்தில் உள்ள 29 சிறுமிகள் ஆர்ப்பாட்டம்
யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந்
யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் அடையாளமாக திகழும் கல்வியை போதிக்கும் தமிழர் தாயகத்தின் உயர் கல்விக் கூடமான யாழ் பல்கலைக் கழக்கத்தில் இயக்க சக்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு (11-07-2-12) அன்று நடைபெற்றது. |
ஜனாதிபதி மஹிந்தரை கவுக்க சதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளவர்கள் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடலோரத்தில் உல்லாசம்
இலங்கையின் பிரபல கடலோரங்களில் ஒன்று பெந்தோட்டை கடற்கரை. இது களுத்துறை மாவட்டத்தில் அமையப் பெற்று உள்ளது.
இங்கு கடந்த மாத நடுப்பகுதியில் கடலோர உல்லாச விழா இடம்பெற்றது.
இதன் போது எடுக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.
விடுதலைப் புலிகளின் வீடியோ காட்சி பார்த்தவர்கள் கைது!
மூதூரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியை பார்த்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் போராளிகள் எனவும் தெரிய வருகின்றது. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியைக் கொண்ட 6 நிமிட மெமரி கார்ட்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சந்தேக நபர்கள் இவ்வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தபோது மெமரி கார்ட் கைப்பற்றப்பட்டது. இச்சந்தேக நபர்கள் 50,000 ரூபா பணத்தையும் வைத்திருந்தனர். இவர்கள் மூதூர், பதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்தேக நபர்களிடம் மூதூர் பொலிஸாரின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)