//]]>3

வெள்ளி, 13 ஜூலை, 2012

கைத்தொழிற் பேட்டைகள் தொடர்பில் கலந்துரையாடல்


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினது கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழான தொழில் முதலீட்டாளர் சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.


கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கைத்தொழிற்பேட்டையின் கைத்தொழில் முதலீட்டாளர்கள் தாம் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக எடுத்து விளக்கினர்.
குறிப்பாக உட்கட்டுமான அபிவிருத்தி, பராமரிப்பு, வாடகை, பாதுகாப்பு வங்கிகள் ஊடான கடன்வசதிகள் விரிவாக்கல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.

முதலீட்டாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் இயக்குனர் சபை இந்த விடயம் தொடர்பாக ஆராய வேண்டுமென்பதுடன் நிதியமைச்சின் மதிப்பீட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதன் போது நிதியமைச்சின் இயக்குனர் சபை பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயவீர, திருமதி வைதேகி அனுசாந்தன், செல்வி சந்திரிக்கா சேனநாயக்க ஆகியோருடன் பொருளாதார அபிவிருத்தி தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை தலைவர், பொதுமுகாமையாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக