//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இலங்கையில் கல்வி தேல்வி


எத்தியோப்பியா போன்ற அதிக வறுமை மிக்க நாடுகள் தேசிய உற்பத்தியில் 4 சத வீதத்தை கல்விக்காக ஒதுக்கும் நிலையில் இலங்கை நூற்றுக்கு இரண்டு வீதத்துக்கும் குறைவாக ஒதுக்குகின்றமை மூலம் நாட்டின் நிர்வாகத் தலைவர் கல்வித்துறை குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு தெளிவாகிறது என  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் உப தலைவர் வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரர்  தெரிவித்துள்ளார்.கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்குமாறு சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கை அரசை மகிழ்ச்சிப்படுத்தும் எனவும் அப்படி செய்ததன் பின் அரசாங்கமே முன்னேறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரிவுரையாளர்கள் சங்க போராட்டத்திற்கு களனி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்த பின்னர் அது குறித்து விளக்கம் அளிப்பதற்காக களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே தம்பர அமர தேரர் இதனை குறிப்பிட்டார்.
1940 களில் நாட்டின் கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்பட்டது. வல்பொல ராகுல தேரர் சுதந்திரக் கல்விக்காக கிராமம் கிராமமாகச் சென்று மனுவில் கையெழுத்து பெற்றார். அதுவே சீ.டபிள்யு,டபிய்யு.கன்னங்கரவால் இலவசக் கல்வி சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்பிக்க ஏதுவாக அமைந்தது. அன்றைய நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் இன்று எமது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. இதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஈடுசெய்ய வேண்டும்.
மாணவர்கள் குறித்து ஊர் ஊராகச் சென்று அரசியல்வாதிகள் கதைக்கின்ற போதும் அவர்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்குவதில்லை.
ஒரே தடவையில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குமாறு விரிவுரையாளர்கள் கோரவில்லை. வருடா வருடம் அந்த இலக்கை நோக்கிச் செல்லுமாறு கேட்கிறோம். கடந்த போராட்டத்தின் பின் அதிகாரிகள் அதனைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் இப்போராட்டம் ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம், நான்கு மாதம், ஐந்து மாதம் அல்லது ஆறு மாதம் சம்பளம் இல்லாமல் போகலாம் ஆனாலும் போராட்டத்தை வெற்றி நோக்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளதாக தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »