//]]>3

திங்கள், 2 ஏப்ரல், 2012

ரஜினி ,கமல் ரசித்து பார்த்தது


தனது விஸ்வரூபம் படத்தின் கடைசிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் கமல் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் செலவு செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஸ்ருதிஹாஸனுக்காக அவர் நடித்த ’3’ படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்திருக்கிறார். 

கமல் படத்தை ரசித்து பார்த்தாராம். படம் பார்த்து முடித்த பின் 3 படக்குழுவையும் படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யாவையும் பாராட்டியிருக்கிறார்.தனுஷ்-ஸ்ருதி இடையேயான கெமிஸ்டிரி அற்புதமாக இருப்பதாக கூறினாராம். 

படத்தின் ஹீரோவான தனுஷை தனியே அழைத்து நன்றாக நடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பே ரஜினி படத்தை பார்த்துவிட்டார். அப்போது ரஜினி தனுஷையும்-ஸ்ருதிஹாஸனையும் பாராட்டினார். அப்படிப்பட்ட ஜோடிப் பொருத்தமா!(படத்தில்) இருவருக்கும்….. 

‘3’ படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே பெருகிக் கொண்டே வருகிறது. “ஊர்ல இப்ப 3-னு ஒரு காய்ச்சல் பரவிடுச்சு. இதுக்கு மருந்து 30-தேதி தான் மார்க்கெட்ல வருதாம்” என்று ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை கலப்பாக சமூக இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ரஜினி-கமல் இணைந்து நடிப்பதை விட மறுபடியும் தனுஷ்-ஸ்ருதி எப்போது இணைவார்கள் என்ற கேள்விகளே அதிகம் பறக்கின்றன.


கரையோர ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளன.


கரையோர ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

கல்கிஸ்ஸ ரயில் தரிப்பிடத்திற்கு அருகில் ரயிலொன்று இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்தமையினால், சில கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

செயலிழந்த ரயில் வேறு என்ஜின் ஒன்றின் ஊடாகவே ரயில்வே பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
 

517,000 சதுர கிலோமீற்றருடைய கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடிக்கலாம்





1976 ஆம் ஆண்டு சமுத்திர வலய சட்டத்தின் மூலம் இலங்கைக்கு உரித்தான 200 கடல் மைல் துரத்தினைக் கொண்ட 517,000 சதுர கிலோமீற்றருடைய கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடலாம் என யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் புதிய உதவிப்பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார். 

அத்துடன், வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தற்போது பாவனையிலுள்ள மீன்பிடிக் கலன்களின் எண்ணிக்கையை 2013ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கென 25 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்குவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், யாழ் மாவட்ட மீனவர்களுக்கு தற்போது தகுதி அடிப்படையில் மானிய அடிப்பையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாகவும், பத்து தொடக்கம் பதினைந்து நாட்களை வரை கடலில் நின்று மீன்பித் தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கு 30,000 ரூபா மானியமும், ஒவ்வொருநாளும் மீன்பிடிக்கச் சென்று தீரும்புபவர்களுக்கு 18,000 ரூபா மானியமும், வெளி இயந்திர தும்புக் கண்ணாடிப் படகு உரிமையாளர்களுக்கு 6,250 ரூபா மானியமும் வழங்கப்படுவதுடன், வெளி இயந்திரப் பாரி படகு உரிமையாளர்களுக்கு 6,250 ரூபா எரிபொருள் மானியமும் வழங்கப்படுவதாகவும் கணேசமூர்த்தி நடராஜா குறிப்பிட்டுள்ளார். 

சூழல் மாசடையாத புதிய ஓட்டோ


சூழல் மாசடைதல் என்பது உலகம் எதிர்நோக்கியிருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை. அதிகரித்து வரும் சனத்தொகை, இதனால் அதிகரித்து செல்கின்ற வாகனங்கள் என பல பிரச்சினைகளுக்கு உலகம் முகம்கொடுத்து வருகிறது. எதிர்பார்க்காதளவு உற்பத்தியாகியிருக்கும் வாகனங்களினால் வெளியிடப்படுகின்ற புகை - சூழலை மாசுபடுத்தி வருகிறது. இதனை எவ்வாறு தடுப்பதென்பது பற்றி விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக்கொண்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்தான் இந்தியாவில் புதுடெல்லியில் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, சூரிய சக்தியில் இயங்கக்கூடிய ஓட்டோ ரிக்ஷாவை கண்டுபிடித்திருக்கிறார்கள். இலங்கை, இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஓட்டோ வண்டிகளினால் வெளியிடப்படுகின்ற புகைகள் சூழலை அதிகளவாக மாசுபடுத்தி வருகின்றன. இப்படியான நிலையில் சூழலை மாசுபடுத்தாத ஓட்டோ வண்டியின் கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

இந்தியாவின் தொழிற்றுறை மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையத்துடன் இணைந்து மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவகம் இந்த அரியவகை ஓட்டோவினை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வடிவத்திற்கு 'சொலெக்ஷோவ்ஸ்' என பெரிட்டிருக்கிறார்கள். முச்சக்கர வண்களை ஆங்கிலத்தில் 'றைஷோ' என அழைப்பார்கள். அதனைப்போலவே சூரிய சக்தியில் இயங்குகின்ற முச்சக்கர வண்டி என்பதால் 'சொலெக்ஷோவ்ஸ்' என பெயரிட்டுள்ளார்கள். 

இக்கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக டெல்லியின் குறிப்பிட்ட சில நகரங்களில் 1000 ஓட்டோக்களை அறிமுகம் செய்யவிருக்கிறார்கள். ஆராய்ச்சியின் இறுதிக்கட்டத்திலிருக்கும் 'சொலெக்ஷோவ்ஸ்' எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து பாவனைக்கு வரவிருக்கிறது.

மணித்தியாலத்திற்கு 25 கிலோமீற்றர் என்ற வேகத்தில் செல்லக்கூடிய இந்த முச்சக்கர வண்டிகள் மூன்று வடிவங்களில் வெளிவரவிருக்கின்றன. இந்திய ரூபாய்களில் 45 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் பெறுமதிகளில் இந்த ஓட்டோக்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. 

ஆரம்ப கட்டமாக சூரிய சக்தியில் இயங்கும் இந்த அரியவகை முச்சக்கர வண்டிகள் 1000இனை டெல்லியின் முக்கிய நகரங்களில் பாவனைக்கு விடவுள்ளனர். குறிப்பாக கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் இதனை பாவனைக்கு விடவுள்ளனர். இந்த ஓட்டோக்களின் தேவை 10 ஆயிரத்தினை இலகுவில் தொடும் என கண்டுபிடிப்பாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

29ஆவது ஆசிய – பசுபிக் பிராந்திய சாரணியத்தின் நூறாவது ஜம்போறி இலங்கையில்

29ஆவது ஆசிய – பசுபிக் பிராந்திய மற்றும் சாரணியத்தின் நூறாவது ஜம்போறி ஆகியவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.