கால்டன் சுப்பர் செவன் றகர் போட்டிகளின் இறுதிப் போட்டி (ஜூன் 03) நடைபெறும் தினத்தில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்காக இந்திய பொலிவூட் நடிகர், நடிகைகளை அழைத்துவர 150 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிக்காக பொலிவூட் திரையுலகின் பிரபல நடிகையான பிபாஷா பாசு, சமீரா ரெட்டி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிபாஷாவை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக அவருருக்கு 60 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
அவருடன் 15 பேர் அடங்கிய பரிவாரங்களும் இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 26, 7ஆம் திகதிகளில் கண்டி போகம்பரை விளையாட்டடரங்கில் நடைபெற்ற கால்இறுதிப் போட்டிகளின் போது வட இந்திய திரையுலக நட்சத்திரங்களான விவேக் ஒப்ராய், பிரீதி சின்டா ஆகியோர் அழைத்துவரப்பட்டிருந்தனர். இதற்காக 70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், எழுவர் கொண்ட ரக்பி போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களில் அதிக கொடுப்பனவு வடக்கு றக்பி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுதர்ஷன முதுதன்திரிக்கே வழங்கப்படுகிறது. அவருக்கு நாளொன்றுக்கு 74,000 ரூபா வழங்கப்படுகிறது.
இதனைத்தவிர சஜித் சாரங்க என்ற வீரருக்கு 65,000 ரூபாவும், திலிப் செலவத்திற்கு நாளொன்றுக்கு 59,000 ரூபாவும் வழங்கப்படுகிறது.
இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படுகிற கொடுப்பனவில் 10 மடங்கு அதிகமாக செலுத்தி இந்தப் போட்டிகளுக்கு வெளிநாட்டு வீரர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை வீரர்களுக்கு செலவிடப்படும் நிதியில் பன்மடங்கு நிதி வட இந்திய சினிமா நடிகை, நகர்களுக்கு வழங்கப்படுகிறது.