//]]>3

வெள்ளி, 30 மார்ச், 2012

அதிவேக விமானத்தை எயார்பஸ்



அதிவேக விமானத்தை எயார்பஸ் குழுமம் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ராம் ஜெட் இயந்திரம் இதில் பொருத்தப்படுகின்றன.

ஹோலந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் யூரோப்பியன் ஏரோநாட்டிக் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் கம்பெனி (இஏடிஎஸ்). ஏயார்பஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பு. புதிய தொழில் நுட்பங்கள் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு மாதிரி விமானங்களை உருவாக்கி வருகிறது. 
பிரான்ஸ் 
லைநகர் பரீசில் நடந்துவரும் சர்வதேச விமான கண்காட்சியில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது இ.ஏ.டி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பான மேக் 4 எனப்படும் ஹைப்பர்சொனிக் விமானம்.
ஒலியின் வேகம் மணிக்கு 1,236 கி.மீ. இதைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சொனிக் விமானங்கள். ரஷ்யாவின் டுபோலவ் நிறுவனம் டியூ 144 என்ற சூப்பர்சொனிக் விமானத்தை 1968ல் அறிமுகப்படுத்தியது.
1978ஆம் ஆண்டு வரை இது இயக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏயாகிராஃப்ட் கோப்பரேஷன் நிறுவனத்தின்  சூப்பர்சொனிக் விமானம் 1976ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது. அதிக செலவு, அதிக விபத்து வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இதுவும் 2003ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் போக்குவரத்துக்கு சூப்பர்சொனிக் விமானங்கள் தற்போது இயக்கப்படுவது இல்லை.இந்நிலையில், ஒலியைவிட சுமார் 4 மடங்கு அதிகமாக, மணிக்கு 4,800 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சொனிக் விமானத்தை இ.ஏ.டி.எஸ் வடிவமைத்துள்ளது.

சென்னையில் இருந்து சுமார் 1,800 கி.மீ. தூரத்தில் உள்ள டில்லிக்கு இந்த விமானத்தில் 20 நிமிடத்தில் போய்விடலாம். இந்த விமானத்தில் 3 இன்ஜின் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை செல்ல 2 இயந்திரங்களும்  அதன் பிறகு ஹைப்பர்சொனிக் வேகத்தில் பறக்க இன்னொரு ரெம்ஜெட் எனப்படும் இயந்தரமும்  பயன்படுத்தப்படுகிறது.

இது ஏவுகணை, ரொக்கெட்களில் பயன்படுத்தப்படும் இயந்தரம், வழக்கமான விமான ஓடுதளத்தில் இருந்தே இந்த விமானத்தை இயக்க முடியும். எரிபொருளாக ஐதரசன் வாயு, ஒட்சிசன் கலவை
பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிக்காது. ஹைப்பர்சொனிக் விமானத்துக்கான வடிவமைப்பு முடிந்து விட்டது. 100 பயணிகள் செல்வதற்கு ஏற்ப விமானம் கட்டப்படும் என்கின்றனர் இ.ஏ.டி.எஸ் விஞ்ஞானிகள்.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »