//]]>3

புதன், 18 ஏப்ரல், 2012

வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் பலி

வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் பலி


அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று (19) காலை இடம்பெற்ற வான் விபத்தொன்றில் சிக்கி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தகத்துறை பணிப்பாளர் நூரானியா ஹசன் என்பவர் உயிரிழந்துள்ளார். 

இவ்விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வான் ஒன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் வானில் பயணித்த ஐவரும் லொறியின் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது



நிறைவுற்ற இவ்வருடத்தின் மார்ச் மாதத்துடன் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 260,000 தாண்டியுள்ளது. 


மார்ச் மாதத்தில் மாத்திரம் 91,102 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 



இது கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.3% வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் தொகை அதிகரித்துள்ளதென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது. 

இலங்கையில் நீர்மட்டம் உயர்கிறது




மத்திய மலைநாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலையை அடுத்து மேல்கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க அதன் பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதன்படி மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (17) செவ்வாய்க்கிழமைக் காலை திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப் பணிப்பாளர் ஹெரந்தன ஹேமவர்த்தன தெரிவித்தார். 

வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் கீழ் பகுதிகளில் கொத்மலை ஓயாவை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

சீனா முழுவதையும் அழிக்க புதிய ஆயுதம்



இந்தியா தயாரித்துள்ள 5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது. 

இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால் அது இந்திய படையினருக்கு பெரும் பலமாக அமையும். காரணம், இந்த ஏவுகணையால் சீனா முழுவதையும் நமது ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் ஐந்து நாடுகள்தான் வைத்துள்ளன. அவை -அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை. 

அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும். 

ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து அக்னி V ஏவுகணை இன்று மாலை 7 மணிக்கு சோதனை செய்யப்படுகிறது. 

வெளிநாட்டில் இலங்கைப்பெண் கடத்தி கற்பளிப்பு



இலங்கைப் பெண் ஒருவர் சைப்பிரஸின் தலைநகர் நிக்கோசியாவில் வைத்து பலாத்காரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

நிக்கோசியாவின் சப்ரப் அக்லன்ஜா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் காரில் வந்த ஒருவர் காருக்குள் ஏறுமாறு தன்னை வற்புறுத்தியதாக இலங்கைப் பெண் குறிப்பிட்டுள்ளார். 

அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்து தான் தப்பிக்க முயன்ற வேளை, காரில் வந்த நபர் தன்னை பலாத்காரப்படுத்தி காருக்குள் ஏற்றியதாக கூறியுள்ளார். 

பின்னர் நிக்கோசியாவில் கைவிடப்பட்ட இடமொன்றுக்கு தன்னை அழைத்துச் சென்ற நபர் பாலியல் உறவுகொள்ள அழைத்ததாகவும் அதற்கு தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் இலங்கைப் பெண் சைப்பிரஸ் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். 

பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தன்னை ஒரு ஆளில்லா இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாக இலங்கைப் பெண் தெரிவித்துள்ளார்.

சைப்பிரஸின் அத்தலஸ்ஸா பூங்கா பகுதியில் வைத்து குறித்த இலங்கைப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிமாசோல் எவனியூ பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். 

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைப் பெண்ணின் உடலில் வெட்டுக் காயங்களும் எரி காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

இதேவேளை, பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பயன்படுத்தப்பட்ட காரின், உரிமையாளரை (22 வயது) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மக்கள் மீளக்குடியேறாமைக்கு இந்திய பொறுப்பாம்




இந்திய அனுசரணையுடன் சம்பூரில் அமைக்கப்பட உள்ள அனல் மின்நிலையம் திட்டம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ளனர். 

இவர்கள் இன்னமும் அகதி முகாம்களில் வாழும் நிலையினை சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய அனைததுக்கட்சி பாராளுமன்ற குழு திருகோணமலைக்கு நேரடியாக வந்து பார்வையிட வேண்டும் என திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர் சி.நந்தகுமார் விடுத்துள்ள அறிக்யைில் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டம் சம்பூரில் இந்தியாவின் அனுசரணையுடன் அமைக்கப்பட உள்ள அனல்மின் நிலையம் திட்டத்தினாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு , யுத்தம் ஓய்ந்த நிலையில் தமது பூர்வீக நிலங்களில் மீளக்குடியேற முடியாதுள்ளனர் மூதூர் கிழக்கு வாழ் தமிழ் மக்கள். 

மூதூர் கிழக்கில் 1486 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பல வருடங்களாக அகதி முகாம்களில் சொல்லொணா துன்பங்களுடன் வாழ்கின்ற நிலைமையையும், இவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த வளமிக்க பூமி அனல்மின் நிலையம் என்ற போர்வையில் பறிக்கப்பட்டிருப்பதை நேரடியாக பார்வையிட்டு அம் மக்களின் சோகங்களிற்கு முடிவுகட்ட சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சி குழு திருகோணமலைக்கு நேரடியாக வருகை தந்து பார்வையிடல் வேண்டும். 

இன்றும் இந்த மக்கள் தமத சொந்த நிலங்களில் மீளக்குடியேற முடியாமைக்கு இந்திய அரசும் ஒருவகையில் பொறுப்பு என்ற வகையில் இம் மக்களையும், இம் மக்கள் பிரதிநிதிகளையும் நேரடியாக சந்தித்து பதில் கூறவேண்டிய கடமைப்பாடு இந்திய அனைததுக் கட்சி குழுவிற்கு உரியது ஆகும். 

மேலும் இம் மக்களின் பிரச்சினையை தமிழ் மக்கள் மீது உண்மையான அனுதாபமும் அக்கறையும், கொண்ட தூதுக்குழுவினரைச் சந்திக்கும் அனைத்து கடசிகளும் இந்திய அனைத்து கட்சி குழுவினரை சந்திக்கும் போது இவ்விடயத்தை வலியுறுத்துமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றிப்பார்த்த பெரிய வெளிநாட்டு குழு புயலாய் வந்தது யாழிற்கு

இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற குழு யாழிலும் இன்று (18.04.2021) இந்திய பாராளுமன்ற குழுவினர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தினை மேற்கொண்டனர். இக்குழு யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தை, ஹெலிகொப்டரில் சென்றடைந்தனர். இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் மானகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் இந்திய பாராளுமன்றக் குழுவினரை வரவேற்றனர். 

யாழ்.விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்றக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் ஒருநாள் தங்கியிருந்து அரசியல் கட்சிகளையும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவுள்ளனர். 






 இந்திய குழு மெனிக்பாம் அகதிகள் முகாமில்!





இந். பாராளுமன்றம் இல. பாராளுமன்றில்இ.தொ.கா இந்திய குழுவுடன் சந்திப்பு