//]]>3

செவ்வாய், 22 மே, 2012

12 ம் வகுப்புத்தேர்வில் பேரறிவாளன், முருகனுக்கு அதிக புள்ளிகள்


ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் – பேரறிவாளன், முருகன் ஆகியோர் 12வது வகுப்புத் தேர்வில் அதிக புள்ளிகள் எடுத்துள்ளனர்.
பேரறிவாளன், முருகன் ஆகியோர் சிறையில் இருந்து படித்தே 12வகுப்புத் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் பேரறிவாளன் 1200 இற்கு 1096 புள்ளிகள் பெற்றுள்ளார்.
12வகுப்புத் தேர்வு எழுதிய மற்றொருவரான முருகன் 983 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள இவர்கள் இருவரும், கடும் மன உளைச்சலுக்கு மத்தியில் அதிகபுள்ளிகளுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரையும வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவது குறிதது ஆலோசனை


கொழும்பு மகசீன் சிறைச்சாலை, கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலை, அனுராதபுரம், களுத்துறை, வவுனியா, கண்டி உள்ளிட்ட நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள 800க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 இவர்களில் பலநூறுபேர் எந்தவித விசாரணையும் இல்லாமல் ஐந்து, பத்து, பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இன்னமும் சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் போயுமுள்ளர்.
 இது தொடர்பாக நாம் பல்வேறுமுறைகள் பாராளுமன்றத்தினூடாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம். அரசியல் கைதிகள் பலமுறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்த விடயத்தில் அரசு சார்பாக அமைச்சர்கள் உறுதிமொழி வழங்கியும்கூட இதுவரை எதுவுமே நடக்கவில்லை.
 தமிழ் அரசியல் கைதிகள் பலர் அங்கவீனமுற்றவர்களாகவும், பலபெண்கள் திருமணம் முடித்து குழந்தை உள்ளவர்களாகவும் சிறைகளில் வாடுகின்றனர். பல இளைஞர்கள் குடும்பப்பொறுப்பைச் சுமப்பவர்களாக உள்ளனர்.
 இவர்களை எந்தவித விசாரணையும் இன்றி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பதனால் அவர்களது முழு வாழ்க்கையுமே அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தக் கைதிகளின் விடுதலைபற்றி இலங்கை அரசு சிந்திக்காமல் இருப்பதானது வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியதாகும்.
 தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஆதரித்து நிற்கின்றது.
 அவர்களுக்கு எமது ஆதரவினைத் தெரிவிக்கும் பொருட்டும், அவர்களது கோரிக்கைகளுக்குச் சர்வதேச ஆதரவினைத் திரட்டும்பொருட்டும், இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உடனடித் தீர்வை எட்டும்பொருட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதியன்று காலை 7மணியளவில் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் நிகழ்த்துகின்றது.
 இந்தப் போராட்டத்தில் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அனைத்து உள்ளூராட்சிசபை தலைவர்கள், உறுப்பினர்களையும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் பெற்றோர், அவர்களின் உறவினர்களையும், காணாமல் போனவர்களின் பெற்றோர், அவர்களின் உறவினர்களையும், தடுப்பிலுள்ளவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும் சகல அரசியல் கட்சிகளையும், அனைத்துப் பொது அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்திக் கொடுக்கும்படி வேண்டுகின்றோம்.

தன் சாவை தானே பார்த்த சிங்கம்



காட்டு ராஜாவாக கம்பீரமாக கர்ஜிக்க வேண்டிய இவ் ஆண் சிங்கம், உண்ண முடியாது சாவை எதிர்நோக்கிக் கொண்டு உள்ளது.
ஆபிரிக்காவில் சிங்கத்துக்கு வைக்கப்பட்ட பொறியில் இதன் கழுத்து சிக்கிக்கொண்டது. சமூக ஆர்வலர்களால் இச் சிங்கம் காப்பாற்றப்பட்ட போதும், அதன் கழுத்து பகுதி சிதைவடைந்துள்ளதால், அதனால் உண்ண முடியவில்லை.
சீன மருத்துவத்தில் சிங்கத்தின் எலும்பு மதிப்பு பெறுவதால், ஆபிரிக்காவில் சிங்கங்கள் சட்டத்துக்கு விரோதமாக கொல்லப்படுகின்றன.
1 கிலோ கிராம் சிங்க எலும்பு 300 அமெரிக்க டாலர்களுக்கு விலைபோவதால் அப்பாவி சிங்கங்கள் அழிவை நோக்கி செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்மை போலவே ஏனைய ஜீவராசிகளுக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு என்பதை மனித குலம் புரிந்துகொள்ள வேண்டும்…!

Facebook ஐ வெல்லுமா Microsoft?



Facebook, உலகின் முன்னனி சமூக வலையமைப்பு. இதை போன்ற சமூக வலையமைப்பை உலகின் முன்னனி கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்றோசொப்ட் உருவாக்கியுள்ளது.
கூகுல் + போன்று நேரடியாக ஃபேஸ்புக்குக்கு போட்டியாக குதிக்காது, பேஸ்புக் உறுப்பினர்களை பதிவின்றி உட்புகுத்தும் சாதூரியத்தை கைக்கொண்டிருக்கிறது மைரோசொப்ட்.
அதாவது மைக்றோசொப்ட் இன் SO.SL வலையமைப்பில், பேஸ்புக் பாவனையாளர்கள் நேரடியாக இணைந்து கொள்ளலாம். இதன் மூலம் ஃபேஸ்புக் பாவையாளர்களுக்கு தனது தளத்தை சுலபமாக அறிமுகப்படுத்த எத்தனித்து இருக்கிறது மைக்ரோசாப்ட்.
அத்துடன் விண்டோஸ் லைவ் ஐடி மூலமும் இத் தளத்துக்குள் நுளைந்து கொள்ளலாம். இச் சமூக தளம் மைக்ரோசொப்ட் இன் ஆராட்சி பிரிவால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலப்போக்கில் இச் சமூக தளம் ஃபேஸ்புக்கை வென்று சாதிக்குமா, இல்லை இல்லாமல் போகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வியயை தள்ளி விளுத்திய ஜீவா



அரசியல் பிரச்சினைகளால் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் என இயக்குனர் சீமான் பிஸியாக இருந்ததால் ”பகலவன்” படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு வந்தது.
விஜய் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால் பகலவனில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் ”பகலவனில்” நடிப்பதற்கு ஆர்யா, விஷால், ஜீவா ஆகியோர் சிந்திக்கப்பட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சீமான்…
மத்திய அரசிற்கு எதிராக பேசி நான் சிறைக்கு சென்று விட்டதால் என்னால் ”பகவலன்” படத்தினை குறித்த நேரத்தில் தொடங்க இயலாமல் போனது.
விஜய்யும் அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமாகி விட்டார் என்று சீமான் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து நாயகன் வேடத்திற்கு ஆர்யா, விஷால் மற்றும் ஜீவா உள்ளிட்டவர்களில் ஒருவர் பொருத்தமாக இருப்பார்.
ஜீவா அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இளைய தளபதிக்கு என்று எழுதப்பட்ட கதையில் ஜீவா பிரகாசிப்பாரா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்…!