//]]>3

சனி, 31 மார்ச், 2012

எம் இனத்தின் அழிவு

எம் இனத்தின் அழிவுக்குப் பின்னரே அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஜெனிவாப் பிரகடணம் எடுத்துக் கூறுகிறது.









மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அஞ்சலோ மெத்திவ்ஸ் பெற்றுள்ளார்.

இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளர் அஷந்த டி மெல் உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் குறித்த போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் பந்துவீச மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த போட்டியில் பிரகாசிக்க தவறிய சாமர சில்வா அடுத்த போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சானக்க வெலகெதர கடந்த போட்டியில் உபாதைக்குள்ளாதை அடுத்து அவருக்கு பதிலாக சமிந்த எரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக அ
அஷந்த டி மெல் கூறியுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய் கிழமை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் ஆறாம் இலக்க துடுப்பாட்ட வீரராக அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Pages 381234 »