//]]>3

புதன், 4 ஏப்ரல், 2012

4 காக பறந்த வாகனம்







வவுனியா, பறநாட்டினகல் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏ - 9 வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும் வவுனியா பகுதியில் இருந்து சென்ற டிப்பர் ரக வாகனமும் வான் ஒன்றுமாக மூன்று வாகனங்களே விபத்தில் சிக்கின.

இதனால் வானின் சாரதியும் மற்றுமொருவரும் பலத்த காயத்திற்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



(நன்றி தமிழ் மிரர்)

யாழில் தடைப்படும் மின்சாரம்



வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதாலும் கட்டமைப்பு வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகள் செய்யவேண்டியிருப்பதாலும் பின்வரும் பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். பிராந்திய மின்சாரசபை அறிவித்துள்ளது

நேரடியாக அருள் கொடுதடத ஸ்ரீ செல்வவிநாயகர்



கண்டி - கட்டுக்கலை அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலின் பங்குனி உத்தர பஞ்சரத பவனியை முன்னிட்டு இன்று (04) காலை பாற்குட பவனி வீதி உலா பெரும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ஐந்தாவது ஐ.பி.எல் கோலாகல ஆரம்பம்





ஐந்தாவது ஐ.பி.எல் போட்டியின் தொடக்கவிழா சென்னையில் இரவு மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொலிவூட், பொலிவூட் பிரபல நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிரபுதேவா நடனம், பிரியங்கா சொப்ரா நடனம், சல்மான்கான் நடனம், சாருக்கான் நடனம், அமிதாப் பச்சான் கவிதை, ஹரிஹரன் பாடல், பிராவோ நடனம் என ஐபில் தொடக்க விழா பிரமாண்டமாக இருந்தது. 

வெள்ளை வானில் குடும்பத்தர் கடத்தல்



தமிழ்நாடு என பலராலும் அறியப்பட்ட கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவிலுள்ள நவ களனிபுர பகுதியில் இன்று காலை 8 மணியளவில் குடும்பத்தர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். 

பாலகிருஷ்ணன் ஆனந்தன் எனப்படும் 45 வயதுடைய குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று தனது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் ஆனந்தனை இடைமறித்த நான்கு பேர் அடங்கிய வெள்ளை வான் குழுவினர் அவரை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளனர். 

இந்த கடத்தல் சம்பவம் குறித்து சிவில் கண்காணிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சுவாமி விவேகானந்தர் மீண்டும் எழுச்சியுடன்



மட்டக்களப்பின் ஆரையம்பதி – காத்தான்குடி எல்லைப் பகுதியின் பிரதான வீதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இனந்தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்ட சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை மீண்டும் இன்று புதன்கிழமை காலை அதே இடத்தில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

ஆரையம்பதி பிரதேச சபையின் தலைவர் திருமதி கிறிஸ்டினா சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், பிரதீப் மாஸ்ட்டர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.சுபைர், உட்பட பலர் கலந்துகொண்டனர். 

ஆரையம்பதி சிவன் ஆலயத்திலிருந்து சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை ஊர்வலமாக பேண்ட் வாத்தியத்துடன் கொண்டுவரப்பட்டு சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்கப்பட்டது. 

இந்த உருவச்சிலை வைக்கப்பட்டதையடுத்து அரசியல், சமய சமூக பிரமுகர்கள் சுவாமியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஐனவரி மாதம் ஆரையம்பதி பிரதேசத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்பட்டது. 

இது தொடர்பில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமனயில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி





தமன - குடிச்சில் 7 பாடசாலைக்கு அருகில் வெலி தொட்டுபல வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் 70 வயதுடைய இஸ்மாயின் சாவுல் ஹமீட் என்ற நபரே உயிரிழந்துள்ளார். 

18 வயது யுவதியை முதலை கௌவிச் சென்றது



அக்குரஸ்ஸ பகுதியில் நில்வலா கங்கையில் முகம் கழுவச் சென்ற 18 வயது யுவதியை முதலை கௌவிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று காலை 6.20 அளவில் இடம்பெற்றுள்ளது. 


அக்குரஸ்ஸ பிரதேச சபை படகு மூலம் யுவதியை தேடும் பணிகள் இடம்பெற்ற, காலை 9 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.