//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

பாதுகாப்பற்ற நிலையில் 90,000 சிறார், சிறுமியர்கள்


இலங்கையில் தற்போது தொடர்ச்சியாக சிறார்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன.

பல்வேறு காரணங்களினால் 90,000 சிறார், சிறுமியர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக சிறுவர் நலன்புரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக சிறுவர் நலன்புரி திணைக்கள ஆணையாளர் நாயகம் யமுனா பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
அறியாமையினாலேயே இவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ள சிறுமிகளின் உள வளத்தை மேம்படுத்த பல செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக