//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

கைதிகளிடம் அதிநவீன தொலைபேசிகள்


காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை யில் 44 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப் பட்டுள்ளன. நேற்று இரவு இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணைய இணைப்பு வசதிகளுடன் கூடிய அதிநவீன தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தேசிய விளையாட்டு அணிகளில் விடுதலைப் புலிகள்


இலங்கையின் தேசிய விளையாட்டு அணிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் எட்டுப் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகச்செயலாளர் ஹர்ச அபயகோன் தெரிவித்துள்ளார்.

காதலிக்கு குழந்தை- ஏற்க மறுக்கும் காதலன்


கோம்பாவில் 04ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து பாலியல்றீதியான துஸ்பிரயோகம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் நெடுந்தீவு விஜயம்

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் நெடுந்தீவு பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டனர். 

யாழில் சொகுசு புகையிரத நிலையம்

சர்வதேச தரத்துடனான நிலையில் யாழ். புகையிரத நிலையத்தின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓட்டோவில் எருமை! கடத்தல்

முச்சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட எருமை மாட்டினை நேற்று இரவு வீதிப்போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீட்டுள்ளதுடன் குறித்த முச்சக்கர வாகனத்தை கைப்பற்றிய பொலிஸார் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். 

இலங்கையில் மின்சார ரயில் சேவை விரைவில்

இலங்கையில் முதலாவது மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ளும் திட்டம் இறுதிவடிவத்திற்கு வந்துள்ளதாக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக வியாங்கொடையிலிருந்து களுத்துறை வரைக்கும் மின்சார ரயில் சேவையினை ஆரம்பித்து இயக்கவுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்கள திட்டப் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தள்ளார். இதற்காக இரண்டு மின்சார உப நிலையங்களை றாகம மற்றும் பாணந்துறையில் நிர்மாணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையுடன் சொகுசு மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட அஞ்சுதன் குளம் பாலம்‏

யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் அயராத முயற்சி காரணமாக நெல்சிப் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட அஞ்சுதன் குளம் பாலம் கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

நேற்றையதினம் (11) நடைபெற்ற சிறிய வைபவமொன்றில் நீண்ட காலமாக அப்பகுதி மக்களின் பாவனைக்கு உதவாதிருந்த அஞ்சுதன் குளப் பாலம் முதல்வரின் முயற்சியால் திறந்து வைக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

யாழ்.மாநகர சபையின் 2012 ஆம் ஆண்டுக்கான 6ஆவது நிதிக்குழுக் கூட்டம்‏

யாழ்.மாநகர சபையின் 2012 ஆம் ஆண்டுக்கான 6ஆவது நிதிக்குழுக் கூட்டம் யாழ்.மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 
யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (11) இடம்பெற்ற இக்கூட்டத்தில் நிதிக்குழு உறுப்பினர்களும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

யாழ். ஆரியகுளம் சந்தியில் வீதியால் சென்ற பெண் மீது சேஷ்டை! இளைஞன் மீது தாக்குதல்


யாழ். ஆரியகுளம் பகுதியில்  தனியார் கல்லூரி மாணவி ஒருவரின் கையைப் பிடித்து இழுத்த இளைஞன் ஒருவரை யாழ்.பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த   தனியார் கல்லூரி மாணவி  கையைப் பிடித்து இழுத்ததை வீதிப் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவதானித்துள்ளனர்.

யாழில் வெறும் பத்தாயிரம் படையினரே


யாழ். குடாநாட்டில் 5 இலட்சம் பொதுமக்கள் வசித்த வருகின்ற நிலையில், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக தேவைகளுக்காக 10 ஆயிரம் படையினர் மாத்திரமே நிலைகொண்டுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

கிழக்கு தேர்தல் கூட்டமைப்பு தனித்து போட்டி


இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்தார்.அந்த மாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணந்து போட்டியிடும் நோக்கில் கூட்டமைப்பு அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் கிடைக்காத காரணத்தால், இன்றுவரை தனித்து போட்டியிடுவது என்கிற முடிவையே தாங்கள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது: சீனா


சிறிலங்காவின் உள்வி உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியான்கோ தெரிவித்துள்ளார்.நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையை பாதுகாக்கும் முனைப்புக்களுக்கு சீனா தன்னாலான உதவிகளை சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வேறு பெயரில் திருமணம் செய்துகொண்ட தேரர் சிக்கினார்


வேறு பெயரில் திருமணம் செய்துகொண்டமை, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டமை, போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வெல்லவ ஹிரிபிட்டியே தர்மசந்திர பிரிவெனாவிலுள்ள தேரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

A யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி


முதலில் பெயரின் முதல் எழுத்தாக A அமைந்தால் அவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

திருமணத்துக்கு மறுத்த காதலனை போராடி மணந்த கல்லூரி மாணவி


குமரி மாவட்டம் மேல் புறத்தைச் சேர்ந்தவர் அனிதா (வயது 21). கல்லூரி மாணவி. இவரும், அருமனை அருகே உள்ள முக்கூட்டுக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான சாஜனும் (25) காதலித்தனர். திருமண ஆசை காட்டி அனிதாவுடன் ஜாலியாக இருந்த சாஜன் அவரை திருமணம் செய்ய மறுத்தார். இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வலியுறுத்தி சாஜன் வீட்டு முன்பு அனிதா கடந்த 7-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

காந்தி கடிதங்கள் சர்ச்சையில்!


இந்தியாவின் தேசப்பிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது, அவருக்கும் ஜெர்மன் யூதரான, ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிடக்கலைஞருக்கும் இடையே இருந்த நட்பில், பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக , அமெரிக்க எழுத்தாளர், ஜோசப் லெலிவெல்ட் , கடந்த ஆண்டு எழுதிய, “ Great Soul- Mahatma Gandhi and His Struggle with India” என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

செல்போன் பேசினேனா? நானா? அண்ணா பாலத்தில் பஸ் கவிழ்த்த ட்ரைவர்


சில வாரங்களுக்கு முன்னதாக பிராட்வேயில் இருந்து வடபழனி சென்ற 17எம் மாநகர பஸ் அண்ணா மேம்பாலத்தில் போய்க் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
டிரைவர் செல்போனில் பேசியபடி பஸ்சை ஓட்டிச் சென்றதுதான் விபத்து ஏற்பட காரணம் என்பது பயணிகளில் சிலர் குற்றம் சாட்டினர். குறுகிய வளைவில் வேகமாக ஓட்டிச் சென்றதுதான் காரணம் என்று வேறு சிலர் குறை கூறினர்.

மாணவனுக்கு பிரம்படி


சேலத்தில் ஹோலி கிராஸ் என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 2-வரையிலான பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பள்ளிக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

சுற்றுலா விடுதிகளுக்கு பெண்களை விலைக்கு விற்பனை


விபசார தொழிலுக்கென சுற்றுலா விடுதிகளுக்கு பெண்களை விலைக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஆயுர்வேத பெண் வைத்தியரும் விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் இரு பெண்களும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உணவு பாதுகாப்புக் குழு ஜனாதிபதியுடன்


உணவு பாதுகாப்பு குழு நேற்று முந்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடியது.

நடிகைக்காக கொலை முயற்சியில் ஈடுபட்ட நடிகர்


நடிகர் மஞ்சு மனோஜின் அடியாட்கள் தன்னை கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று புகார் கூறியுள்ளார் நடிகர் மகத்.

ஒளவையாரின் ஆன்மீக சிந்தனை


ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது. ஒளவையார் கூறிய ஆன்மீக சிந்தனைகள் வருமாறு…