//]]>3

வெள்ளி, 30 மார்ச், 2012

முதலிடத்தை இழந்துள்ளார் குமார் சங்ககார


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் இலங்கை அணி வீரர் குமார் சங்ககார முதலிடத்தை இழந்துள்ளார்.

நேற்று நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்க தவறியதை அடுத்து குமார் சங்கக்கார மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக முதலிடத்தில் இருந்த குமார் சங்க்கார இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸ்சில் ஒட்டமெதுவும் பெறாமலும், இரண்டாம் இன்னி்ங்ஸில் 14 ஓட்டங்களுடம் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் மைக்கல் கிளார்க் மற்றும் ஏ.பி.டி வில்லியஸ் ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலுக்கு அமைய இருவரும் தலா 821 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.


இலங்கை அணிவீரர் குமார் சங்கக்கார 813 புள்ளிகளைப் பெற்று, மூன்றாம் இடத்திலுள்ளதுடன், யூனுஸ் கான் நான்காம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாடhத ஜக் கலீஸ் புள்ளிகளை இழந்துள்ளதுடன், இரண்டாம் இடத்தில் தொடர்ந்தும் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

சிவ் நரேன் சந்திரபோல் ஐந்தாம் இடத்தையும் திலான் சமரவீர ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளதுடன், ஹசீம் அம்லா, ஜொனதன் ட்ரொட், ரோஸ் டெய்லர் ஆகியோர் அடுத்த அடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

முதல் பத்து இடங்களுக்குள் எந்தவொரு இந்திய வீரர்களும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக