உலகின் மிகப்பெரிய ஈஸ்டர் முட்டை ஆர்ஜன்டினாவில் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
4 தொன் நிறையும் 27 அடி உயரமும் 16அடி அகலமும் கொண்டதாக இந்த சொக்லேட் முட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
4,000 கிலோகிராம் சொக்லேட்டை பயன்படுத்தி 27 ஊழியர்கள் இணைந்து இரண்டு வார காலத்தில் இந்த ஈஸ்டர் முட்டையை தயாரித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய ஈஸ்டர் முட்டை என இம்முட்டை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பலவகையாலான அச்சு தயாரிக்கப்பட்டு அதன்பின் சொக்லேட் முட்டை தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட 27.3 அடி உயரமான சொக்;லேட் முட்டையின் சாதனையை இம்முட்டை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக