சர்வதேச தரத்துடனான நிலையில் யாழ். புகையிரத நிலையத்தின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்தகால ஆயுத வன்முறையின் காரலணமாக முற்றாக சேதமடைந்த வடமாகாணத்தின் முக்கிய ரயில் நிலையமான யாழ்ப்பாண புகையிரத நிலையமானது அனைத்து வசதிகளையுமுடைய ரயில் நிலையமாக நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க கூறியுள்ளார். வாகனத் தரிப்பிடம் பயணிகளுக்கான ஓய்வு அறைகள் வழிகாட்டல் கருமபீடங்கள் கழிவறை வசதிகள் வங்கி சேவை நிலையம் தபாலகம் மற்றும் வர்த்தக நிலையக் கட்டடத் தொகுதி என்பன யாழ் புகையிரத நிலையத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ் ரயில் நிலையத்தை சொகுசு வசதிகளையுடைய ரயில் நிலையமாக மாற்றுவதே ரயில்வே திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் நோக்கம் என விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ரயில் நிலையத்தின் நிர்மணப் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக