//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

விடுதலைப் புலிகளின் வீடியோ காட்சி பார்த்தவர்கள் கைது!



மூதூரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியை பார்த்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் போராளிகள் எனவும் தெரிய வருகின்றது.   அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியைக் கொண்ட 6 நிமிட மெமரி கார்ட்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.   இச்சந்தேக நபர்கள் இவ்வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தபோது மெமரி கார்ட் கைப்பற்றப்பட்டது. இச்சந்தேக நபர்கள் 50,000 ரூபா பணத்தையும் வைத்திருந்தனர்.   இவர்கள் மூதூர், பதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.   இச்சந்தேக நபர்களிடம் மூதூர் பொலிஸாரின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »