//]]>3

ஞாயிறு, 15 ஜூலை, 2012

புலிகளுக்கு இந்தியாவின் தடை நீடிக்கிறது



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசாங்கம்நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்திய மக்களுக்கு தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும்அச்சுறுத்தலாக திகழ்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பிற்கும்இறைமைக்கும் அச்சுறுத்தலாக தொடர்ந்தும் காணப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சுசுட்டிக்காட்டியுள்ளது.
1991ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைசெய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ச்சியாக புலிகளுக்கு எதிரான தடை நீடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தியாவின் தமிழக மாநிலத்தில்பிரிவினைவாதத்தை விதைத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இணைய ஊடகங்களின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானபுலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பு பிரிவினைவாத பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவதாக உள்ளதுறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் பற்றிய தகவல்களை புலனாய்வுப் பிரிவினர்திரட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு தனிநாடு என்ற புலிகளின் கோட்பாடு இந்தியாவின்இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக