//]]>3

திங்கள், 16 ஏப்ரல், 2012

யாழ் மாநகரம் விரைவில் சுத்தம் செய்யப்படும்



யாழ்.மாநகர சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யாழ். மாநகரின் சுத்தம் சுகாதாரம் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து தனது விமர்சனங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்து வரும் நிலையில் யாழ். மாநகரம் திருப்தி தரக் கூடிய நிலையில் சுத்தமாகக் காணப்படாததன் காரணமாக துப்பரவு செய்யும் பணியை பரீட்சார்த்த முறையில் முதலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தனியார்த்துறை வசம் ஒப்படைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தீர்மானித்துள்ள நிலையில் ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் அமைச்சர் அவர்களை யாழ். அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். 


இக்கலந்துரையாடலின் போது யாழ்.மாநகரின் சுத்தம் 24 மணி நேரமும் பேணப்படல் வேண்டும் என்பதை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் ஒரு மாத அவகாசம் கேட்டுக் கொண்ட ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் இந்த ஒரு மாத காலத்தில் யாழ். மாநகரை சுத்தமாக்கி தொடர்ந்து அதனைப் பேணுவதாக உறுதியளித்துள்ளனர்.


தங்களது சங்க உறுப்பினர்களான பணியாளர்களில் பலர் விடும் தவறுகள் காரணமாகவே இடையூறுகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள் இனி இவற்றைத் தவிர்த்து உரிய முறையில் பணி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக