//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இந்திய மருத்துவத்துறையில் தமிழன் சாதனை

இந்தியாவிலேயே அதிக வயது கூடிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் ஒரு இலங்கைத் தமிழர் என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.


இலங்கைத் தமிழரான சரவணபவன் என்பவர் தம்மீதான அவதானிப்பு சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அவருக்கு தற்போது 50 வயதாகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 170 வருட கால வரலாற்றில், 50 வயது மாணவர் ஒருவர் கல்வி பயிலும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இரண்டாம் வகுப்பு பரீட்சையை மாத்திரம் 16 வருடங்களாக எழுதியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மேல் நீதிமன்றத்தில் அவரது வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கடந்த வருடங்களில் அவர் தமது மாணவர் வீசாவை விசாலித்துக் கொண்டே நாட்களை கடத்தியதாக சட்டத்தரணி தெரிவித்தார்.
1984ம் ஆண்டு சென்னை வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக கருத்தப்பட்டு, அவருக்கு 1987ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அவர் குற்றமற்றவர் என 2000ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட போதும், அவர் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அந்த அவதானிப்பை ரத்து செய்யுமாறு கோரியே அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார் எனினும், அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக