//]]>3

செவ்வாய், 1 மே, 2012

எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலத்தில் மர்ம நபர்கள் புலிக்கொடியுடன்



யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, இனந்தெரியாத நபர்கள் சிலர், ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்தனர்.
தங்களது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்துக்கொண்டு, 5 மர்ம நபர்கள், மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காட்டியவாறு ஓடிச் சென்றனர்.
குறித்த நபர்கள் எதற்காக இவ்வாறு செய்தனர் என்பதும், அவர்களது நோக்கம் என்ன என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை.

Rare Two Head Snake in India(Video) அபூர்வ நாகம் (வீடியோ)

இரட்டைத் தலை உடைய அபூர்வ நாகம் ஒன்று இந்தியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவரிடம் உள்ளது என வீடியோவுடன் செய்திகள் வெளியாகி உள்ளன.பாம்பாட்டி மகுடி ஊதுகின்றார். இந்நாகம் ஆடுகின்றது.

ஈ.பி.டி.பி.யின் மேதினக்கூட்டம் யாழ் மாநகர சபைத் திடலில்

இவ்வருடத்திற்காக ஈ.பி.டி.பி.யின் மேதினக்கூட்டம் யாழ் மாநகர சபைத் திடலில் நடைபெற்றது  கூட்டத்தில் தற்போது கூடாக வடபகுதி மக்களுடைய உணர்வுகள், அபிலாசைகள் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 










ஜக்கிய கூட்டின் மேதின கொண்டாட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த மேதினப் பேரணியில் ரணிலும் சம்மந்தனும் ஆயிரக்கணக்கான மக்கள் முன் தூக்கிப் பிடித்துக் காட்டும் போது அந்த சந்தோசத்தில் விஜயகலா மகேஸ்வரன் இருவருக்கும் பக்கத்தில் நின்றார்






ஒலிம்பிக் அரங்கில் ஏவுகணை தளங்கள்



தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள உலகின் தலை நகரங்களில் லண்டன் முக்கியமானதாகும். அதிலும் இவ்வருட கோடைகாலத்தில்

லண்டனில் கோலாகலமாகத் தொடங்கவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீவிரவாதிகளின் குறித்த தாக்குதல்கள் வான் வழியாக வந்து நிகழும் வாய்ப்பும் பெரும்பாலும் இருப்பதால் அவற்றைத் தரையிலிருந்தே தடுப்பதற்காக,  அதி வேகமுடைய ஏவுகணைகளையும் அவற்றை இயக்க படை வீரர்களுக்கான தற்காலிக 

நிறுத்தங்களையும், இலண்டனின் ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளைச் சுற்றி அமைந்துள்ள சாதாரணமான மற்றும் மாடி வீடுகளின் கூரையில் அமைக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அரச சார்பற்ற பொதுமக்கள் உட்பட சுமார் 700 மக்களுக்குச் சொந்தமான மாடிவீடுகளில் இத்திட்டத்தை அமுல் படுத்த  பிரித்தானிய அரசு வலுக்கட்டாயமாக அனுமதி கோரியதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இத்திட்டம் பற்றி பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் பிலிப் ஹம்மொன்ட் கூறுகையில் இன்னும் சில தினங்களுக்குள் இந்த ஏவுகணைகள் குறித்த் இடங்களில்  நிறுவப்படும் எனவும் இதற்கு பொதுமக்களின் அனுமதி பெறப்படும் எனவும் மொழிந்தார்.

இன்று மே தினம்


இன்று மே தினம் இதனையிட்டு நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்களும் ஊர்வலங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பிரதான கட்சிகள் கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா மாவட்டங்களில் தமது மே தின நிகழ்வுகளையும் பேரணிகளையும் நடத்தவுள்ளதுடன் இந்நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின வைபவம் இம்முறை 'நாடே முதன்மை' (ரட எகட) என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளதுடன் இன்று காலையிலும் பிற்பகலிலும் பல்வேறு கட்சிகளினதும் மே தின ஊர்வலங்களும், நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மே தினக் கொண்டாட்டங்கள் பேரணிகள் நடைபெறும் சகல பிரதேசங்களினதும் பாதுகாப்பைப் போன்றே வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்து பொலிஸ் பிரிவு இதற்கான சகல ஒழுங்குகளையும் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

மே தின நிகழ்வுகளையொட்டி மேலதிகமாக பத்தாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிரதான கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகப் பகுதிகளுக்கு கூடுதல் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் பாதுகாப்புப் பணிகள் பொலிஸாரின் பூரண கட்டுப்பாட்டிற்குள் இருக்குமெனவும் மே தினக் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் வீதிகள் மூடப்படவுள்ளதாவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாங்கமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும் இணைந்து மே தினக் கொண்டாட்ட நிகழ்வுகளை கொழும்பு நகர சபை முன்றலில் நடத்தவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு நன்மையளிக்கும் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. அரசாங்கத்தின் மே தின ஊர்வலம் முற்பகல் 11 மணியளவில் கொழும்பு பொரளை கெம்பல் பூங்கா மைதானத்திலிருந்து ஆரம்பமாகும். ராஜகிரிய, நாரஹேன்பிட்டி பகுதிகளிலிருந்து தனித்தனி ஊர்வலமாக வரும் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் பேரணிகள் கெம்பல் பூங்காவில் ஒன்றாக இணைந்து அங்கிருந்து பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ள கொழும்பு மாநகர சபை முன்றலை சென்றடையும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பமாகும் ஊர்வலம் யாழ்ப்பாணம் குருநகரை அடைந்ததும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இம்முறை ஐ.தே.க. வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைவதுடன் நவசம சமாஜக் கட்சி, பூமிபுத்ர புதிய சிஹல உறுமய, ருஹுணு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் எதிர்க் கட்சியின் மே தினக் கொண்டாட்டங்களில் இணைகின்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை தமது மே தினக் நிகழ்வுகளை கினிகத்தேனையில் நடத்துகிறது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் இ.தொ.கா. வின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வதுடன் வட்டவளை நகரிலிருந்து கினிகத்தேனை வரை ஊர்வலம் பேரணியாகச் செல்லும். மலையகப் பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது.

ஜே. வி. பி. யின் மே தின நிகழ்வுகள் கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் கொழும்பு பி. ஆர். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் இவர்களின் ஊர்வலம் களுபோவிலையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, மக்கள் இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் மேதினக் கூட்டம் கொழும்பில் நடைபெறுவதுடன், சுகாதார சேவைகள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டமும் கொழும்பு ஹைபார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணி பூண்டு லோயாவில் தமது மேதினக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. கட்சியின் தலைவி திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரவின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் மாபெரும் இன்னிசைக் கச்சேரியொன்றும் இடம்பெறவுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வு நுவரெலியா நகரில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது. நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமாவதுடன் தொழிலாளர் கெளரவிப்பு, இன்னிசைக் கச்சேரிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசிய தொழிலாளர் சங்கம் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் மே தின நிகழ்வுகள் பதுளையில் தனித்தனியே நடைபெறுவதுடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் எதிர்க் கட்சியின் யாழ். மே தின நிகழ்வோடு இணைந்து கொள்ளவுள்ளது. அத்துடன் சப்ரகமுவ தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், அதன் தலைவர் ரூபன் பெருமாள் தலைமையில் இரத்தினபுரியில் கொண்டாடவுள்ளது.