//]]>3

புதன், 4 ஏப்ரல், 2012

சுவாமி விவேகானந்தர் மீண்டும் எழுச்சியுடன்



மட்டக்களப்பின் ஆரையம்பதி – காத்தான்குடி எல்லைப் பகுதியின் பிரதான வீதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இனந்தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்ட சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை மீண்டும் இன்று புதன்கிழமை காலை அதே இடத்தில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

ஆரையம்பதி பிரதேச சபையின் தலைவர் திருமதி கிறிஸ்டினா சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், பிரதீப் மாஸ்ட்டர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.சுபைர், உட்பட பலர் கலந்துகொண்டனர். 

ஆரையம்பதி சிவன் ஆலயத்திலிருந்து சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை ஊர்வலமாக பேண்ட் வாத்தியத்துடன் கொண்டுவரப்பட்டு சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்கப்பட்டது. 

இந்த உருவச்சிலை வைக்கப்பட்டதையடுத்து அரசியல், சமய சமூக பிரமுகர்கள் சுவாமியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஐனவரி மாதம் ஆரையம்பதி பிரதேசத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்பட்டது. 

இது தொடர்பில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக