//]]>3

வியாழன், 12 ஜூலை, 2012

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது: சீனா


சிறிலங்காவின் உள்வி உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியான்கோ தெரிவித்துள்ளார்.நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையை பாதுகாக்கும் முனைப்புக்களுக்கு சீனா தன்னாலான உதவிகளை சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக கலாச்சார ரீதியான பிணைப்புக்கள் நீடித்து வருகின்றது. சர்வதேச அரங்கில் எவ்வாறான நிலமைகள் ஏற்பட்டாலும் சிறிலங்கா அரசுடன் சீனா அரசானது தொடர்ந்தும் நட்புறவைப் பேணி வரும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி 50 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக