//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

திடீர் செல்வந்தர்களாக மாறிய பொலிஸ் அதிகாரிகள் மீதுவிசாரணை


நாட்டில் திடீர் செல்வந்தர்களாக மாறிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் திணைக்களத்தில் அதி உயர் பதவிகளை வகித்து வரும் சில அதிகாரிகள் திடீரென செல்வந்தர்களாக மாறியுள்ளனர்.  இவ்வாறு குறுகிய காலத்தில் அதிகளவு வருமானத்தை ஈட்டிய அதிகாரிகள் பற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது.
சில உயர் அதிகாரிகள் சொகுசு குடியிருப்புத் தொகுதிகள், வாகனங்கள்,தோட்டங்கள்,ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றுக்கு உரிமையாளர்ளகாக மாறியுள்ளனர். இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் தலைமையக விசேட விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் ஓய்வு பெற்றுக் கொண்ட சில பொலிஸ் அதிகாரிகள் தங்ளகது வருமானத்திலும் பல மடங்கு சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக