//]]>3

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

14 வயது சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம்



தண்ணீர் எடுக்கச் சென்றபோது 14 வயது சிறுமியை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று யாழ். தென்மராட்'சி, மிருசுவிலில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது

மிருசுவில் கெற்பொலிப் பகுதியைச் சேர்ந்த சிறுமி கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை மாலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளிக் கிணற்றில் தண்ணீர் எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார்
.
மேற்படி சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக தனியாக வருவதை அவதானித்த அங்கிருந்த நபர் ஒருவர் சிறுமியை தனியாக இழுத்துச் சென்று மறைவிடம் ஒன்றில் வைத்து அச் சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்துவிட்டு மயங்கிய நிலையில் சிறுமியை விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தண்ணீர் எடுப்பதற்குச் சென்ற சிறுமியை நெடுநேரமாகியும் காணவில்லை என்று தேடிச்சென்ற பெற்றோர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த வேளை அங்கு சிறுமி மயக்கமடைந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதனைக் கண்டுள்ளனர்.

அங்கிருந்து சிறுமி மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். ஆயினும் தொடர்ச்சியாக கடுமையான இரத்தப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கிடையில் கிணற்றடியில் ஏற்கனவே நின்றிருந்ததாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடிவரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொடிகாமம் பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் வலைவிரித்து தேடிவருகின்றனர். 

நாடு முழுவதும் பொலிஸ் திடீர் தேடுதல்



நாட்டின் பல பாகங்களிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

இதன்போது பிலியந்தலாவை மடபான பிரதேசத்தில் சட்டவிரோத மது தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

சட்டவிரோத தயாரிப்பு மது போத்தல்கள் 945யும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதோடு அதில் 90 போத்தல் கசிப்பும் அடங்குகின்றது. 

மேலும் பன்னல 40ம் ஏக்கர் பகுதியில் சட்டவிரோத மது தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேகநபர்கள் தயாரிக்கப்பட்ட மதுவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் பதுளை - தெம்மோதர பகுதியில் சட்டவிரோத மது தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஒரு சந்தேகநபரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் சூது விளையாடிய 8 பேர் கைது

வவுனியா - மதவாச்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் சூது விளையாடிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உட்பட 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண் கட்டி வித்தை காட்டும் பொலிஸ்

பொலிஸ் திணைக்களத்தின் புதுவருட கொண்டாட்டங்கள் இன்று (08) பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தலைமையில் பொலிஸ் பார்க் மைதாகத்தில் இடம்பெற்றபோது பொலிஸ் மா அதிபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கண்ணை கட்டுவதை படத்தில் காணலாம். 

34 ஆண்டுகளில் ஒரு கிராமம்






சுன்னாகம் கலைவாணி சனசமூக நிலையத்தின் 34ஆவது ஆண்டு விழாவும், பொதுக்கூட்டமும் (07.04.2012)  வெள்ளிக்கிழமை சனசமூக நிலையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது

இந்தப் பொதுக் கூட்டத்தில்  கிராமத்தின் 400 கிலோ மறீற்றர் நீளமான வீதிப்புனரமைப்பு தொடர்பாகவும், பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது.

இந்தச் சனசமூக நிலையத்துடன் இணைந்து செயற்படும் சிறுவர் கழகத்திற்கு பெற்றோர்கள் சிறுவர்களை அனுப்பாதத்ன் காரணமாக 3 வருடங்களாக இயங்கவில்லை எனவும், பெற்றோர்கள் இனிமேலாவது பிள்ளைகளை சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி அவர்களது ஆளமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சிறுவர் மேம்பாட்டு அதிகாரி ந. சந்திரா தெரிவித்தார்.

J \ 196 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த தையல் வேலை தெரிந்த  பயனாளிகள் அனைவருக்கும் 15ஆயிரம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்கள் மாத் மாதம் தவணை அடிப்படையில்   750 ரூபா  வீதம் செலுத்தும் முறையில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்,

செந்தகாணியுள்ளவருக்கு மலசல கூடவசதியும் , மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ்   நாடு முழுவதும் வழங்கப்படவுள்ள 10 இலச்சம் வீட்டுதோட்ட பயனளிகளுக்கு தானியவிதைகளும் மரகன்றுகள்  வழங்கும் திட்டத்தில் இந்தக்  கிராமத்தில் 50பயனாளிகள் கிராமசேவையாளர் ஊடகவும் , 50 பயனாளிகள் சமூர்த்தி திட்டத்தின் மூலமும் பயன்பெறஉள்ளதாகவும், குறிப்பிட்ட கிராமசேவகர் யஜூஜன்  இதன்முதல்கட்டமாக 5 பயனாளிகளுக்கு  தானியவிதைகளும் மரக்கன்றுகள் வளங்கப்பட்டது.

கிராம சங்கத்தின் தலைவி சுரேஸ்குமார்  சிவாஜினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் நன்நடத்தை அதிகாரி சிவஞானவேல் சிறுவர் மேம்பாட்டு அதிகாரி  சந்திரா சிறுவர் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் நவசீலன், சமூத்திஉத்தியோகத்தர் சிறிஸ்கந்தராஜா ,J/196 கிராம உத்தியோகத்தர் யஜூஜன் என பலர் கலந்து கொண்டனர்

இந்தக் கலைவாணி  சனசமூக நிலையம் 1978.04.08 ஆண்டு உருவாக்கப்பட்டு இந்தப்பிரதேச மக்களின் வளர்ச்சிக்காக சேவையற்றி வருகிறது   விளையாட்டு கழகம் ,  மாலைநேரவகுப்புகள் என்பன நடைபெற்று வருவதுடன்,  இசை, நடன வகுப்புக்களும் இங்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.