தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள உலகின் தலை நகரங்களில் லண்டன் முக்கியமானதாகும். அதிலும் இவ்வருட கோடைகாலத்தில்
லண்டனில் கோலாகலமாகத் தொடங்கவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீவிரவாதிகளின் குறித்த தாக்குதல்கள் வான் வழியாக வந்து நிகழும் வாய்ப்பும் பெரும்பாலும் இருப்பதால் அவற்றைத் தரையிலிருந்தே தடுப்பதற்காக, அதி வேகமுடைய ஏவுகணைகளையும் அவற்றை இயக்க படை வீரர்களுக்கான தற்காலிக
நிறுத்தங்களையும், இலண்டனின் ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளைச் சுற்றி அமைந்துள்ள சாதாரணமான மற்றும் மாடி வீடுகளின் கூரையில் அமைக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அரச சார்பற்ற பொதுமக்கள் உட்பட சுமார் 700 மக்களுக்குச் சொந்தமான மாடிவீடுகளில் இத்திட்டத்தை அமுல் படுத்த பிரித்தானிய அரசு வலுக்கட்டாயமாக அனுமதி கோரியதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இத்திட்டம் பற்றி பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் பிலிப் ஹம்மொன்ட் கூறுகையில் இன்னும் சில தினங்களுக்குள் இந்த ஏவுகணைகள் குறித்த் இடங்களில் நிறுவப்படும் எனவும் இதற்கு பொதுமக்களின் அனுமதி பெறப்படும் எனவும் மொழிந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக