யாழ்ப்பாணத்தில் இறந்தவர்களுக்கான இறுதிக்கிரியைகளை நடாத்த இராணுவத்தினரின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்திருந்தார். எனினும், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றதுஎன இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாண மக்களின் அன்றாட வாழ்க்கைவிடயங்களில் இராணுவத்தினர் தலையீடு செய்வதில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரியதெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் மக்களை ஆட்சி செய்யவில்லைஎனவும், அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குஇராணுவம் உதவிகளை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இறந்தவரின்இறுதிக் கிரியைகளை நடாத்த இராணுவத்தின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகசுமந்திரன் அண்மையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக